இலங்கை வேலைநிறுதம் : பாதுகாப்பு பலப்படும்

எதிர்வரும் வியாழக்கிழமை ஜூலை 10 ஆம் நாள் இடம்பெறவுள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு நாடலாவிய ரீதியிலும் முக்கியமாக தென்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலகெல்ல, இந்த வேலைநிறுத்தத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டின் முக்கியமான பகுதிகளில் தாக்குதல்களையும், குண்டுவெடிப்புக்களையும் மேற்கொள்ள திட்டங்களை இட்டிருக்கலாம் என அரசாங்கம் சந்தேகப்படுவதால்

மேற்படி வேலைநிறுத்தம் இடம்பெறும் எதிர்வரும் வியாழக்கிழமை பாதுகாப்பினை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரின் உயிர்களைப்பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாக உள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.