இலங்கை விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்.

இலங்கை செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஸ்பாட் வீசா எனப்படும் 30 நாள் வீசா நடைமுறையை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வந்தது. இலங்கை இந்நிலையில் போர்க்குற்றம் தொடர்பாகவும் வடக்கின் பெரும் பங்கு மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருபப்து தொடர்பாகவும் உலகெங்கிலும் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து இலங்கைக்குள் செல்ல முயன்ற சில ஊட்கவியளார்கள்., மனித உரிமை ஆர்வலர்களை திருப்பி அனுப்பியது இலங்கை, இந்தியாவில் இருந்து செல்ல முயன்ற சிலரையும் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியது. இது தொடர்பாக எழும் சர்ச்சைகளை தடுக்கும் விதமாக விமானநிலையத்தில் வீசா வழங்கும் நடமுறையையை இலங்கை மாற்றிக் கொண்டுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு, விமான நிலையத்திலேயே விசா வழக்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கை குடியேற்றத்துறை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் வசதி நிறுத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும் என்றும், சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு மட்டுமே இனி விமான நிலையத்திலேயே விசா வழங்கம் வசதி அளிக்கப்படும்.இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்த வசதி இனி வழங்கப்படமாட்டாது. அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமோ அல்லது இலங்கை குடியேற்றத்துறையிடமோ விண்ணப்பித்து விசா பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே, 30 நாட்களுக்கு விசா வழங்கும் திட்டம், கடந்த 1970ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் புதிய அறிவிப்பால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 thoughts on “இலங்கை விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்.”

  1. அண்ணன் உமாமகேஸ்வரன் மாலைதீவுக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் இன்றூ மக்களாட்சி மலர்ந்திருக்கலாம்.போராட்டத்தின் போக்கையே மாற்றீய தோல்வி அது.மக்கள் விடுதலைக்கழகம் தத்துவார்த்த ரீதியில் சிறப்பான் இயக்கம் அது தெல்லிபபள மண்ணீன் பாரம்பரியமும் கூட ஆனால் தெரிந்தோ தெரியாமலோ மாலைதீவு மண் அள்ளீப் போட்டு விட்டது.

  2. தமிழ்மாறனின் இந்தக் கருத்திற்கும் மேலேயுள்ள செய்திக்கும் என்ன சம்மந்தம்?

Comments are closed.