இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது!

 இன்று(09.02.2010) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கான அறிவுறுத்தல் அரச அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் லூசின் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்றுக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடாத்தப்படும் எனவும் அதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 19 திகதிமுதல் 26ம் திகதிவரை கோரப்படும் எனவும் தெரியவருகின்றது.

One thought on “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது!”

  1. இலங்கையில் சனநாயகமே செத்துக்கிடக்கிறது இங்கே பாராளூமனறம் கலைந்தாலென்ன கூடினால் என்ன?

Comments are closed.