இலங்கை நிலப்பரப்புக்களில் தங்க வளம்???

25.09.2008.

இலங்கை நிலப்பரப்புக்களில் தங்க வளம் காணப்படுகின்றமை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பூகோளவியல் மற்றும் அகழ்வு ஆராய்ச்சித் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி கித்சிறி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கைத்தொழிலில் ஒன்றாகத் தங்கம் அகழ்வை மேற்கொள்ளக் கூடிய அளவிற்கு தங்க வளம் காணப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கையில் காணப்படும் தங்க வளம் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ள அகழ்வாராய்ச்சித் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.