இலங்கை தூதரிடம் இந்திய ம‌த்‌திய அரசு கண்டனம்!

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக டெ‌ல்‌லியில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரை, தே‌சிய பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராய‌ண‌ன் வரவழை‌த்து கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக தமிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியுட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் பிரதமர் மன்மோகன் சிங் பே‌சியதை‌த் தொட‌ர்‌ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து டெ‌ல்‌லி‌யி‌ல் உள்ள இலங்கை தூதரிடம் இந்தியாவின் நிலையை விளக்குமாறு பிரதமர் கூறினார்.

இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து உள்ள இலங்கை துணைத் தூதர் ஜிஜிஏடி பளிதாகனேகோடாவை வரவழைத்து கவலையும், கண்டனமும் தெரிவித்தார் நாராயணன். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கை ராணுவத்தின் நடவடிக்கையில் அப்பாவித் தமிழர்கள் பலியாவது மிகவும் வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்ட நாராயணன், இலங்கையின் வடக்குப் பகுதியில் ராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதால் இந்தியா கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்தார் எ‌ன்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.