இலங்கை செல்ல அனுமதி கிடைக்கவில்லை : ஐ.நா மனித உரிமைக் கழகம்

unஇலங்கைக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்க வில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி ப்ரான்க் லா ரூ கூறுகின்றார்.

இலங்கையில் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் நிலைமை குறித்து கண்டறியும் பொருட்டு விஜயமொன்றை மேற்கொள்ள தொடர்ந்து தான் முயற்சித்து வருதாக ப்ரான்க் லா ரூ தெரிவிக்கிறார்.

தமது வருகையை வரவேற்பதாக இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ள போதிலும் தமக்கான அதிகாரபூர்வ பதில் கடிதத்தை அவர்கள் அனுப்பி வைக்காதிருப்பது குறித்து ஆச்சரியமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.