இலங்கை சிறையில் வதைபடும் தமிழக மீனவர்கள்

இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பரவலாக கருத்து நிலவுகிறது. விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் கரைதிரும்பவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கடலோரக் கிராமத்தில் மீனவர்கள் மத்தியில் அச்சம். நீண்ட கடற்பகுதியைக் கொண்ட குமரி மாவட்டத்தில் 43 கடலோரக் கிராமங்களிலும் இதுபோன்று கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களில் சிக்கியும், விபத்துகளாலும் மீனவர்கள் காணாமல்போவது ஒருபுறம் இருக்க, அண்டை நாடான இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்படுவது மீனவர்கள் மாயமாவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் மீனவர்கள் குறித்து தெரியவந்தால் இந்திய, இலங்கை அரசுகள் தத்தம் தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. ஆனால் ஆழ்கடல் பகுதியில் பிடிபடும் மீனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காமல் அவர்களைப் பிடித்துச் சென்று இலங்கை சிறைகளில் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான மீனவர் வாழ்வுரிமை மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுவிசாரணை மன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலரை அழைத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது இலங்கை சிறையில் அடைபட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் மீனவர்கள் பலர் வெளியிட்ட தகவல்கள், கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அமைப்புகளின் நிர்வாகிகளின் கருத்தை உறுதிசெய்வதாக இருந்தது. இலங்கை சிறைகளில் எவ்வித விசாரணையும் இன்றி,கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கைதிகளாக அடைபட்டுள்ளதாக பொதுவிசாரணை மன்றத்தில் மீனவர்கள் பலர் தெரிவித்தனர். இலங்கை சிறைகளில் விசாரணையின்றி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கைதிகளாக இருக்கிறார்களா என்பதை கண்டறிய இருநாட்டு தூதரகங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை சி. பெர்லின். 2008-ம் ஆண்டிலேயே இந்த பிரச்னை குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலாவிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. உயரதிகாரிகளுக்கு தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அவர் முற்பட்டார். ஆனால் அவரை இடமாற்றம் செய்தபின் தொடர்ந்து வந்த ஆட்சியர்கள் இதில் அக்கறை செலுத்தவில்லை என்றார் பெர்லின். 1987-ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் 88 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காணாமல்போகும் மீனவர்களைத் தேடும் பணி அதிகபட்சம் ஒரு வாரம் வரைநடக்கிறது. அதன்பின் அந்த மீனவர்கள் கதி என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. தான் ஒரு சுமங்கலியா அல்லது விதவையா, தாலியை கழற்ற வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மீனவ கிராமங்களில் பல குடும்ப பெண்கள் வாழ்க்கை கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறது. காணாமல்போகும் மீனவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் செல்லும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் அதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் யோசனைகளை செயல்படுத்த முன்வரவில்லை. இலங்கை சிறைகளில் உண்மையிலேயே மீனவர்கள் விசாரணையில்லாத கைதிகளாக அடைபட்டுள்ளார்களா என்பதை தெளிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இருநாட்டு தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கை.

3 thoughts on “இலங்கை சிறையில் வதைபடும் தமிழக மீனவர்கள்”

  1. //தாலியை கழற்ற வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மீனவ கிராமங்களில் பல குடும்ப பெண்கள் வாழ்க்கை கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறது. காணாமல்போகும் மீனவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் செல்லும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் அதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் யோசனைகளை செயல்படுத்த முன்வரவில்லை. இலங்கை சிறைகளில் உண்மையிலேயே மீனவர்கள் விசாரணையில்லாத கைதிகளாக அடைபட்டுள்ளார்களா என்பதை தெளிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இருநாட்டு தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கை//.

    இந்த வலி, வேதனை, பாவப்பட்ட தமிழகத்து ஏழைமக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மட்டுமே புரியும், ஆளும் வர்க்கத்திற்கு நிலமை தெரிந்தாலும் வலி வேதனை புரியாது, இந்திய மைய அரசை நடவடிக்கை எடுக்கவைக்கவேண்டியது கருணாநிதியின் ராய்ச்சியத்தின் பொறுப்பு, ஈழத்தில் படு மோசமான போர்க்குற்றம்புரிந்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்மேல் சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கிறது, இந்தப்போர்க்குற்றவாளியான ராஜபக்க்ஷவின் கூட்டுக்கொலைகாரராக இந்திய மைய சர்க்கார் இருப்பதால், ஸ்ரீலங்கா அரசை மத்தியரசு இந்திய அரசு எந்த நெருக்கடியும் கோடுக்கப்போவதில்லை,, கருணாநிதி தனது பதவி,,,, மகன் ஸ்ராலினின் துணைமுதல்வர்பதவி,,,,, படிப்பறிவில்லாத அழகிரியின் மத்திய மந்திரிப்பதவி,,,,, துணைவியின் மகள் கனிமொழியின் எம் பி பதவி,,,,,,,பேரன் தயாநிதியின் பதவி,,,,, இளைய மகன் தமிழரசுவின் சினிமாதயாரிப்பு கொம்பனி,,,,,, கலைஞர் ரி.வி.,,,,,, வம்சம் படக்கதாநாயகனாகிவிட்ட தமிழரசுவி மகனான கருணாநிதியின் பேரனின் வளர்ச்சி,,,,,, ஸ்ராலினை மகன் அழகிரியின் மகன் மாரான கருணாவின் பேரன்களின் சினிமாதயாரிப்பு தொழில்,,,,, இவைகளைவிட்டுவிட்டு சல்லிக்காசுக்கு பெறுமதியில்லாத மீனவர்களில் கருணாநிதி கவனம் செலுத்துவாரா,,., அத்துடன் தேர்தல் நேரத்தில் சுழையாக பணத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைகொடுத்து வாங்கி ஜெயிப்பதால், மக்களுக்கு கடமை செய்யவேண்டிய கட்டாயமும் கருணாநிதி அரசுக்கு கிடையாது, எத்தனை மீனவர்கள் செத்தாலும் கருணாநிதி கடிதமெழிதிவிட்டு,, மானாட மயிலாட பார்த்துவிட்டு,,, ,நலாந்தாரத்து கிருத்திகாவின் வளசரவாக்கம் வீட்டுக்கும்,,, சீ.ஐ.டி நகரிலிருக்கும் ராசாத்தி வீட்டிற்கும்,,, மாறி மாறி புஸ்டி மாத்திரையுடன் செமத்தியான செxஸ்விளையாட்டில் மிதக்கிறார், மக்களாவது மண்ணாங்கட்டியாவது,,,

    1. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஸ் சிவா மனசுல சக்தி இயக்கியவர் இயக்க இருப்பதாய் பூச்செண்டு தந்திருக்கிறது சினிமா எக்ஸ்பிரஸ்.இன்னொரு கீரோ கருணாநிதி குடும்பத்தில் இருந்து.

  2. குருசேத்திரத்தில் கிருஸ்ணர் அருச்சுணனுக்கு செய்த கீத உபதேசமாய் இருக்கிறது இங்குள்ள கருத்து.கருத்துக் கந்தசாமியே தங்கள் மேலான கருத்தே பகவானைக் காணச் செய்கிறது.தொடர்ந்தும் வந்து உபதேசித்துக் கொண்டிருங்கள்.

Comments are closed.