இலங்கை சிங்கள மக்களுக்கு : ஜாதிக ஹெல உறுமய

இலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமானதென்பதை புத்திஜீவிகள் மற்றும் ஆய்வாளர்கள் தர்க்க ரீதியா நிரூபித்துள்ளதாக அந்தக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் கூற்றுக்கு எவரும் ஆத்திரமடையத் தேவையில்லை ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களே இலங்கை நாகரீகத்தையும் வரலாற்றையும் உருவாக்கியவர்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய அனைத்து இன மக்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் எனினும் சிங்கள மக்கள் இலங்கையில் தனித்துவம் பெற்ற தேசிய இனம் என்பதனை எவரும் மறுக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் எவ்வாறு மலாய் மக்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதேபோன்றுதான் இலங்கையில் சிங்களவர்களது பூர்வீகமும் என ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.