இலங்கை கிரிக்கெட் அணியில் மோதல்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ராஜபட்சே ஆதரவுடன் களமிரங்கி வென்று பாராளுமன்றட்திற்குச் சென்றவர் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா. ஒரு பக்கம் எம்பியாகவும் இருந்து கொண்டு இன்னொரு பக்கம் இலங்கை கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் கடைசியாக இவர் எந்த போட்டியிலும் சரியாக விளையாட வில்லை என்பதோடு சக வீரர்களிடம் பொறுப்பில்லாமல் பேசியதாகவும் கூறப்படுகிறது. ராஜபட்சே அரசின் சிபாரின் பேரிலேயே கிரிக்கெட் அணியில் இவர் தொடர்ந்து இடம் பிடித்து வருவதாக கூறப்படும் நிலையில் டி.20 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியிலிருந்து இலங்கை தோற்று வெளியேற அனைவரின் கடுப்பும் ஜெயசூர்யா மீது திரும்பியிருக்கிறது. ஒன்றிலோ எம்.பி.ஆக இருங்கள் அல்லது கிரிக்கெட் வீரராக இருங்கள் என்ற குரல்கள் அணிக்குள் ஒலிக்க கிரிக்கெட் அணியின் கேப்டர் குமார் சங்ககாராவுக்கும் ஜெயசூர்யாவுக்குமிடையில் மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2 thoughts on “இலங்கை கிரிக்கெட் அணியில் மோதல்.”

  1. இலங்கை அணியின் தோல்விக்கு ஜயசூரியா ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கை அணியில் பல ஜயசூரியாக்கள் தோன்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கோதபயாவிற்கும் துடுப்பெடுத்தாட விருப்பம் உள்ளதாக அறிகிறோம். வெகு விரைவில் கோதபயா அணித் தலைவராக பசில் விக்கெட்டர் கீப்பராக விளையாட 12வது வீரராக டக்ளஸ் வீரர்களுககு தேநீர் வளங்குவார்

  2. 12 வது வீரராக வருவதற்கு பொட்டம்மான், கருணாம்மான்,கே.பி இடையே பலத்த போட்டிநிலவலாம்.

Comments are closed.