இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.

சுமார் 45 நாட்கள் மீன் பிடித் தடையை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து

நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு வாக்கில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வெறியர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிகளைக் காட்டிமிரட்டியஅவர்கள் மீனவர்களையும் தாக்கினர். இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளை நோக்கி திருப்பி ஓடினர். அப்போதும் விடாமல் இலங்கைக் கடற்படையினர் தனுஷ்கோடி வரை துரத்தி வந்தனர். இந்த தாக்குதலின்போது 2 படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படை காடையர்கள் பறித்துக் கொண்டனர். வலைகளை சேதப்படுத்தியதோடு படகுகளோடு கடற்படைப் படகுகளை மோத விட்டு இராமேஸ்வரம் மீன்வர்களின் படகுகளை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கருணாநிதி கடிதம் எழுதுவரா? அல்லது எதிர்ப்பே இல்லை என்றால் மௌனம் காப்பாரா? என்றெல்லாம் தெரியவில்லை. இது வரை சுமார் 400 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டும் தமிழகத்தில் திராவிட இயக்கங்களோ, தமிழ் தேசிய அமைப்புகளோ எல்லையோரத்தில் வாழும் இம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.