இலங்கை கடற்படைத் தாக்கி தமிழக மீனவர் கொலை.

எதுவும் நடக்கப் போவதில்லை. அநேகமாக இவர் நானூறாவது மீனவராக இருக்கலாம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் வேர் விட்ட எண்பதுகளில் தொடங்கிய படுகொலை 2009-ல் மே மாதம் போர் முடிந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 400 மீனவர்கள் இதுவரை சிங்களக் கடற்படைகளால் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய, மாநில அரசுகளோ இதுவரை இந்த மீனவர் படுகொலைகளைக் கண்டு கொள்ளவில்லை. பெரியாருக்குப் பின்னர் திராவிட இயக்கம் பார்ப்பனரல்லா முற்பட்ட சாதிகள், பிற்படுத்தபப்ட்ட ஆதிக்க சாதிகளின் அதிகார பீடமாக மாறிப்போன பிறகு இதே அளவில் கொலைகள் இன்னொரு ஆதிக்க சாதியில் விழுந்திருந்தால் இந்நேரம் திராவிட இயக்கங்கள் கொதித்தெழுந்திருப்பார்கள். சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்ட ஓரங்களில் வாழும் மீனவ மக்கள் படுகொலைகளை திராவிட இயக்கம் கண்டு கொள்ளவே இல்லை. கண் துடைப்புக்கு ஒரு அறிக்கை, கோஷங்கள் என்கிற அளவில் மட்டும் நாடகங்களை அரங்கேற்றி விட்டுச் செல்கிறார்கள். இதுதான் தமிழக மீனவர் படுகொலைகளில் திராவிட இயக்கங்களின் அணுகுமுறை. இந்நிலையில் வேதாரண்யம்

அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்றிரவு ஆறுக்காட்டுத்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளில் ஏறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் செல்லப்பன் என்ற மீனவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் நள்ளிரவில் கரை திரும்பினர். செல்லப்பன் இறந்த சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 thoughts on “இலங்கை கடற்படைத் தாக்கி தமிழக மீனவர் கொலை.”

  1. மீனவர் இந்தி ஆளகாக இருந்தால் மாத்திரமே இந்திய அரசு கண் கொண்டு பார்க்கும் ஏனெனில் இந்தி தெரியாத இந்தியன் இந்தியனே இல்லை இந்தியாவில்.உலகெங்கும் இந்திக்காரனுக்கு ஒன்றேன்றால் வரிந்து கட்டும் இந்தியா தமிழ்னனைக் கண் கொண்டும் பார்ப்பதில்லை..தமிழன் என்றால அனுமன் விசுவாச வேலைக்காரன் என இந்தியா அறீந்திருக்கிறது.தமிழன் தனக்காக குரல் கொடுப்பதுமில்லை தனக்காக அனி திரள்வ்துமில்லை.நடிகனைத் தல என்பான் சக தமிழனைத் சாவு கிராக்கி என்ப்துவே தமிழ்ன் குணM.

  2. போபாலில் அமெரிக்கக் கம்பனியால் 26 ஆண்டுகள் முன்பு நஞ்சூட்டிக் கொல்லப்பட்டோர் பச்சைத் தமிழர்களா?
    இந்தியா அவர்கட்காக என்ன செய்தது?
    அவர்களின் கதையும் இந்த இணையத்தளத்தில் வந்தது.

  3. xxx தமிழர்கள் என்பதால்தான் மீனவர்கள் கொல்லப்படுவதாக இச்செய்தியில் எங்கே வந்துள்ளது. இதுவே தமிழகத்தின் ஆதிக்கசாதிகளுக்கு நடந்தால் நடப்பதே வேறு…..போபால் பிரச்சனை என்பது வெள்ளை ஏகாதிபத்தியத்தியன் கூட்டுக்கொலைக்கு சான்று

Comments are closed.