இலங்கை உரிமை மீறல்களுக்கான விசாரணை : அமெரிக்கா ஒத்துழைக்க தயார்

afganobamaஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதேவேளை இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும் என்றும் அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமரிக்க இராஜாங்க திணைக்களத்தின், நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவின் பொதுமக்கள் விவகாரங்களுக்கான பிரிவின் உதவிச்செயலாளர் பிலிப் ஜே க்ரெளலி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், பத்திரிகை மீதான தடைகள் உட்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும.

அத்துடன், முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிலிப் க்ரௌலி குறிப்பிட்டுள்ளார்.