இலங்கை ஆளும் கட்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் கோதாபய ராஜபக்ச?

உள்ளூராட்சித் தேர்தல் சாவடிக்கு அண்மையில் கொலன்னாவையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவர் 16 துப்பாக்கிகளுடன் கைதாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதானவரை விசாரணையின் பின் விடுதலை செய்யுமாறு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச அழுத்தம் வழங்கிவதாகியதாக சில இணையங்கள் பொலீஸ் தரப்பு ஆதரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலன்னாவ பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளுக்கமைய பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர, துமிந்த சில்வா ஆகிய இருவர் மீதும் ஒரே துப்பாக்கியினால் சூடு நடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் ஆதாரம் காட்டி இலங்கை இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.