இலங்கை அரசைக் கண்டித்துப் போராடிய நெடுமாறன், வைகோ ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நேற்று சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழமையாக இம்மாதிரி போராட்டங்களில் கலந்து கொள்கிறவர்களை காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பது வழக்கமாகும் ஆனால் கருணாநிதியின் உத்தரவுப்படியே ஜாமீனில் வெளிவர முடியாத 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I) பிரிவுகளில் கைது செய்யப்பட்டதோடு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சிறையில் அடைத்துள்ளனர். சென்னை புழல் சிறையில் அடைத்தால் விரைவில் வெளிவந்து விடுவார்கள் என்பதாலும் தொடர்புகள் பேணப்படக் கூடாது என்பதாலும் வைகோவை திருச்சி சிறையிலும், நெடுமாறனை கடலூர் சிறையிலும் , ராஜேந்திரனை மதுரை சிறையிலும் தனித் தனியாக அடைத்துள்ளது. ஆனால் இவர்கள் வழக்கு விசாரணைக்காக இந்த ஊர்களில் இருந்தே அழைத்து வரப்படுவார்கள்.தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தீவீர ஈழ ஆதர்வாளர்களை நிரந்தரமாக சிறையில் வைக்க கருணாநிதி அரசு முயர்ச்சித்து வருவது குறிப்பிடத் தக்கது.

2 thoughts on “இலங்கை அரசைக் கண்டித்துப் போராடிய நெடுமாறன், வைகோ ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது.”

  1. தமிழக் மீனவர்களீடம் விழிப்புணர்வை ஏற்ப்டுத்தாமல் தமிழை வைத்து வியாபாரம் செய்ய வெளீக்கிட்டதால் இந்த நிலமை.தமிழ் அரசியல்வாதிகளீடையே சிந்தனையாளன் சரத்குமார்தான் ராதா ரவியின் அறீக்கையை வைத்து அசின் மீதிருந்த கோபத்தை கலைத்தததே நடிகர் சரத் குமாரின் அறீக்கைதான்.

  2. Why these tamil nadu ppl mixing cinema and politics.Your job is to act and develop cinema industry.Thats what ajitha nd rajini told during a function of CM karunanithy.But now why these cinema actors are mixing both of them now?Let the tamil nadu govrvt and central govt to solve this problem in a diplomatic way.You cinema actors please mnd your own business.there was an earlier incident that when tamil nadu fisher men were killed it was blamed that thae sri lankan navy killed them.But later on investigation revelaed that they were killed by the LTTE itself thus to create a problem with the indian and sri lankan govt.This time who knows may be AIDMK sympathisers or Vaikoo group.Who knows???

Comments are closed.