இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் செத்துப் போன போராட்டமாம் -சொல்கிறார் நடிகர் சூர்யா.

தமிழக திரையுலகில் வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்து குடும்பமாகவே திரயுலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தகப்பனார் நடிகர் சிவக்குமார், தம்பி கார்த்தியும் நடிகர் என குடும்பமே ஒரு கலைக்குடும்பம். இவர் இந்தி நடிகர் விவேக் ஓபராயுடன் நடித்துள்ள படம் ரத்தச் சரித்திரா என்னும் பெயரில் தமிழகத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் எதிர்ப்பையும் மீறி இலங்கைப் பட விழாவில் கலந்து கொண்ட விவேக் ஓபராயின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் நடித்த சூர்யாவுக்கும் இதே சிக்கல்தான். ‘பெங்களூர் மிர்ரர்’ நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:
“தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?” “ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (ராவணனுக்கு எதற்காக தடை விதிக்க வேண்டும்?).ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.
நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?” என்று கேட்டுள்ளார் சூர்யா.

19 thoughts on “இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் செத்துப் போன போராட்டமாம் -சொல்கிறார் நடிகர் சூர்யா.”

 1. dai suriya naiye tamil makkalai pathi thabka pesathey… tamil virothi suriya tamilnatai vidu veliyeru…

 2. இவரின் படங்களை இனி புலம்பெயர் மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

  1. இப்படியே ஒவ்வொன்றாக புறக்கணித்துக்கொண்டு போனால் தமிழன் நிலை என்ன ..? யாழ் தமிழர்கள் ஒத்துகொண்ட ஒரே விஷயம் …ஏழை எளிய குடும்பத்தின் இளம் பிஞ்சுகளை குண்டு கட்டிக்கொண்டு சாக யார் ஒத்து கொள்கிறார்களோ அவர்களே தமிழர்கள் என்ற கொள்கை ….உருப்பட்ட மாதிரிதான்..

   1. இப்படியே ஒவ்வொன்றாக புறக்கணித்துக்கொண்டு போனால் தமிழன் நிலை என்ன ..?

    ஆடு நனையுதா அப்துல்லா?

    1. இல்லிங்கோ நீங்களே  உங்களுக்கு ஆட்டை போடுறதை சொல்றோமுங்கோ !

 3. Hello Mr. Balaji

  I know what comments means. When we write our comments, we have to watch our anger and jealous and hate etc. Mr. Suriya is a gentleman. Unlike other actors , he is always telling what he is trying to do for the people. He has given so many donations to the poor and needy and still he is doing so many good things.He is not a political business man or he is not going get any benefit from out of such a statement. A man can talk about anything the way he wants. Because we all born free to talk, think and do what we like to do. It may be wrong for others at the same time it might be seem to be right to him. Let him talk anything at the same time let him do something good for the tamils too. He is not looking for popularity like other actors and actresses. I do watch tamil movies once in a month or so, so. So far, I could watched his two or three movies. Becacuse you might think that i am writing as his fan. No, I don’t time for all these things. Some times I come to this site since Iyear started writing about our story, and there I say this article and your comments and here is my humble request pl don’t use any harsh words to write your comments to anyone. I think you may not know that the soft spoken man is the most dangerous fellow in society. Did you watch that during the war time, the actors and actresses all go together and made big big statements to the sri laknan govt, but the highest amount donation give by some kerala actress(I don’t know the name of the lady). so good seech, nice statement , soft talk, crocodile tears.Please don’t spoil good people activities by writing like this.Even his father Mr.Shivakumar will not allow his children to behave against the tamils. The are very high class people and they maintain their name even in the film industry. (Suriya family)They have everything why they want to do anything bad for our society. We eveyone did for our community but our donations has no identity but when people like Suriya is doing something , people get jealous that he is going to be famous man or he is planning to become a politician or he is trying to be in the heart of the tamils around the world so he can be a good money making actor. When a good man in good position, he always is trying to do good for other needy and poor.That is Suriya. It is not today or yesterday, he is doing for a long time. So, Please don’t spoil their service and don’t let their service to reach our people.

 4. “I welcome debate among my team, but I won’t tolerate division,” Obama president of America

  ஐயா பெரியோர்களே,

  இனியவது எமக்குள் தூற்றுவதை தவிர்ப்போம்.
  துரோகிப் பட்டம் வழங்குவதை விடுவோம்.

  அனைவரிடமிருந்தும் எமக்கு எம் தாயக விடுதலைக்கு தேவையானதை மட்டும் உள்வாங்கி,

  அனைவரையும் ஒன்றினைத்து செயற்படுவோம்.

  நன்றி
  ஈழவன்

 5. இன மானத்தை மறந்து பிழைப்புக்காக அலையும் சூரியா என்ற குள்ள நரியின் சாயம் வெளுத்துவிட்டது. நடிக்கத் தெரியாதவர் நடிகராகிவிட்டார். அது அவருடைய அதிர்ஷ்டம். அதற்காக எல்லாம் தெரிந்த அறிவாளி போல் பேசித் திரிந்தால் தமிழினத்தின் பிரதிநிதியான யாரவது ஒருவர் அவரது நாக்கை அறுப்பார். அப்புறம் உண்மையிலேயே ரத்தச் சரித்திர ஆகிவிடும் அவரது வாழ்க்கை.
  இப்படிக்கு,
  என்றும் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் சுவாசிக்கும் உண்மைத் தமிழர்களில் ஒருவன்.

  1. சிவகுமாரின் பிள்ள அய்யா சூர்யா.தடுமாற வேண்டாம்.

  2. கருணா,பிள்ளையான்,கே.பி போனறு இன்னும் வெளிவரவிருக்கும்
   விடுதலைப்புலிகளை விடவா சூரியா துரோகி.. எந்த்த் தமிழனிடம் பண்ம பறித்தார், யாரின் பிள்ளைகளை பலி கொடுத்தர்ர்?

   ´தமிழுலகம் விரைவில் தமிழனின் துரோகிகள் யாரென்பதை கண்டுகொள்ழும்.. துரை

 6. முள்ளிவாயக்காலில் தமிழன் கொத்துக் கொத்தாக கொலையுண்டபோது தமிழ்நாட்டில்நடிகர்,நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்வில் நடிகன் சூரியா நல்ல ஒரு ஆலோசனையொன்று சொன்னார். இறந்து கொண்டிருக்கும் தமிழர்களை சேலத்தில் முகாம் அமைத்து அஙகு குடியிருத்தலாம் என்று. இப்படி ஒரு அறிவாளி அவர். ஏழைகளினால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் சூரியா அ தில் ஒரு பகுதியை திரும்ப ஏழைகளுக்குக் கொடுப்பது நல்லது. ஆனால் பண்ம் எப்படியும் பண்ணலாம் என்ற எண்ணம்தான் பிழை. மறப்போம் பணம் உழைப்போம் என்ற கொள்கை கூடாது ராசா.

 7. தமிழினத்தின் பிரதிநிதியான யாரவது ஒருவர் அவரது நாக்கை அறுப்பார். அப்புறம் உண்மையிலேயே ரத்தச் சரித்திர ஆகிவிடும் அவரது வாழ்க்கை.”

  இதையெல்லாம் எப்படி இனியொரு அனுமதிக்கிறது.

  தலையங்கமும் உள்செய்தியும் சிண்டு முடியும் விதமாக இருக்கிறது. நீங்கள் விரும்புவதை செய்திகளாக்குகிறீர்கள்.

 8. -உ-/~=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=~//=# ”இந்தப் ’பயன்’ அவிய அப்பனுக்கு மட்டுமில்லெ.., %ஒட்டுமொத்தக் கொங்குநாட்டுக்கே ஒரு அவமானச் சின்னம். {அவிய அப்பன் எத்தனையோ மல்லுக்கட்டிப் பாத்தும் அந்த வடநாட்டுக்காரியத்தான் கட்டிக்குவேன்னு கட்டீட்டமாதரெ..)_இப்பொ.., அதே வடநாட்டுச் “சொந்த”த்துனாலெ ‘தானாடாட்டியுமு..தஞ்சதையாடும்கிற’[?!] கதயா.., அந்த ஓபராய் மச்சானுக்காப் பரிஞ்சு வரிஞ்சு கட்டீட்டுத் திரியறே’..ன்..;_%=>இது நல்லதுக்கில்லீன்னு அவிய அப்பனாச்சுஞ் சொல்லித் திருத்தோணு’ம்..=இல்லாட்டி,..”நல்லதுக்கு இல்லாதயே போயிரும், பொன்னேந்-தெரிஞ்சுக்கோ..!”/~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|சிவ**சிவ=|

  1. தவறூ கண்டு பிடித்தே பழ்க்க்ப் பட்ட தமிழ்க் குடியே/ நீ தமிழனை வாழ வைப்பது எப்போது?

 9. தேவையில்லாமல் எல்லோரையும் எதிர்நிலையில் வைத்துப்பார்க்கக்கூடாதுதான்.ஆனால் தன்தன் பிழைப்பிற்காக ஒரு இனத்தையே அவமதிக்கும் இவர்போன்ற பொறுக்கிகளின் முகமூடி கிளிக்கப்படவேண்டும்.

 10. சூர்யா தமிழனாய் இருப்ப்தும் அவன் வளர்வதும் தமிழின விரோதிகளூக்கு பொறூக்கவிலைப் போலும் வேரிலே விச்ம் பாய்ச்சி அழிக்கநினைக்கிறார்கள் இது மலையாளீகலின் சூழ்ச்சியாகவும் இருக்கலாம்.தெலுங்கர்களீண் சதியாகவும் இருக்கலாம்.கன்னடர்களீன் குழி பறீப்பாகவும் அமையலாம்.வந்தேரிகளீன் சூழ்ச்சிகளீன் வீழ்ந்திடாதே தமிழா.

  1. துப்பறியும் சிங்கம் தமிழ்மாறன் அவர்களே நீங்கள் உளவாறிந்து கண்ட இந்த உண்மைகளைக் கொலைஞர் கருணநிதியிடம் தெரிவியுங்கள். கூடவே அவருடைய ரத்தத்தின் ரத்தம் அன்புச் சகோதரி செயலலிதா அன்னையாரிடமும் தெரிவியுங்கள்.
   அவரையும் அன்புச் சகோதரி செயலலிதா அன்னையாரையும் கொலை செய்வதற்கென்றே 70 கோடி பேர் சதிசெய்து காத்திருக்கிறர்கள். அண்மைக் காலமாகத் தங்களைக் கொலை செய்யச் சதி என்று அவர்கள் அறிகை விடவில்லை. அனேகமாக அவர்களுடைய துப்பறியும் குழுவினர் செயலூக்கமிழந்து போயிருக்கலாம்.
   உங்கள் சேவை இருவருக்கும் தேவை.

 11. அப்துல்லா என்ற முஸ்லீம் பெயரில் எழுதுபவன் நிச்சயம் முஸ்லீமல்லா, யாரோ முஸ்லீம் அல்லாத தமிழன்.

  1. தமிழன் என்ற தமிழ்  பெயரில் எழுதுபவன் நிச்சயம் தமிள்ளலா , யாரோ தமிழன்  அல்லாத தமிழன். ..

Comments are closed.