இலங்கை அரசிற்கு எதிராகப் போராடாதீர்கள் – உளவியல் யுத்தம் : சபா நாவலன்

இலங்கைப் அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னான அரசியல் பல அரசியல் பிரச்சனைகளுக்கான உரைகல். புதிய முகாம்கள், புதிய சார்பு நிலைகள் என்று ஒவ்வொரு அரசியல் மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்க்க முடியத அழிவுகள். அதிர்ச்சியூட்டும் அணி சேர்க்கைகள! இவற்றின் பின்புலத்தில் உருவமைக்கப்படும் சமூகப் பொதுப்புத்தி என்பது அழிவுகளை அங்கீகரிக்கக் கோருகிறது. இதற்காக அதிகார வர்க்கம் செயலாற்றும் வழி முறை அதன் செல் நெறி என்ப்னவெல்லாம் மிகுந்த சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிற்கு மிகுந்த அச்சதை ஊட்டுகின்ற எச்சரிக்கைகள்.

முள்ளிவாய்க்கலிலிருந்து ஆரம்பிக்கும் அழிவிற்கான நிகழ்ச்சித் திட்டம்

 

முள்ளி வாய்க்கால் அழிவுகளின் பின்னர், உலகம் ஆயிரமாயிரமாய் மனிதப் படுகொலைகளை மௌனமாய் அங்கீகரித்த பின்னர் வெளிப்படையான அழிப்பு நடவடிக்கை தெற்காசியாவிலிருந்து ஆரம்பிக்கிறது.

1. நந்திக் கடலோரம் இரத்தத்தால் குளிப்பாட்டப்படுகிறது.

2. இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாக பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகிறது.

3. உலகம் முழுவதும் பரந்திருந்த மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள், சீர்திருத்தவாதிகள் புதிய சார்புநிலைக்குள் உள்வாங்கபடுகின்றனர்.

4. இதுவரைக்கும் எதேச்சதிகாரத்திற்குத் துணை போவதற்குப் பின்நின்ற வெனிசூலா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைப் பிரச்சனையில் எதிர்பாராத புதிய அணிசேர்க்கையை மேற்கொள்கின்றன.

5. வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சியாக உலகின் சித்திரவதை முகாம்கள் நிறுவப்படுகின்றன. மூன்று லட்சம் மக்கள் சாட்சியின்றிச் சிறைவைக்கப்படுகின்றனர்.

6. தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் மிகத் தந்திரமாக இலங்கை – இந்திய அரசுகள் தமக்கு எதிரான எதிர்பியக்கங்களை எதிர்கொள்கின்றன.

7. இலங்கையை முன்வைத்து இனிமேல் எதிர்ப்பியகங்களும் “எதிர்ப்பரசியலும்” சாத்தியமில்லை என்ற சிந்தனை உருவமைக்கப்படுகிறது.

8. அமரிக்கக் கப்பல் வருகிறது, செஞ்சிலுவைச் சங்கம் நந்திக்கடலை ஆட்கொள்கிறது, ஐக்கிய நாடுகள் பார்த்துக்கொண்டிராது என்று வழங்கப்பட்ட நம்பிக்கை பல அழிவுகளை ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றினதும் பின்புலத்தில் ஒரு பிரதானமான உளவியல் போர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதன் தாக்கத்திற்கு உள்ளான ஒரு பகுதியினர் நேர்மையாகவே போராடாதீர்கள் அழிந்துபோய்விடுவோம் என்கிறார்கள், இன்னொரு பகுதியினர் உளவியல் போரின் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார முகவர்கள் போல் தொழிற்படுகிறார்கள். பயன்படுத்தப்படுபவர்கள் பயன்படுபவர்கள் என்ற இரண்டு ஆபத்தான பகுதியினரை இப்போர் உருவாக்கியுள்ளது. உரிமை கேட்பவர்களின் மீதும், அழிவுகளை எதிர்ப்பவர்கள் மீதும் நிகழ்த்தப்படும் இந்த யுத்தத்தின் கோட்பாட்டுத்தளம் மனிதாபிமான முன்னறிவிப்புகளூடாக விரிவுபடுத்தப்படுகிறது. அது மனிதாபிமானிகளின் “குற்ற உணர்விற்குத்” தீனி போடும் தந்திரோபாயத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

எதிர்ப்பியங்களுக்கு எதிரான உளவியல் யுத்ததின் மனிதாபிமான முகம்(a) – இதன் எதிர்விளைவுகள்(b)

 

1a. செத்தவர்கள் செத்துப் போய்விட்டார்கள் எஞ்சியவர்களைக் காப்பாற்ற வேண்டும் – போராடாமல் உதவி செய்யுங்கள்.

1(b). நாளை தமிழ் நாட்டில், ஆபிரிக்காவில், ஐரோப்பாவில் அல்லது இலங்கையின் முள்ளிவாய்க்கால் போன்ற இன்னொரு மூலையில் இன்னும் பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டு செத்தவர்கள் போக எஞ்சியிருப்பவர்களுக்கு உதவுங்கள் என்ற குரல் மனிதப்ப்பண்பாக மாறிவிடும்.

2a. போரால் நாடு அழிந்து போயிருக்கிறது நாம் கட்டியெழுப்புவோம் – போராட்டமல் அபிவிருத்திசெய்யுங்கள்.

2(b). நூறு வருடங்கள் பேரினவாதப் போரால் நாட்டைக் குட்டிச்சுவராக்கியவர்கள் அதே பேரினவாதத்திற்கு எந்த அரசியல் தீர்வையையும் முன்வைக்காமல், பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மேல் குந்தியிருந்துகொண்டு அபிவிருத்திசெய்ய அழைக்கிறார்கள்.

3a. இலங்கையில் மக்கள் போராடவில்லை அவர்களுக்காகப் போராடுவதாகக் கூறி மக்களை அழித்துவிடாதீர்கள்.

3(b). இலங்கையில் மக்கள் போராடவில்லை என்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையிழந்து அனாதரவான நிலையில் நிற்கிறார்கள். அவர்களுக்காகக் குரலெழுப்ப யாரும் இல்லை. அந்த உளவியல் நம்பிக்கை உருவாக்கப்படும் வரை அவர்கள் அழிக்கப்படுவது தொடரும்.

4a. புலிகள் போன்ற “மெகா” அமைப்பாலேயே வெல்ல முடியவில்லை. நீங்கள் ஒன்றும் சாதித்துவிட முடியாது.

4(b). புலிகளின் தவறாக வழி நடத்தப்பட்ட அழிவு யுத்ததம் தான் போராட்டம் என்ற மாயை ஒரு புறத்தில் இலங்கை இந்திய அரசுகளாலும் மறுபுறத்தில் புலிகளின் ஆதரவாளர்களாலும் கட்டமைக்கப்படுகிறது. இதன் எதிர் விளைவாகப் புதிய எதிர்ப்பியக்கம் சாத்தியமற்றது என்ற கருத்து உருவாக்கப்படுகிறது.

5a. இலங்கை அரசோடு சமரசம் செய்துகொண்டால் குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற்றுக்கொள்ளலாம்.

5(b). இன்றிருப்பதை விட வன்மம் குறைந்த பேரினவாத அரசுகளோடு சமரசம் செய்துகொண்ட வரலாறு தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பியக்கங்களுக்கு உண்டு. 1956 இலிருந்து உரிமைகள் பறிக்கப்படுவது தான் வரலாறு. எதுவும் வழங்கப்பட்டதில்லை.

6a. மௌனமாயிருங்கள் ஒபாமாவும், ஐக்கிய நாடுகளும், ஐரோப்பாவும் இலங்கையைக் குறிவைத்துள்ளன. ஒன்றில் அவர்களிடம் மன்றாடுங்கள் அல்லது அவர்களைக் குழப்பிவிடாதீர்கள்.

6(b). கிளிநொச்சியில் போர் ஆரம்பித்த நாட்களுக்கு முன்பிருந்தே ஐக்கிய நாடுகளையும், அமரிக்காவையும் நம்புமாறு தமிழ்ப் பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். போராடும் சக்திகளை நம்பவைத்துப் எதிர்ப்பியக்கங்களை மட்டுப்படுத்தும் திட்டமிட்ட செயன்முறை தான் இது. தமது வர்த்த நலன்களை முன்னிறுத்து மட்டுமே செயற்படும் இவர்களுக்கு எதிர்ப்பியக்கங்கள் எதிரிகள்.

7a. பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரது துப்பாக்கி இன்னும் சூடாறிவிடவில்லை. திடுமென வந்து தமிழர்களை மீட்டெடுப்பார்.. போராடுவதை நிறுத்துங்கள்.

7(b). அமரிக்காவும், இந்தியாவும் எவ்வளவு ஆபத்தானவர்களோ அதே அளவில் பிரபாகரன் வாழ்கிறார் பேர்வழிகளும் ஆபத்தானவர்கள். மறைமுகமாக அவர்கள் சொல்வதெல்லாம் போராடாதீர்கள் பிரபாகரன் வருவார் என்பதே. முள்ளிவாய்காலின் பின்னான காலப்பகுதியில் எதிர்ப்பியக்கங்களை மட்டுப்படுத்த இது பெரும் பங்கு வகித்திருக்கிறது.

இவை அனைத்தினதும் மையமான முழக்கமாக அமைந்திருப்பது, செத்துப் போனவர்களுக்காகவும், சாகடிக்கப்படுபவர்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டாம் என்பது மட்டும்தான்.

இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளுக்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அழிக்கப்படுமானால் அல்லது மட்டுப்படுத்தபடுமானால் உலகின் அனைத்து அதிகாரவர்க்கமும் அதே உதாரணத்தை முன்வைத்து கட்டற்ற மனிதப்படுகொலைகளை மேற்கொள்ளலாம் என்ற குறைந்தபட்ச உண்மையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத பலரின் சமூகவிரோத நிலைப்பாடு தெருவிற்கிழுத்து அம்ப்பலப்படுத்தப்பட வேண்டும். இவற்றிற்குப் பலியானவர்களின் மௌனம் எதிர்கால சமூகத்திற்கு எச்சரிகைவிடுக்கிறது.

இலங்கை அரசிற்கு எதிரான அரசியலும் அழுத்தமும் மட்டுப்படுத்தப்படதன் எதிர் விளைவுகள்.

1. இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை இனப்படுகொலையை முன்னுதாரணமாகக் கொண்டு தமது மக்களை அழிக்க ஆரம்பித்துள்ளன.

2. இலங்கை எந்த எதிர்ப்புமின்றி தனது இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் தொடர்கிறது.

3. சிங்கள பௌத்த சோவனிசத்தின் மேலும் வளத்தெடுக்கும் இலங்கை அரசு அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அடயாளத்தை அழித்துவருகிறது.

4. மக்கள் மீதான இராணுவ உளவியல் யுத்ததினூடாக தனது அழிப்பிற்கு எதிரான போராட்டச் சூழலை நிர்மூலமாக்கியுள்ளது.

5. இலங்கை முழுவதையும் இந்தியா ஈறான பன்னாட்டு வியாபார்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

6. முகாம்களில் அடைத்துவைகப்பட்டுள்ளவர்களும் அரசியல் கைதிகளும் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

7. மீள் குடியேற்றம் என்ற பெயரில் தெருக்களில் வீசியெறியப்படும் குழந்தைகளதும் குடும்பங்களதும் அவலம் தொடர்கிறது.

முழு உலகினதும் அதிகார மையங்களின் ஆதரவோடு அவற்றின் முகவர்களின் துணையோடு அழிக்கப்பட்ட மக்களின் அழுகுரல்கள் உலகில் எதிரொலிக்காவிட்டால் அழிவுகள் தொடரும். இன்னும் சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்கள் தனியானவர்கள் அல்ல என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மீதான உளவியல் யுத்ததை தற்காலிகமாகவேனும் எதிர்கொள்ளும் சாத்தியத்தை இலங்கைக்கு வெளியிலுள்ள போராடும் சக்திகள் கொண்டிருக்கின்றன. பேரினவாத அரசு தண்டிக்கப்படாவிட்டால் இதே அழிப்புக்கள் தொடரும் என்ற உளவியல் பொதுச் சிந்தனையை உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், ஜனநாயகசக்திகள், மனிதாபிமானிகள், போராடுவோர் மத்தியில் உருவாக்கவேண்டும். தமிழ்ப் பேசும் மக்களை அழிப்பதற்கு துணைபோன அதிகாரவர்க்கத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் அழிவரசியலான குறுந்தேசிய மனோபாவத்திற்கு வெளியில் தான் இதனை முன்னெடுக்க முடியும்.

இலங்கை அரசினதும் அதன் பின்னணியில் செயலாற்றும் அரச அதிகாரங்களதும் உளவியல் யுத்தத்திற்கு எதிராகன பொதுச் சிந்தனையைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை ஒவ்வொரு சமூகப் பிரக்ஞையுள்ள மனிதனும் முன்னெடுக்கவேண்டும். இதனால் மட்டுமே தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும், ஐரோப்பியர்களும், ஆபிரிக்கர்களும், முஸ்லீம்களும் இன்னும் ஆயிரமாயிரம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் கூட்டங்கள் தமது எதிர்கள் யார் நண்பர்கள் யார் என இனம்கண்டு கொள்வர்.

9 thoughts on “இலங்கை அரசிற்கு எதிராகப் போராடாதீர்கள் – உளவியல் யுத்தம் : சபா நாவலன்”

 1. பார்த்தீனியம் செடி படருவதைப் போல இலங்கைக்கு ஆதரவான சிந்தனை பரவி வருகிறது. முன்னாள் புலி ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இன்று இலங்கை அரசின் காலடியில்……. புலிகளைப் பிடிக்காதவர்களும் இலங்கை அரசிடம்… எஞ்சியிருப்பது மிகச் சிலர்தான்…. அவர்களை குறிவைத்து இயங்கத் துவங்கியிருக்கிறது இலங்கை அரசு.

 2. பொன்னிலா, ஆற்றைக்கடந்த மட்டியும் மடையனும் போல் தான் இந்த கூட்டம், இவங்களாலே எதையும் சாதிக்கமுடியாது , உங்களுக்கு பாத்தீனியம் செடிபோல் தெரிவது எங்களுக்கு பசலிக்கீரைபோல் தெரிகின்றது அது ஏன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் காலம் வெகுவிரைவில் வரும், மண்ணாளும் த்ந்திரம் சொன்னாலும் புரிவதில்லையாம், முள்ளிவாய்க்கால் கொலைகாரன் நடுக்கடலிலே நீந்தத்தெரியாமல் தத்தளிக்கின்றார் அவனுக்கு ஏதாவது ஒன்றை பிடித்து வெளிவர வேன்டிய நிலையில் தான் இந்த கூட்டத்தை பிடித்திருக்கின்றான், எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றநிலையில் தான் கொலைகாரன் இருக்கின்றான் .

 3. மேற்கத்தைய மோகத்தில் இந்திய எதிர்ப்பும்,

  நக்சலைட் கவர்ச்சியில் இந்திய எதிர்ப்பும்

  தமிழ்த் தேசியத்தின் முற்று முழுதான அழிவிற்கே இட்டுச் செல்லும்.

  ஆதிஷேசனையும்,டிராகனையும் எம்மால் வெல்ல முடியாது.

  வெள்ளைத் தோலின் மனிதவள சுரண்டலுக்கு எமது தேசிய இனப் போராட்டம் தொடர்கதையாகவே இருக்கும்.

  இதில் ‘எரிகிற வீட்டில் பிடுங்கிறது ஆதாய’மென நினைப்பவர்கள்தான்,இன்று நம்முன்னுள்ள கதாநாயகர்கள்.

 4. “இந்திய எதிர்ப்பு” என்பது இந்திய மேலாதிக்கதுக்கு எதிர்ப்பே ஒழிய வேறெதுவுமல்ல. அதற்கும் நக்சலைட்டுகட்கும் ஒரு உறவுமில்லை.
  மேற்கத்தைய மோகத்தால் இந்தியாவை எதிர்ப்போர் பலர் இருக்க முடியாது.

  இந்தியாவையோ சீனாவையோ ஆதரிப்பதாலும் நமக்கு நன்மை கிட்டாது.
  எவ்விதமான அந்நியத் தலையீடும் நமக்கும் நாட்டுக்கும் கேடானது.

  நம் விடயத்தில் இந்தியாவின் கடந்த கால நடத்தையைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும் என்போர் குறித்து நாம் எச்சரிக்கைYஆக இருக்க வேண்டாமா?

  “இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை இனப்படுகொலையை முன்னுதாரணமாகக் கொண்டு தமது மக்களை அழிக்க ஆரம்பித்துள்ளன.” — இதில் ஒரு முக்கிய திருத்தம்.
  இந்தியா அந்தப் பணியை எப்போதிருந்தோ மேற்கொண்டு வந்துள்ளது. தெலுங்கானா கிளர்ச்சி எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்று அறிவீர்கள்.

 5. It looks like most Eelam pro tiger camp supports china, this aricle is relavant in that context, China is not either a trust worthy ally

  Delhi’s South Block prefers to speak regarding the Indo-Lanka issues with President Mahinda Rajapaksa’s brothers , Basil and Gotabaya and the President’s Secretary Lalith Weeratunge, because the Delhi South Block is of the view that pertaining to issues surfacing on Indo Lanka relations , it is only that trio who can convince Mahinda when it comes to searching for solutions. It is their conviction that neither the former Foreign Minister Rohitha Bogollagama nor the present Foreign Minister Dr. G L Peiris is capable of accomplishing that. The reason for this is neither of them is in Mahinda’s ‘inner circle’. The Delhi South Block which is aware that among those within the inner circle are Mahinda’s brothers, is naturally anxious to discuss the Indo-Lanka issues with them.

  During the period of the Sri Lanka (SL) war, India was desirous of talking with Basil, Gotabaya and Lalith Weeratunge on the Indo Lanka issues revolving round the war. The Delhi South Block needed to discuss with the trio even after the war ended. On their last tour when the trio visited the Delhi South Block and had discussions, the prime and central issue that cropped up was regarding the Chinese Nationals working in the Chinese projects in Sri Lanka. The Delhi South Block of course expressed its concerns unreservedly over the Chinese nationals working especially in the North and East Chinese projects in Sri Lanka. Basil, Gotabaya and Lalith Weeratunge are scheduled to leave for India next Sunday to hold discussions on the Indo-Lanka issues. Most sources presume , the political solution to the ethnic issue would get top priority in the agenda. But, if on the contrary, at the impending discussions, the issue of the Chinese projects and Chinese workers takes precedence over the political solution, it will not be a matter of surprise.

  The reason being, in the countries across the entire world where Chinese projects are in progress, like the Chinese workers in these projects there are Chinese spies too.

  Obviously, India is therefore apprehensive and panic stricken on this account after becoming fully aware of the modus operandi of these spies and their espionage which have come to light as revealed by the copious evidence contained in the many reports. Some are:

  n An American Jury has begun last week deliberations on the fate of the American Engineer, Noshir S. Gowadia , who is facing charges of passing on a ‘B2 Bomber ‘ technology to the Chinese and helping them to develop a cruise missile.

  n Gowadia was arrested in 2005 and during the 4 ½ year trial , he admitted of receiving US Dollar 84,000/- until then, although he demanded US $ 800,000/-. He was accused of using classified US defense information which he obtained during his association with Defense producer Northrup Corporation, to help China build its cruise missile.

  n In another unrelated development last week (July 31), a Canadian Conservative MP disclosed that some of the colleagues have fallen into traps laid by Chinese spies, with lavish gifts on too-good-to-be true business deals, and at least two MPs have been subsequently blackmailed.. Rob Anders, the Calgary MP informed the Canadian security agencies that both the cases occurred in Shanghai where one of the MPs was offered a rich but skeptical business deal while the other one accepted sexual favors. He also further claimed of being informed by many current members of Parliament that on their trips to China they have been approached by stunning women, half their age, offering their services. Although the Canadian authorities were tight lipped on Ander’s assertion of Chinese infiltration into the Federal Government, the security authorities are investigating the allegations.

  n The US justice Dept. convicted on May 11 this year two Chinese Nationals , Zhen Zhou Wu (Aka Alex Wu) and Yufeng Wei and a Firm namely Chinese electronics in Waltham , Massachusetts , a subsidiary of the Chinese Schenzhen Chitron electronics Co. Ltd. for illegally exporting defense equipment to China . They shipped products to several Chinese Companies including the Shanghai Academy of spacecraft Technology (SAST) through the Hong Kong Front Company for more than ten years, SAST is involved in R&D , and manufacture of tactical missiles, carrier rockets, space launch vehicles and satellites. 25% Chinese sales were to Chinese military entities.

  n Chinese Business interests in Africa were tied up to supporting ‘rogue’ regimes such as in Zimbabwe and Dictators, Professor Humphrey Moshi of the Economic Research Bureau at the University of Dar e Salaam, while addressing Sino Africa Business Forum in mid 2008, urged China to stop supporting these rogue States and argued that its engagement with such countries undermined human rights values.

  n Botswana Govt. last year introduced trade laws that ban Chinese traders from dealing in textiles in the country. The decision came at a time when a large number of Chinese traders are dealing in garments mainly on ‘fake’ international brands. The Botswana Govt. also expressed concerns regarding dumping of Chinese projects into the country which severely hampered existence of domestic Industry.

  n Nigerian Courts sentenced to death in December last year six Chinese traders who were involved in exporting fake anti malaria drugs to the country under the fake ‘Made in India’ label. The fake drugs racket was exposed when Nigerian National Agency for Food and Drug administration and Control disclosed that it has seized a large consignment of spurious anti malaria drugs worth US $ 2,10,000/-

  n Tanzania Marine Forces captured last year big Chinese fishing boats while fishing in its territorial waters.

  n Nigeria suspended a controversial US $ 8.3 billion contract awarded to China civil engineering Construction Corporation to upgrade its railway system as the work was below standard and left uncompleted.

  n The Chinese Uranium Company has shut down its activities in Northern Niger following threats from Niger movement for justice who had kidnapped and later released a Chinese Uranium Executive accusing Chinese Govt. of supplying arms in Niger Govt.

  n According to reports, China has provided 90% of Sudan’s small arms acquisition as violence escalated in Darfur. China buys two thirds of Sudans oil exports while the latter acquires all of its weapons from China.

  n Opposition politicians in Zambia accused Chinese mining Firms of creating ‘slave’ labor conditions. About 50 Zambians died in an explosives accident at the Chambishi Copper mine run by a State owned Chinese Co.. In another incident, 5 Zambians were shot by Chinese Managers for protesting against non payment of their salaries.

  n Chinese have now been bringing their ‘prisoners’-convicts of criminal acts -as labor for employment in Chinese contracted Companies involved in mining, laying railway lines and telecommunication infrastructure. This practice has led to local law and order problems in several parts of Africa.

  Irrespective of whether the Sri Lankan Govt. knows about these reports or not , the crux of the matter is the Sri Lankan Govt. is unable to extricate itself from the clutches of China. In the circumstances, even at the forthcoming discussions with the South Block, if the issue of the Chinese projects springs up, it is unlikely the Sri Lanka Govt. will be able to say or do anything that offends China. In that event what option will India be left with? In the eighties, during the J. R. Jayewardene regime, when the US was fixing its gaze on the Trincomalee Harbor, India, in order to avert the US interest from it, made use of the Tamil Armed rebels in Sri Lanka and kindled the Eelam War. In the end, India too had to suffer the evil fallouts of that war. It is unimaginable that India will provoke another similar situation now after having burnt its fingers once. However, the possibility of India inciting the Tamil National Alliance (TNA) to launch a political campaign against the Chinese projects in the North and East cannot be ruled out. India’s capacity in that direction cannot be underestimated.

 6. “It looks like most Eelam pro tiger camp supports china”
  இதுக்கு என்னா அர்த்த்முன்னே புரியல்லே. கொஞ்சம் வெவரமா வெளங்கற பஷையிலே சொல்லறிங்கள வேலு அண்ணாச்சி.

  1. புலி முட்டாளூகல் இந்தியா மேலுள்ள கோவதுல சினாவ கைல்ல போட்டு இந்தியாவுக்கு சாத்தலாம்னு நெனைக்குரக 

  2. எந்தப் புலி முட்டாளுக? எந்தப் புலியில்லாத முட்டாளுக?
   வாயில வந்ததெ சொன்னாப் போதுமா?
   வெவரமா சொல்லுங்க.

   1. ஆத்தாடி இன்னும் புரியலையா?
    கொல்லைப்புரம் வாருஙகோன்னா!

Comments are closed.