இலங்கை அரசின் தமிழ்த் துணைப்படை கருணாநிதியை வாழ்த்தி அறிக்கை

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட வேளைகளில் கொலையாளிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவந்த முத்துவேல் கருணாநிதி உட்பட பல அரசியல் வாதிகள் இன்று செம்மொழி மாநாடு நடத்துகிறார்கள்; அதுவும் தமிழ் என்ற அடையாளம் தென்னாசியாவின் தென் மூலையில் இலங்கைப் பேரினவாத அரசால் திட்டமிட்டு அழிக்கப்படும் வேளையில்!! இலங்கையில் திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ் மொழி அடையாளத்தின் மீட்சிக்காக உழைக்கும் ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானியும் திட்டமிட்டு அழிக்கப்படுவதற்கு துணைபோகும் கருணாநிதி போன்ற அரசியல் வியாபாரிகளைப் போல இலங்கையில் அரச துணைப்படைகள் செயலாற்றுகின்றன.

அரச துணைக்குழுவான புளட் அமைப்பின் தலைவர் சித்தார்தன் கருணாநிதியை வாழ்த்தி வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழை வாழ வைக்கும் கலைஞர் கருணாநிதி நீடூளிகாலம் வாழ வாழ்த்துகிறோம்!

– தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம

பண்டைய மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழ் மொழியை சுவாசிக்கும் எவரும் இன்றைய நூற்றாண்டிற்கு நிகராக தமிழை தாங்கி நிற்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை மறந்துவிட முடியாது. தமிழகத்தில் மட்டும் அல்லாது இந்திய அரசியலில் முக்கிய பாகம் வகிக்கும் கலைஞர் அவர்களுக்கு போதிய அளவில் நேரம் இல்லாத போதும், போதும் என்ற அளவிற்கு அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிவரும் தொண்டினை அளவிட முடியாது. உலக வழற்சிக்கு ஏற்ப எமது தாய்மொழியான தமிழை இமயம் அளவிற்கு அவர் உயர்த்தி வைத்திருக்கின்றார். தமிழ் மொழி மீது மட்டும் அல்லாது அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தாழ்ந்து போய்விடக் கூடாது என்பதற்காக அவர் அயராது உழைப்பவர்.
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்ததில் ஒரு தடைவ அவர் தனது முதல்வர் பதவியையே இழந்தவர். தமிழ் அவருக்கு உயிர், அந்த உயிரை காப்பாற்றுவதற்காகவே அவர் தனது பதவியை பயன்படுத்தி வருகின்றார் என்று உரைத்தால் அது மிகையாகாது.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்கள் 1984ம் ஆண்டளவில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்துவிட்டு அவர் குறித்து கருத்து கூறுகையில் “தமிழகத்தில் நான் பல தமிழ் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தேன்” அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்தான். ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தமிழ்மொழி மீது இருக்கும் அளப்பரிய பற்று எனக்கு அவர் மீது இருந்த மரியாதையினை இரட்டிப் பாக்கியது என்று தனது அமைப்பின் தோழர்கள் மத்தியில் கூறியிருந்தார்.
ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேரும் போது எல்லாம் அரசியல் லாபம் தேடாத அவர் குரல் ஒலிக்க தவறியது இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் கூறுவார். தமிழ் வாழ அந்த மொழியை பேசும் இனம் வாழ அந்த தலைவன் நீடூளி காலம் வாழவேண்டும் என்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச அமைப்பு வாழ்த்துகின்றது.
தனது 14 வயதில் இந்திமொழி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைஞர் அவர்கள், மாணவர் நேசன் என்ற பெயரில் கையெழுத்து பிரதி ஒன்றினை வெளியிட்டதுடன், தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பினை ஸ்தாபித்து இருந்தார். திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அமைப்பு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1969ம் ஆண்டு இறந்ததன் பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற கலைஞர் எந்த துறையினையும் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்குமாகவே பயன்படுத்தி வந்துள்ளார்.
திரைப்படத்துறை, நாடகத்துறை, எழுத்துதுறை, இலக்கியதுறை எல்லாவற்றிலும் அவரின் தமிழ் ஆழுகை ஆழப்பதிந்து இருப்பதினை பார்க்கலாம். தற்பொழுது உலகெங்கிலும் இருக்கும் தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழகத்தில் மாபெரும் அளவில் தமிழ் செம்மொழி மகாநாட்டினை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச கிளை வாழ்த்தி வரவேற்கின்றது.
உலக வளர்ச்சிகளுக்கு எற்ப தமிழ் ஒங்கி நிற்க, பண்டைய மொழிகளின் ஒன்றான தமிழ் மொழி பேசும் மக்கள் பயனடைய, உலகெங்கும் தமிழ்மொழி ஒங்கி ஒலிக்க, ஈழத்தமிழினம் தன்மானத்துடன் வாழ, அவர்களுக்கு அரசியல் அக்கீகாரம் கிடைக்க முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமெல்லாம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

5 thoughts on “இலங்கை அரசின் தமிழ்த் துணைப்படை கருணாநிதியை வாழ்த்தி அறிக்கை”

  1. ” நீடூளிகாலம் வாழ ”
    ளி”யா ழி” யா என்பதே தெரியவில்லை. தமிழ் வாழ்ந்த மாதிரித்தான்.

  2. கொடுங்கோலனாக வர்னிக்கப்படும் கிட்லர்கூட தன் மண்ணை, தன் இனத்தை யாருக்கும் விற்றதுமில்லை, விலைபேசியதுமில்லை. தன் தசையை தானே கடித்து உண்ணும் ஒரு மிருகத்தைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதை இன்று காண்கிறேன். தன்னைத் தமிழனாக பறைசாற்றி நடிக்கும் ஒரு கூட்டத்திடம் கண்டுகொண்டேன். அது தன்னைக்கடித்து தின்பதோடு தமிழனையும் கடித்துக் குதறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு தலைவன் ஒரு கேடுகெட்ட கலைஞன். கருவிலிருந்த குழந்தை தொட்டு சுடுகாடு செல்லும் நிலையிலிருந்த முதிய தமிழனையும் உயிரோடு பிழிந்தெடுத்த இரத்தத்தால் தமிழை குளிப்பாட்டி செம்மொழியாக்கி கூத்தாடுகிறது. இனித் தமிழரின் இரத்தத்தை தீர்த்தமாக பருகி பரவசமடையட்டும்.

  3. என்ன கொடுமை சரவணா
    யாரை யார் வாழ்த்துவது என்ற விவஸ்தையே இல்லையா ?

    1. இதுக்கு என்ன விவஸ்தை வேணும். இவையளுக்கு தங்களினுடைய கட்சி இணையதளதிலையே இந்த வாழ்த்தை போட முதுகெலும்பில்லாமல் புலியெதிர் தளங்கள்ல போட்டு உள்ளார்கள். இதுக்கு என்ன விவஸ்தை வேணும். எத்தனை நாட்களுக்கு இந்த நாடகங்கள் நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

  4. கழகத்தார் வாழ்த்தினமாமோம்? முந்தி மகிந்தாவையும் வாழ்த்தினவை என்னத்தை கண்டவை. ஒரு சீட்டும் கிடைக்கேல்லை. இப்ப என்னத்துக்கு கருணாநிதியை வாழ்த்தினம். தேவானந்தாவுக்கு பழைய வழக்கு எடுக்கிற மாதிரி இவையும் பின்புலத்தில செஞ்ச கொலையலை தோண்டினாலும் எண்டு பயப்படுனமோ. இவைஎண்டை கூட்டு கட்சிகாரர் உலகெல்லாம் தியாகிகள் தினம் கொண்டாடினம் இந்தியாக்காரனோட சேந்து இவை புலியெண்டு தங்களுக்கு பிடிக்காதவையல போட்ட அப்பாவி சனத்துக்கு யார் தியாகி தினம் கொண்டாடுறது. இப்ப இவையளும் வீரமக்கள் தினம் கொண்டாடுவினம் உட்கொலையல்ல போடுறதும் ஒரு வீரம் எண்டா இவையளும் வாழ்த்து சொல்லலாம். புலி இயக்கத்துக்கு பிள்ளை பிடிக்க, முதல்ல தியாகி தினம் கொண்டாடுரவதான் தேசிய படைஎண்டு பிள்ளை பிடிச்சவ. கழகத்தார் சிங்களவனோட அடிபட்டு இறந்தததை பார்க்க அவியல் உள்ளுக்கை போட்டது கூட இருக்கும். இப்ப கருணாநிதிக்கு ஏன் வால் பிடிக்கினம். கருணாநிதியும் சேந்து தமிழரை கொண்டதுக்கு வாழ்த்து தெரிவிக்கினமோ. இவையை துனைபடைஎண்டு சொல்ல இவைக்கு ஒரு படை இருக்கோ. இனி மகிந்தாவுக்கு ஏன் துணைப்படை தேவை. சனமோ தேர்தல்ல முந்தி ஆயுதம் தரிச்சவ வேண்டாம் எண்டு நிராகரித்த பிறகு இனியாவது இவையள் தேவானந்தாவை போல திருந்த வேண்டும்.

Comments are closed.