இலங்கை அதிகதூரம் சென்றுவிட்டது : ஐக்கிய நாடுகள்

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இலங்கை தெற்காசியாவின் ஆடுகளம்.  அமரிக்க ஐரோப்பிய நலன்கள்  ஒரு புறமும் சீன இந்திய நலன்கள் மறுபுறமும் இதுவரை ஐம்பதாயிரம் அப்பாவிகளின் உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது.  அந்த ஆடுகளத்தின் புதிய பரிணாமம்,  இலங்கைப் பிரச்சனையில் மனித உயிர்கள் கோரமாகக் கொல்லப்பட்ட போது பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் இப்போது மறுபடி களமிறங்கியுள்ளது.

இலங்கை அரசு கட்டுப்பாடுகளுக்கு அப்பால் அதிக தூரம் சென்றுவிட்டது நிரந்த உறுப்புரிமை நாடுகளின் ஐந்து பிரதிநிதிகள் இன்ன சிற்றி பிரசிற்கு நேற்றுத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றுமு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ஜசிக்கா நியூவேர்த் நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். நாவி பிள்ளையின் நண்பரான ஜசிக்கா நியூவேர்த் ஐநாவின் மனித உரிமைப் பணியகத்தின் நீண்டநாள் உறுப்பினர் என்றும் equality now இன் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ராஜபக்சக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சார்ந்த குற்றவியல் நீதிமன்றத்தின் அடையாளத்தினூடாக இலங்கை கம்போடியாகவோ சிரியா லெயோனாகவோ உருவாகக் கூடும் என அச்சமடைந்துள்ளனர் என இன்னசிற்றி தெரிவிக்கிறது.