இலங்கை அகதி என்பதால் உயர் கல்வி மறுக்கப்படும் சோகம்!

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 1200க்கு 1,152 மதிப் பெண்கள் பெற்றும் இலங்கை அகதி என்பதால் மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தக்கரையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் தனது மனைவி அன்னக் கிளி, குழந்தைகள் நாக ராஜன், ஈஸ்வரி, பாலசுலொ ஜினி, சுஜேந்தினி ஆகியோருடன் இலங்கை அகதிக ளுக்கான முகாமில் தங்கி யுள்ளார். இதில் நாகராஜன் 12ம் வகுப்பு முடித்துள்ளார். ஈஸ்வரி 11ம் வகுப்பும், பால சுலோஜினி 8ம் வகுப்பும், சுஜேந்தினி 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மருத்துவபடிப்பில் தமக்கு இடம் கிடைக்காதது குறித்து நாகராஜன் கூறியதாவது:

10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண் பெற்றேன். பிளஸ்2 தேர்வில் 1200க்கு 1,152 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.

சிறந்த மருத்துவராக வேண்டுமென மருத்துவம் படிக்க விரும்பி விண்ணப் பித்திருந்தேன். மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 197.75 கட் ஆப் பெற்றுள்ளேன். எனக்கு மருத்துவராகும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்பியிருந்தேன்.

ஆனால் இலங்கை அகதி என்பதால் மருத்துவப் படிப்பிற்கான கவுன் சிலிங்கில் பங்கேற்க முடியாது எனக்கூறி விட்டனர். பொறியியல் படிப்பிற்கும் விண்ணப்பித் துள்ளேன். இதிலாவது எனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார்.

மருத்துவமோ, பொறியியலோ தனியார் கல்லூரிகளில் சேர்ந்தால் பலலட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். கூலித் தொழிலாளியான எனது தந்தை பணத்திற்கு எங்கே போவார். இலங்கை அகதி என்றால் இதுதான் நிலையா? என்கி றார் நாகராஜன். கல்விக்காக ஏங்கும் இந்த மாணவரின் தொடர்பு எண் -89739-45945

Thanks: Theekkathir.

One thought on “இலங்கை அகதி என்பதால் உயர் கல்வி மறுக்கப்படும் சோகம்!”

  1. இலங்கை அகதிகள் என்பதால் அல்ல,”தமிழ்நாட்டிலேயே” குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எவ்வளவோ உரிமைகள் மறுக்கப்பட்டு,கல்லூரி வாசல்களில் துரத்தி அடிக்கப்படுகிறார்கள்!(சந்தனக்கடத்தல் வீரப்பனின் அப்பாவி மகள்கள் இதற்கு உதாரணம்)!.
    நெட்மாறன்,திருமாவளவன்,சீமான் போன்றோர்கள்…முதலில் தமிழகத்தை சேர்ந்த பிள்ளைகளின் எதிகாலத்தில்கவனம் செலுத்தவேண்டும்.”இந்திய எதிர்ப்புணர்வு” என்பதற்கு முதலில் ஒட்டு மொத்த இலங்கையரிடமிருந்து(பிரபாகன் – பிரேமதாஸா,குமரன் பத்மநாதன் – மகிந்த ராஜ பக்ஷே) சரியான விளக்கங்கள் பெறப்படவேண்டும்!.”வன்னி மக்கள்” போன்று இலங்கை மக்களுக்கு அமதியான நல்வழ்வு கிடைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை! ஆனால்,அது “தமிழ் நாடு” என்ற இந்தியாவின் ஒரு சாதாரண மாநிலத்திதை “அவமானப்படுத்தி(எதிபாரத வகையில் இலங்கையரின் இன்னும் புரிந்து கொள்ளப்படாத “உள்ளக காழ்ப்புணர்வால்”) பெறப்படும் வெற்றியாக,பழிவாங்கும் படலமாக(இந்திய “ரா” என்று கருதி) அமைந்து விடக்கூடாது!.

Comments are closed.