இலங்கையில் 6 வது ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு

இலங்கையில் 6 வது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் முனைப்பு பெற்றுள்ளன.