இலங்கையில் மக்களின் பிணங்களின் மேல் அதிகாரங்களின் நாடகம்

நிலைமைகளை வழமைக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசை நோக்கி பன்கீமூன் அழைப்புவிடுத்துள்ளார். வியாளனன்று நீல் பூனே இலங்கையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு இது. 38 வருட ஆயுதப்போரட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களின் அழிவில் முடிவடைந்ததைத் தொடர்ந்து புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்பலர் இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். தமிழ்ப் பேசும்மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை அரசு இந்திய அரசின் துணையுடன் நடத்திவருகிறது. அரச படைகளால் பல்லாயிரக் கணகான சந்தேக நபர்களும் போராளிகளும் சிறைவைக்கப்பட்டும் நாளாந்தம் கொலைசெய்யப்பட்டும் வருகின்றனர்.உலகின் மிகவும் பலவீனமான நாடுகளில் ஒன்றான இலங்கை ஐக்கிய நாடுகளை மிரட்டுகின்றது. மத்திய கிழக்கில் பலமான நாடுகளில் ஒன்றான ஈராக்கை ஐக்கிய நாடுகள் மிரட்டிய நாட்களை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.

ராஜபக்ச குடும்பமும்,இலங்கை பேரின வாத அரசும் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு அத்தனை ஆதாரங்களும் உள்ளன. ஈராக்கைப் புரட்டியெடுத்த ஐக்கிய நாடுகள் இலங்கையில் இன்றும் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிரான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. புதிய உலக அரசியல் ஒழுங்கும் அதில் இந்தியாவின் பங்கும், அமரிக்கப் பொருளாதார நெருக்கடியும்,ஆசியாவின் முக்கியத்துவமும் அமரிக்கக் கைக்கூலிகளான ஐக்கிய நாடுகள் சபையையே நிலைகுலைய வைத்துள்ளது. இவற்றிற்க்கு இடையில் மக்கள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதே வேளை, வீடமைப்பு மற்றும் பொறியியல் அமைச்சர் விமல் வீரவன்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

தமது உண்ணாவிரதப் போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு நெருக்கடியான நிலை ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாக விமல் வீரவன்ச தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூமேனியா,அமரிக்கா,பிரான்ஸ்,நெதர்லாந்து, ஜேர்மனிஇத்தாலி,நோர்வே,பிரித்தானிய ஆகிய நாடுகள் இலங்கை அரசிற்கு ஐ.நா விவகாரத்தில் அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர்.