இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த 45 நாடுகள் ஆதரவு!

commonwealth-flag3002011 ஆம் ஆண்டில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு 51 நாடுகளில் 45 நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த ஆதரவு கடந்த புதன்கிழமை ரினிடாட் அன்ட் டபேக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளது.

பிரித்தானியா, நியூஸிலாந்து மற்றும், கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் என்ற யோசனைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது 2011 ஆம் ஆண்டின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கு கனடா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்து இந்த விடயத்தைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முன்கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.