இலங்கையில் நழுவும் பொருளாதார சமாதான ஆதாயம்- மின்னுவது அனைத்தும் பொன் அல்ல: முத்துகிருஷ்ணா சர்வானந்தன்

கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் பிரதம ஆய்வாளர் அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம், பருத்தித்துறை, வட மாகாணம், இன் கட்டுரை மூன்று தொடர்களாக வெளியிடப்படுகின்றது. அடிப்படையில் முரண்படும் கருத்துக்களைக் கொண்டுள்ள அவரின் கருத்துக்களும் ஆய்வு முறையும் இனியொருவினது அல்ல, ஆய்வறிக்கை ஒன்ற்றிற்குத் தேவையான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் கொண்டுள்ள இக் கட்டுரை விவாத நோக்கில் பதியப்படுகின்றது.

அறிமுகம்

growth2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு யுத்தம் நிறைவு பெற்று இந்த வருடத்தோடு ஐந்து வருடங்கள் ஆகின்றன. நாட்டில் நீண்ட காலமாக வியாபித்து வரும் இனமுரண்பாட்டினை தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையானது பொருளாதார அபிவிருத்தியின் ஊடான நல்லிணக்கம் மற்றும் சமாதானமாக இருந்து வந்துள்ளது. பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற அரசாங்கத்தின் தாரக மந்திரத்தினை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சில ஐயப்பாடுகள் இருப்பினும், இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொண்டு இந்த அணுகுமுறையானது உள்நாட்டு யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும், மேலும் தென் மாகாணத்திலும் நிஐமான பொருளாதார சமாதான ஆதாயத்தை ஏற்படுத்தியுள்ளதா என இந்த கட்டுரையில் நான் ஆராய விரும்புகின்றேன்.

தேசிய மட்டத்தில் பார்க்கும் போது, 2010-2013 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நான்கு ஆண்டு காலப்பகுதியில் பொருளாதாரமானது சராசரியாக 7.5மூ வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சுமார் ஐந்து வருடங்களாக பணவீக்கமானது ஒற்றை இலக்கமானதாகவே காணப்படுகின்றது. உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை வீதமானது கிரமமாக வீழ்ச்சியடைந்து 2013ஆம் ஆண்டில் 4மூஆக வீழ்ச்சி கண்டுள்ளது. அத்துடன், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் விகிதாசாரம் 2013ஆம் ஆண்டில் 6.7மூஆக குறைந்துள்ளது. இருப்பினும், மாகாண மட்ட பொருளாதார தரவுகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார அபிவிருத்தியில் வேறுபட்ட காட்சி ஒன்றினையே சித்திரிக்கின்றன.
உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பொது மூலதன முதலீட்டில் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று மாகாணங்களே பெருமளவிலான தொகையினை பெற்றுள்ளன. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவையாகவும், தென் மாகாணமானது ஜனாதிபதியினதும் ‘மக்களின் அரசமரபானவர்கள்’ என சுயபிரகடனப்படுத்தப்பட்டோரதும் மனை மாகாணமாகவும் இருக்கின்றது. இந்த மூன்று மாகாணங்களும் இந்த கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் எந்தளவு பொருளாதார ஆதாயம் எட்டப்பட்டுள்ளது என்பதனை மதிப்பீடு செய்வதற்கு பொருளாதாரத்தில் செழிப்பான மேல் மாகாணத்துடன் மேற்கூறிய மூன்று மாகாணங்களினதும் தரவுகளை ஒப்பிட்டும் வேறுபாடுகளினை இனங்கண்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் நான்கு மாகாணங்கள் (நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களுள்) இந்த கட்டுரரையில் ஆய்வுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தேசியத் தரவுகளை பகுப்பாய்வு செய்வதினை விட உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார அபிவிருத்தியை கண்டறியும மற்றும் பொருளாதார சமாதான ஆதாயத்தினை எடைபோடும் வழிமுறைகளில் புதினமான அணுகுமுறையாக இது அமைகின்றது.

ஆயுத முரண்பாடு 2007ஆம் ஆண்டு ஆடி மாதம் கிழக்கு மாகாணத்திலும், 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் வடக்கு மாகாணத்திலும் நிறைவுக்கு வந்தது. ஆயுத முரண்பாட்டில் நேரடியாக தென் மாகாணம் பாதிக்கப்படவில்லை. இற்றைவரை மாகாண மட்டத்தில் ஒருங்கிணைக்கப்படாத (disaggregated) பொருளாதார தரவுகள் 2011ஆம் ஆண்டு வரை கிடைக்கக் கூடியதாக உள்ளன. அதாவது, கிழக்கு மாகாணத்தில் ஆயுத முரண்பாட்டிற்கு பின்னான நான்கு வருடங்களினவும் (2008-2011), வடக்கு மாகாணத்தில் ஆயுத முரண்பாட்டிற்கு பின்னான இரண்டு வருடங்களினவும் (2010-2011) தரவுகள் கிடைக்கக் கூடியதாக உள்ளன. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் (Department of Census and Statistics) 2012-2013 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு வருமானம் மற்றும் செலவீனம் பற்றிய அளவை (Household Income and Expenditure Survey) ஆனது 1980களின் நடுப்பகுதியின் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட முதலாவது ர்ஐநுளு ஆகும். அதேபோன்று, 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் வலு அளவை (டுயடிழரச குழசஉந ளுரசஎநல) ஆனது 1980களின் நடுப்பகுதியின் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட முதலாவது LFS ஆகும். ஆகவே, இலக்கு வைக்கப்பட்ட மாகாணங்களில் யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார அபிவிருத்தியை கண்டறிவதற்குரிய மாவட்ட மற்றும் மாகாண மட்ட பொருளாதார தரவுகளின் கணிசமான திரள் தற்போது கிடைக்கப்பெறுகின்றது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களின் உப துறை சார்ந்த பொருளாதார கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வீதத்தினை விசாரணை செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியின் மூலங்கள் யாவை என்பதனை கண்டறிவதுடன், மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் ர்ஐநுளு அடிப்படையிலான தனிநபர் வருமானம் மற்றும் தனிநபர் வருமான சமத்துவமின்மை, மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்திலும், பொருளாதார துறையிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் (அல்லது பற்றாக்குறை) மற்றும் வேலைவாய்ப்பு வகைகள், மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நான்கு மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் விகிதாசாரம் என்பவற்றினை அறிய முற்படுகின்றோம். இலங்கையில் மாகாண மட்டத்திலான பேரண்ட பொருளாதார தரவுகள் முக்கிய முறையியல் சார்ந்த குறைபாடுகளை கொண்டுள்ளன என்பதனை இந்த ஆசிரியரால் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள (அட்டவணைகள் 8-10) பேரண்ட பொருளாதார தரவுகள் உய்த்தறியப்பட்டுள்ளதால் விழிப்புணர்வுடன் கருதப்படல் வேண்டும்.

ஜனநாயக நாடுகளில் பொருளாதார அபிவிருத்தியானது அரசியல் தாக்கங்களை கொண்டுள்ளது. ஆளும் கூட்டணி அரசாங்கத்திற்கு பொருளாதார சமாதான ஆதாயம் (அல்லது பற்றாக்குறை) தேர்தல் ஆதாயத்தினை (அல்லது பற்றாக்குறையை) ஏற்படுத்தி உள்ளதா என்பதனை விசாரணை செய்வது இந்த ஆக்கத்திற்கு மேலும் பெறுமதி சேர்க்கின்றது. மாற்று விதமாக குறிப்பிடுவதாயின், உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் (குறிப்பாக, கிழக்கு, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில்) முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி உந்திகள் ஆளும் கூட்டணி அரசாங்கத்திற்கு அரசியல் ஆதாயத்தினை செலுத்தியுள்ளதா என்பதனை நாம் விசாரணை செய்கின்றோம். இந்த நோக்கத்திற்காக உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்துடன், அண்மையில் இடம்பெற்ற கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரம் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார உந்திகள்

பொருளாதார வளர்ச்சிக்கான மூலங்கள், வளர்ச்சியிற்கு மேலாக அல்லாவிட்டாலும், வளர்ச்சியிற்கு சமமாக முக்கியத்துவம் பெறுகின்றது. தேசிய அல்லது மாகாண மட்டங்களில் பொருளாதார வளர்ச்சியின் விளைவுகளை கண்டறிவதற்கு, பொருளாதார வளர்ச்சியின் மூலங்களை அடையாளம் காண்பதும், அந்த உப-துறைகளின் வளர்ச்சி நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்குமா மற்றும் அந்த உப-துறைகள் மாகாண மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்கின்றனவா என்பதனை எடை போடுவதும் இன்றியமையாததாக இருக்கின்றன. பெரும்பாலான யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி சூழ்நிலைகளில் சடுதியான பொருளாதார உந்துதல் இருக்கின்ற போதிலும் அவை நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை.
எனவே, இங்கு முதன்மையாக குறிப்பிட்ட மாகாணங்களின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்கும் (,10மூ) உபதுறைகளை இனங்கண்டு (அட்டவணைகள் 8, 9 மற்றும் 10) அதன் பின் 2009 இலிருந்து 2011 வரையான மூன்று வருட காலப்பகுதியில் அவ் உபதுறைகள் எய்திய கூட்டு வளர்ச்சி வீதத்தினை கணிக்கின்றோம். (அட்டவணை 1)

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் நிர்மாணம், தொழிற்சாலை கைத்தொழில், அரசாங்க சேவைகள் (பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் ஏனைய அரசாங்க சேவைகள்), மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம் ஆகியன மாகாண பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்யும் உப-துறைகளாக உள்ளன (அல்லது பொருளாதார உந்திகள்). வட மாகாணத்தில், நிர்மாணம், அரசாங்க சேவைகள் (பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் ஏனைய அரசாங்க சேவைகள்), ஏனைய உணவுப் பயிர்கள் (மிளகாய், வெங்காயம், போன்றன) மற்றும் போக்குவரத்து ஆகியன பொருளாதார உந்திகளாக உள்ளனளூ நிர்மாணம், தொழிற்சாலை கைத்தொழில், போக்குவரத்து மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம் ஆகியன தென் மாகாணத்தில் பொருளாதார உந்திகளாக இருக்கின்றனளூ அதேவேளை, நிதி (வங்கி, காப்புறுதி, வீடு, மனை விற்பனை, போன்றன), தொழிற்சாலை கைத்தொழில், போக்குவரத்து, மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம் என்பன மேல் மாகாணத்தில் பொருளாதார உந்திகளாக இருக்கின்றன. (அட்டவணை 1)

இலக்கு வைக்கப்பட்ட மாகாணங்களில் அட்டவணை 1இல் அவதானிக்ககூடிய ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும், காணக் கூடியதாகவுள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களில் இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவாக மூன்று (மொத்தம் நான்கில்) பொருளாதார உந்திகள் இருக்கும் அதேவேளை, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவாக இரண்டு (மொத்தம் நான்கில்) பொருளாதார உந்திகள் இருக்கின்றன. நிர்மாணம் என்ற உப-துறையானது கிழக்கு, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் பொதுவான உந்தியாக உள்ளதுடன், தொழிற்சாலை கைத்தொழில் உப-துறை என்பது கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பொதுவான பொருளாதார உந்தியாக உள்ளது. அதேபோன்று, போக்குவரத்து உப-துறையானது வடக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பொதுவான பொருளாதார உந்தியாக இருக்கின்ற நிலையில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகமானது கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பொதுவான பொருளாதார உந்தியாக உள்ளது.

ஒரு மாற்றுக் குறிப்பில் நோக்கும் போது, மேல் மாகாணத்தின் அனைத்து பொருளாதார உந்திகளும் (தொழிற்சாலை கைத்தொழில், நிதி, போக்குவரத்து மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம்) மற்றும் தென் மாகாணத்தின் மூன்று (மொத்தம் நான்கில்) பொருளாதார உந்திகளும் (தொழிற்சாலை கைத்தொழில், போக்குவரத்து மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம்) தனியார் துறையினால் இயக்கப்பட்டு வரும் அதேவேளை கிழக்கு (தொழிற்சாலை கைத்தொழில் மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம்) மற்றும் வடக்கு (வேறு உணவுப் பயிர்கள் மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகம்) மாகாணங்களில் இரண்டு பொருளாதார உந்திகள் மாத்திரமே தனியார் துறையினால் இயக்கப்படுகின்றன. கிழக்கு, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் நிர்மாண உப-துறையானது பொது மூலதன முதலீடுகளினால் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளினால் பெரும்பாழும் உந்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்க சேவைகள் (பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் ஏனைய அரசாங்க சேவைகள்) முற்று முழுதாக பொது நிதியில் இயக்கப்படுபவையாகும். இலங்கையில் பொது முதலீடுகள் ஊழல், விரயங்கள் மற்றும் பொது வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வதில் தொடர்ச்சியான தாமதங்களினால் ஏற்படும் மேலதிக செலவுகள் என்பவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டவை தென் மற்றும் மேல் மாகாணப் பொருளாதாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் பலம் வாய்ந்தவை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது ஏனெனில் ஊழல், விரயங்கள் மற்றும் மேலதிக செலவுகளால் கறைபதியப்பட்ட பொது முதலீடு, செலவீனங்களினால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சியானது சம்பந்தப்பட்ட மாகாணங்களின் மக்களிற்கான நேரடியான மற்றும் மறைமுகமான பலாபலன்களை மட்டுப்படுத்துகின்றது. இருப்பினும் அத்தியாவசிய கல்வி, சுகாதார மற்றும் வேறு சமூக சேவைகளை (கட்டணமின்றி இலவசமாக) வழங்குவதற்கு செலவிடப்படும் பொதுப் பணமானது உள்ளூர் மக்களுக்கு மிகப்பெருமளவில் பயனளிக்கின்றது. மேலும், அரச அனுசரணையுடனான பாரிய உட்கட்டமைப்பு செயற்றிட்டங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு (பெரும்பாலும் சீன நிறுவனங்களுக்கு – இவை கணிசமான இறக்குமதி செய்யப்பட்ட சீன தொழிலாளர்களையும் கொண்டுள்ளன) அல்லது மேல் மாகாணத்தை மையமாகக்கொண்ட பாரிய இலங்கை நிறுவனங்களுக்கு ஒப்பந்தமளிக்கப்பட்டுள்ளமையினால் இவை உள்ளூர் மக்களுக்கு கணிசமான பலாபலன்களை உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலமோ அல்லது பெறப்பட்ட இலாபத்தினை சம்பந்தப்பட்ட மாகாணங்களிலேயே மீள் உழுதல் மூலமோ பெற்றுத்தரவில்லை.

மேலும் முக்கியமாக விசாரணை செய்யப்பட வேண்டியது என்னவெனில் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று மாகாணங்களிலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு மற்றும்ஃஅல்லது தேசிய பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமானதா அல்லது இவை நிதியியல் மற்றும் பொருளியல் ரீதியாக ஒப்பேறக்கூடியனவையா அல்லது செயற்திட்ட நடைமுறைப்படுத்தலின் போதும் அதற்குப் பின்னரும் சம்பந்தப்பட்ட உள்ளூர் மக்களுக்கு குறித்த செயற்திட்டங்களினால் அதிகூடிய பலாபலன்கள் கிடைப்பதனை அரசாங்கம் உறுதி செய்துள்ளதா என்பனவாகும். இவை பதிலளிக்கப்பட வேண்டிய நெருக்கடிமிக்க கேள்விகளாக விளங்குகின்ற போதிலும், இந்தக் கட்டுரையின் வரையரை இவ்விடயங்களை ஆழமாக விசாரிப்பதனை அனுமதிக்கவில்லை.

இருந்தபொழுதிலும், நிஐ ஆதாரங்கள் எடுத்துரைப்பது யாதெனில் அனைத்து மூன்று மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டஃமேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்களுள் பெரும்பாலானவை, அனைத்தும் அல்லாவிட்டாலும், வெள்ளை யானைகள் (பெறுமதிமிக்க நிதி வளங்களை வீண் விரயம் செய்யும் காட்சிப்பொருட்கள்) போன்றே தென்படுகின்றன. தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தில் (மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்-ஆசுஐயு) இற்றைவரைக்கும் (பங்குனி 2013இல் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகின்ற பொழுதிலும்) மிகவும் அரிதாகவே விமானங்கள் தரையிறங்குதலும், புறப்பாடுகளும் இருந்துவந்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தின் (மாகம் ருகுணுபுர மகிந்த ராஜபக்ஷ துறைமுகம்-ஆசுஆசுP) முதல் கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பொழுதிலும், வர்த்தக கப்பல்களின் வருகை அல்லது வெளியேற்றம் ரீதியிலான வணிகம் குறைந்தபட்சமே இருந்து வந்துள்ளது. இந்தத் துறைமுகத்தின் இரண்டாவது கட்ட நிர்மாணத்திற்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கைநிறைவான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே நடைபெற்றுள்ளன. அதே மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதி நவீனத்துவமிக்க சர்வதேச மாநாட்டு மையமானது இற்றைவரைக்கும் தேசிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளருக்காக பொறுமையாக காத்திருக்கின்றது. அதே மாவட்டத்தில் மக்களின் வரிப் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரிய அதிநவீன தொழில்நுட்பத்துடனான வைத்தியசாலை மானிடருக்கு சிகிச்சை அளிப்பதனை விடுத்து வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் இலாபமீட்ட முடியும் ஏனெனில் அங்கு பாரிய கால்நடை மற்றும் வனவிலங்கு சனத்தொகை காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலும் (தென் மாகாணம்) முல்லைத்தீவிலும் (வட மாகாணம்) நிர்மாணிக்கப்பட்ட ஆறிலிருந்து எட்டு ஒழுங்கைகளைக் கொண்ட (ஒரு வழியில் 3-4 ஒழுங்கைகள்) நெடுஞ்சாலைகள் ஊதாரித்தனம் மிக்கவை ஏனெனில் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த பெரும்பாலான மக்களிடம் சொந்தமாக வாகனம் இன்மையினால் பெரும்பாலான நேரங்களில் இவ்நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடை மற்றும் வனவிலங்குகளின் சனத்தொகை மானிட சனத்தொகையை (91,947) விட அதிகமாக காணப்படுகின்றது. இருந்த பொழுதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெறுமதி மிக்க எந்தவொரு பாற்பண்னை அபிவிருத்தி செயற்றிட்டமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. மாறாக நியூசிலாந்து நாட்டில் கால்நடைகளின் சனத்தொகை மானிட சனத்தொகையை (2013இன் நடுப்பகுதியில் 4.4 மில்லியன்) விட அதிகமாக இருப்பதுடன் உலகின் பாரிய மற்றும் அதிசிறந்த பாற்பண்ணை கைத்தொழில் துறையொன்றினை நியூசிலாந்து கொண்டுள்ளது.

கிழக்கு, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் ஊடான பொது முதலீடுகள் நேர்மறை வருமானத்தை ஈட்டுவதற்கு சில வருடங்கள் ஆகலாம் என யாரேனும் வாதம் புரியலாம். இருப்பினும் அத்தகைய கூற்று இவ்வாசிரியருக்கு திருப்திகரமானதாக இல்லை ஏனெனில் கிழக்கில், வடக்கில் அல்லது தெற்கில் முன்னெடுக்கப்பட்ட பாரிய செயற்திட்டங்கள் தொடர்பில் நிதி அல்லது பொருளாதார செயலாக்க கற்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. வெற்றிகரமாகுவதற்கு சாத்தியங்களைக் கொண்டுள்ள ஒருசில உட்கட்டமைப்பு செயற்றிட்டங்கள் கூட (தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை போன்றவை: இவை இரண்டும் கட்டணம் செலுத்தும் அதிவேக நெடுஞ்சாலைகள்) குறைந்த வேக கட்டுப்பாட்டினால் முடக்கப்பட்டுள்ளது (ஆகக் கூடியது மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர்கள்-வேறு பல நாடுகளில் மணித்தியாலத்திற்கு 200 கிலோமீற்றர்களாக உள்ளது). சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்கு எடுக்கின்ற நேரத்தை குறைப்பதன் மூலம் பொருளியல் பரிமாற்ற செலவுகளை குறைப்பதே கட்டணம் செலுத்தும் நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கான நியாய காரணமாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு என்ற போர்வையில் விதிக்கப்படும் வேகக் கட்டுப்பாடானது கட்டணம் செலுத்தும் அதிவேக நெடுஞ்சாலைகளின் நியாயத்தன்மையை மறைக்கேடு செய்கின்றது என்பதனை கட்டணம் செலுத்தும் நெடுஞ்சாலைகளில் மிகக் குறைந்த வாகன பாய்ச்சல் (வசயககiஉ கடழற) பிரதிபலிக்கின்றது. பெரும்பாலான நேரங்களில் மற்றும் பெரும்பாலான நாட்களில் இந்த கட்டணம் செலுத்தும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் தொகையை எண்ணி விடலாம் என என்னிடம் கூறுகின்றனர்.

பொது முதலீடுகள் அத்தியாவசமாக பொருளாதாரத்திற்கோ அல்லது அதன் மக்களுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடியனவை அல்ல. பொது முதலீடுகளின் வகைகளிலேயே விசயம் உள்ளது. வடக்கில் மின்சார விநியோகத்தை மீட்டு தேசிய வலையமைப்புடன் இணைத்தல், தொலைத்தொடர்புகளை மீட்டு மேம்படுத்தல் போன்ற பொருளாதார உட்கட்டமைப்பு மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்புகளை மீள்நிர்மாணம் செய்தல் ஆகியனவற்றிற்கான பொது முதலீடுகள் அப்பிரதேச மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றன. அதி வளமான மேல் மாகாணமும், ஒப்பீட்டளவில் வளமான தென் மாகாணமும் பெரும்பாலும் தனியார் துறையினால் உந்தப்படுவதனால் ஒப்பீட்டளவில் உயர்ந்த உற்பத்தித் திறன் மிக்க பொருளாதரங்களாகவும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் பெரும்பாலும் பொதுத் துறையினாலும், குறைந்த பெறுமதிமிக்க விவசாய உற்பத்தியாளர்களாலும் உந்தப்படுவதனால் ஒப்பீட்டளவில் குறைந்த உற்பத்தித் திறன் மிக்க பொருளாதாரங்களாகவும் திகழ்கின்றன. மேட்படி பண்புகள் அல்லது அமைப்பைக் கொண்ட குறிப்பிட்ட மாகாணப் பொருளாதாரங்களின் வளர்ச்சியானது அம்மாகாண மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பின்விளைவுகளை கீழ்வருவன பிரதிபலிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் 2009-2011 காலப்பகுதியில் மூன்று முன்னணி உப-துறைகள் நீண்ட உள்நாட்டு யுத்தத்தினால் அடக்கிவைக்கப்பட்டிருந்த கேள்வியின் காரணமாக மூன்றிலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. (அட்டவணை 1) வடக்கில் நாணயப் பெறுமதி ரீதியாக அரசாங்க சேவைகளில் (விசேடமாக பாதுகாப்பு சேவைகளில்) 2011ஆம் ஆண்டில் எதிர் முடுக்கம் (decelaration) காணப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால், அதே வருடம் கிழக்கு மாகாணத்தில் அரசாங்க சேவைகள் ஏமாற்றமளிக்கும் வகையில் நேர் முடுக்கம் (acceleration) கண்டுள்ளது. இருப்பினும் கிழக்கு (17.8%) மற்றும் வடக்கு (24.8%) மாகாணப் பொருளாதாரங்களுக்கு அதிகூடிய பங்களிப்பினை அரசாங்க சேவைகளே தொடர்ந்தும் 2011 இல் வழங்கியுள்ளன.

1. கப்ரால், அஜித் நிவாட், ‘இலங்கையின் மீள்கட்டுமாணம் மற்றும் நல்லிணக்கத்தினை நடைமுறை சார்ந்த, மரபுசாராத, அறிவு நுட்பம் உந்திவந்துள்ளது’, Forbes சஞ்சிகை, 28 மார்ச் 2014. http://www.forbes.com/sites/realspin/2014/03/28/practical-not-conventional-wisdom-has-driven-sri-lankas-rebuilding-and-reconciliation/
2. சர்வானந்தன், முத்துகிருஷ;ணா, (2007), இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தின் பொருளாதாரம்: தடையிலிருந்து அடக்குமுறைக்கு, கொள்கைக் கற்கைகள், இல 44, வாஷpங்டன்: கிழக்கு-மேற்கு நிலையம். http://www.eastwestcenter.org/fileadmin/stored/pdfs/ps044.pdf
3. கணக்காளர் நாயகம் திணைக்களம், வருடாந்த அறிக்கைகள், இலங்கை அரசாங்கம். http://www.auditorgeneral.gov.lk/web/index.php?option=com_audititem&Itemid=89&lang=en

தொடரும்…