இலங்கையில் தேர்தலுக்குப் பின்னர் அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன! : சர்வதேச மன்னிப்புச் சபை

   இலங்கையில், எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலய பணிப்பாளர் சாம் சப்பாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான இலங்கையின் சூழ்நிலைகள் தொடர்பில் தமது அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சபை கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளை அதிகரித்துள்ளன. பயங்கரவாத இல்லாதொழிப்பு மற்றும் பாரிய தேர்தல் வெற்றிய ஆகியவற்றின் பின்னர் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாத ஓர் நிலைமையே காணப்படுகிறது. குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு தயார் என பொன்சேகா அறிவித்த சில மணித்தியாலங்களில் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் சாம் சப்பாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

One thought on “இலங்கையில் தேர்தலுக்குப் பின்னர் அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன! : சர்வதேச மன்னிப்புச் சபை”

  1. இலங்கையில் ஜனநாயக அஸ்தமனமும்> பாசிச சர்வாதிகார உதயமும் ஏற்படுவதை காட்டுகின்றது! எங்கு அடக்குமறை உண்டோ> அங்கு போராட்டமும் உண்டு! இது தற்காலிக தடைகளுக்கூடாக புரட்சிகர வெகுஜனப்போராக பர்ணமிக்கும்!

Comments are closed.