இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் வரை போராடுவோம்: சி.​ மகேந்திரன்.

 
 ​ இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் வரை போராட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி.​ மகேந்திரன்.

​ ​ திருச்சியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில்,​​ இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற “மக்கள் கலை இரவு’ நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:

​ ​ “ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் சாதாரணத் தாக்குதல் என்று கூற முடியாது.​ இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எழுதாத இலக்கியங்கள் இல்லை;​ திரைப்படங்களும் இல்லை.

​ ​ ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல வேறு யார் மீதாவது நடத்தப்பட்டிருந்தால் உலகில் யாராவது பார்த்துக் கொண்டிருப்பார்களா?

தமிழர்களின் உயிரைப் பறிக்கக் காரணமானவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.​ இது மனித இனத்துக்கே நடந்த கொடுமை.

​ ​ ​ இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் போதுதான் நமது போராட்டம் முடிவுக்கு வரும்.​ அதுவரை கலை மூலமும்,​​ உணர்வுகள் மூலமும் நாம் போராடுவோம்’ என்றார் அவர்.

​ ​ விழாவில்,​​ குமரி முரசு கலைக்குழுவின் நாட்டுப்புற ஆட்டங்கள்,​​ புதுச்சேரி வேலுசரவணன் வழங்கும் சிறார் நாடகம்,​​ திருவண்ணாமலை கோவி.​ செல்வராஜ் குழுவினரின் நிஜ நாடகம்,​​ குமரி வந்தனம் கலைக்குழுவின் வீதி நாடகங்கள்,​​ புதுச்சேரி ஜயமூர்த்தியின் நாடகங்கள்,​​ பாடல்கள்,​​ திருச்சி ஜீவா கலைக்குழுவினரினன் மண்ணின் பாடல்கள்,​​ கோவை திலீப்குமார் குழுவினரின் சிலப்பதிகாரம் நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன.

5 thoughts on “இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் வரை போராடுவோம்: சி.​ மகேந்திரன்.”

 1. தாகுதலை நடத்த உதவிய நாடு எது?
  இந்தியா!
  இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களதும் பழங்குடிகள் உட்பட்ட தேசிய சிறுபான்மை இனங்களதும் சுயநிர்ணய உரிமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா?
  காஷ்மீரில் நடக்கும் படுகொலைகள் மணிப்பூர் அட்டுழியங்கள் மாஒவாதிகட்தெதிரான போர் என்ற பேரில் பழங்குடிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறை, படுகொலைகள் என்பன பற்றி அக் கட்சி நிலைப்பாடென்ன?
  ஈந்தியா ஒரு மேலாதிக்க வல்லரசாகவே செயற்படுகிறதை அக் கட்சி ஏற்கிறதா?
  சுயநிர்ணய உரிமை இல்லாமல் இலங்கையில் தீர்வு இல்லை. அப்படியானால் இந்தியாவுக்குள் ஏற்க இயலாத சுயநிர்ணய உரிமையை இலங்கையில் கேட்பது எத்தகைய அபத்தம்!

 2. ஐயா மகேந்திரன் முதல்ல உங்க நாடில்லில இருக்கிரவங்ககு அரசியல் விடுதலை கிடைக்க போராடுங்க. எங்களை வச்சு வியாபாரம் பிழைப்பு அரசியல் நடத்தியது போதும். அதுன்ன இவ்வளவு நடக்கும் போதும் இதே தமிழ்நாட்டில தானே இருந்தீங்க. போன வருஷம் தாக்குதல் நடக்கேக்க்க என்கேயையா போனீங்க? இப்ப திரும்ப வீர வசனம்.

  ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல வேறு யார் மீதாவது நடத்தப்பட்டிருந்தால் உலகில் யாராவது பார்த்துக் கொண்டிருப்பார்களா?
  -ஏன்னய்யா பாத்துகொண்டு இருந்தீங்க? நிங்களே உன்களை பத்தி சொல்றீங்களே. அப்ப ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாத்துகொண்டு இருபிங்க வேறை யாரும் மேலை தாக்குதல் நடத்தினால் பாத்துகொண்டு இருக்க மாட்டிங்க அப்படிதானே ஐயா மகேந்திரன்.

  தமிழர்களின் உயிரைப் பறிக்கக் காரணமானவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.​ இது மனித இனத்துக்கே நடந்த கொடுமை.
  -ஏனய்யா இன்னும் குற்றவாளி கூண்டில் நிறுத்தல? உங்க நாட்டில இருந்து தானே பாட்டுக்காரர், ஆட்டக்காரர் எல்லாம் வந்து நம்ம அரசாங்கத்துக்கு மேடையல்ல ஆட்டம் போட்டு வாழ்த்தும் சொலினம். ஏனையா உங்களுக்கு திரும்ப திரும்ப இந்த ஈனம் கேட்ட பிழைப்பு?

  ​ ​ ​ இலங்கையில் தமிழர்களுக்கு முழு அரசியல் விடுதலை கிடைக்கும் போதுதான் நமது போராட்டம் முடிவுக்கு வரும்.​ அதுவரை கலை மூலமும்,​​ உணர்வுகள் மூலமும் நாம் போராடுவோம்’ என்றார் அவர்.
  -அது அப்படி என்னய்யா போராட்டம் நடத்திறீங்க முடிவு வாறதிக்கு? நிங்க கலையை வளக்க ஏன்னய்யா எங்களை இழுகிறேங்க?

  ஐயா மகேந்திரன் உங்க நாட்டில காஷ்மீர் பிரச்னை இருக்கு, அசாம் பிரச்னை இருக்கு, மணிப்பூரில பிரசனை இருக்கு, திருபுரா பிரச்னை இருக்கு, நாகலாந்தில பிரச்னை இருக்கு. காலிஸ்தான் பிரச்சனைக்கு என்னய்யா நடந்தது? இதை வாசியுங்க அப்ப தமிழ் நாட்டில குண்டு சட்டிக்கை குதிரை ஒட்டாம உங்க நாடில நடக்கிறதா முதல அறியுங்க. http://en.wikipedia.org/wiki/Separatist_movements_of_India
  அது ஏனையா? இப்ப அணிசேரா நாடுகளிண்டை விளையாட்டு போட்டி டெல்லியில வைக்க போறாங்க அங்கை ஒன்னும் இன்னும் கட்டிடங்கள் கட்டி முடியல 200 நாள்தான் போட்டிக்கு இருக்கு. அதில மழை காலம் வேற வருது. இவங்க தனிபட்ட கொந்தராத்துகாறருக்கு கட்டிட ஒப்பந்தங்களை கொடுத்து இருக்கிறாங்க. அவங்க அடிமாட்டு சம்பளத்தில வேலைக்கு ஆக்களை வச்சு வேலை வாங்கிறாங்க. இது வரல 47 பேர் விழுந்து முரிஞ்சிண்டு செத்திட்டாங்க. இவங்க எல்லாம் வேற மாநிலத்தில கச்ச்டத்தில இருந்து வேலைக்கு வந்தவங்க. இவன்களுக்காக உங்க கலை மூலமும்,​​ உணர்வுகள் மூலம போராடுங்க. இவங்கள கட்டிடம் கட்டேக்க விழுந்து முரிஞ்சவங்க அப்படியே ஒன்டுமில்லாம வீட்டே போக வேண்டியத்தான்.

  ஏனையா உங்க தமின்ன்ட்டில சிங்கார சென்னையில வடநாடு காரங்களை தானேயையா வச்சு கட்டிடிட வேலையல அடிமாட்டு வேலை வாங்கிறீங்க. நின்களெல்லாம் மனித உரிமை கதைக்காதீங்க. உங்களை போலதானையா எங்கை நாடிலிலையும் சோபா சக்தி எண்டு ஒருத்தர். இப்படி கொஞ்ச பேர் இருகிறாங்க. இவங்க கவிதை பாடுவாங்க, கொமுனிச சித்தாந்தம் பேசுவாங்க ஆனா ஒரு பிரயோசனும் இவங்களால நாட்டு சனத்துக்கு இல்ல. இவங்களுக்கு தங்களை பற்றி மற்றவங்க பெருமையா பேச வேண்டும். அதுக்கு இப்படி எதாவது உங்களை போல பாதிக்கபடடவன்கண்ட பிரச்சனையை எடுத்து எல்லற்றைரை தலையிலையும் ஏறி மிளகாய் அரைக்க பாக்கிறது.

  ஐயா மகேந்திரன் உங்களை மன்றாடமாய் கேக்கிறன் நிங்க நம்ம சனத்துக்கு உதவி செய்யவேனுமிண்டா நிங்க நிக்கிற திருச்சியிலேயே நிங்க விமான நிலையத்துக்கு போற வழியில கொட்டப்பட்டு அகதி முகாம் இருக்கு அதில போய் வேண்டிய உதவிய அவங்களுக்கு செய்யுங்க. மனம் இருந்தா.

  உங்க நாட்டுக்காரங்க எங்களுக்கு ரொம்ப உதவி செய்தீங்க தான். அந்த நன்றியை நாங்க மறக்கேல்ல. ஆனா நின்கலேலாம் பெரும்பான்மையான நிங்க உண்மையான எங்கடை அடிப்படை பிரசனை எனெண்டே தெரியாமல் உதவி செய்ததுதான் பெரும் பிழையா போச்சு. அதோட உங்களை போல எங்களை வச்சு பிழைப்பு நடதிரவங்க.

  சரி ஐயா மகேந்திரன் முதல உங்க ஊரில இருக்கிற சாதி பிரச்னை, உங்கை மாவடத்தில இருக்கிற பிச்சனை, உங்க மாநிலத்தில இருக்கிற பிரச்னை, உங்க நாட்டில இருக்கிற பிரகானைஎண்டு பாத்திட்டு எங்களுக்கு உதவி செய்ய வாருங்க.

  இப்ப உங்கை நாட்டில இருந்துதான் வரதராஜ பெருமாள் எண்டு உங்கடை பூர்விக குடி, எங்கை நாட்டில பிறந்தவர் உங்கடை நாட்டுக்காரரோடை சேந்து எங்கடை ஆக்களையும் செத்து ஒரு கொலை வெறியாட்டம் கற்பழிப்பு எண்டு எல்லத்க்கும் காரணமானவர் முதலமைச்சர் எண்டு ஏவல் நாயா தலைமை தாங்கி பேந்து துண்டு வேண்டாம் புலியைப் பிடியெண்டு உங்கடை நாட்டுக்கு உங்கடை ஆக்களோட தன்ரை கூட்டத்தையும் கூடிக்கொண்டு தப்பி ஓடி தமில்நாடிளையும் பயத்தில இருக்காம ஒரிசாவில ஒளிந்ஞ்சு இருந்து உங்களை போல அறிக்கை விட்டுக்கொண்டு இருந்த புண்ணியவான் இப்ப திரும்ப 20வருசத்துக்கு பேந்து எதோ கள்ள பிளானில கூட்டத்தை விட்டிட்டு தனிய வந்து இருக்கிறார். இவரும் உங்களைபோல கொமுனிசம் கதைச்சவர் தான். ஆனா இவற்றை கூட்டம் உங்கடை அமைதிப்படை எண்டு வந்தவையோட சேந்து செய்த அடகாசமோ கொன்சம் மிஞ்சம் இல்லை.

 3. அய்யா மனியம் அவர்ககல ! யெஙலுக்கு யெஙகலது பிரசனையை பார்துக தெரியும்! உருபடதா பயல்கலால தான் யம் சனதுகு இவ்வலவு பிரசனை !

  1. ஆமாம், உங்கடை பிரச்சனையை நீங்க பார்த்துக்கிங்க. நம்மட பிரச்சனையை நாம பார்த்துக்கிறோம், இதை உங்கட சீமானுக்கும் சொல்லுங்க. எங்களை வச்சு இந்த ஈனம் கேட்ட பிழைப்பு வேணாமெண்டு.

Comments are closed.