இலங்கையில் சீன உளவாளிகள் இந்தியாவுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை.

இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனாவிலிருந்து இலங்கையில் வந்து இறங்கி உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப்பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.1962ம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போது கூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது.குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம். சர்வதேச அரசியல் சதுரங்க விளையாட்டில் தலைசிறந்தவர்களால் இந்தியாவிற்கு இந்த படுதோல்வி அடைந்து அவமானப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.நாம் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

அண்மையில் ராஜபக்சே இந்தியாவிற்கு வருகை தந்திருந்தபோது, பயனற்ற, சம்பிரதாயரீதியான பேச்சுகளை அவருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து, இந்த பிரச்சனையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.27 ஆண்டு கால இனப்போர் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப்போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக் கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும். கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.ஜெயலலிதாவுக்கு பதில் அறிக்கை விடுவதை தவிர்த்துவிட்டு அவர் கூறியுள்ள விஷயத்தில் உண்மை இருந்தால், இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

8 thoughts on “இலங்கையில் சீன உளவாளிகள் இந்தியாவுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை.”

 1. Depicting china as an enemy of India is indian capitalist view. not only that, it is also a pro American imperialist opinion. people like Jayalalitha and Nedumaran and such others are trying hard to convince Indian masses that india should intervene in Srilankan affairs, against china. Actually India is doing the same since long ago. by shouting against china the so called well wishers of Indian and Srilankan Tamil people are giving legitimacy to Indian capitalists secret interventions in Srilanka.

 2. அடப் பாவம், இது தெரியாமத்தான் இந்திய மோப்ப நாயகள்

 3. Hello Friends

  Indians have enemies around their neck. Still they don’t care about anything. Because they are really busy in watching CRICKET and in producing new new movies. Cricket is their religions. The players are their gods. Actors and actresses are their real leaders. As long as their superstars are in good health , not only China, even Pakistan, Bangladesh, or any other county cannot do anything to India. While the war was going in Sri lanka, they couldn’t send at least, five hundred trained boys to help LT.T.E in the battle field in the thirty years history. If they were there in the battle field in Mullivaikkal, Prabhakaran would have made the history in golden letters. Today, every country will be ready to welcome him on red carpet like Nelson Mandale or some other world leaders.

 4. சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் தப்பி ஓடாமல் கவனித்துக் கொள்ள 125,000 பொலிஸ்காரர்களையும் கொண்டு வந்ததுடன், பொலிஸ்காரர்கள் தப்பி ஓட முடியாமல் 625,000 ராணுவத்தினரையும் கொண்டுவந்திருப்பதாக இனி வரவுள்ள செய்தியையும் இங்கே சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

  இவை எல்லாம் கருணாநிதியின் சதி என்று ஜெயலலிதாவும் ஜெயலலிதாவின் சதி என்று கருணாநிதியும் அறிக்கைப் போர் நடத்துவார்கள் என்பதையும் அதை வைத்தே தமிழக நாளேடுகள் 12 நாட்களுக்கு விறுவிறுப்பாக ஓடும் என்றும் நான் சொல்ல வேண்டியதில்லை.

 5. தொன்டைத் தண்ணீர் வற்றும் வரை ஈழத்தமிழர் நாம கத்தினோமே அப்போது குண்டு துளைக்காத கவசம் அணிந்து கொண்டு புலிஎதிர்ப்புக் காட்டினீர்களே.  இப்போத புரிகிறதா?  இப்போது கத்திப் பிரயோசனமில்லை. எல்லாம கையை மீறிப் போய்வி்ட்டது.  பொத்திக் கொண்டு இருக்கவேண்டியது தான். அல்லது அறிக்கை விட்டுக் கொண்டு இருங்கள்.  நீங்களும் கருநாய் நிதியும் தமிழரின் சாபக்கேடாய் அரசியலக்கு வந்தவர்கள். அனுபவிக்கப்போவது அப்பாவி தமிழ்மக்களே.  யாழ்

 6. இவர் மொழியில், தமிழர்கள் என்றாள் தமிழ் பேசும் அவாள்கள் தான், இந்தியாவுக்கு ஆபத்து என்றாள் அது இந்தி மொழி பேசுவோர்க்கு ஆபத்து என்றே பொருள்கொள்ளவேண்டும்.

  1. இந்தி பேசுவோர் பற்றி அவர் கவலைப் பட்டாற் கூட அது நல்லது, ஏனெனில் பெரும்பாலான இந்தி பேசுவோர் தமிழரிலும் ஏழைகள்.
   அவர் போன்றோரின் அக்கறைகள் பார்ப்பனிய-பணியா பண மூட்டைகளது நலன் பற்றியது. இந்திய மேலாதிக்கவாதிகளின் நலன் பற்றியது.

   1. திருவாய் மலர்வது, அவர்களை ”போன்றோரின் அக்கறைகள் பார்ப்பனிய-பணியா பண மூட்டைகளது நலன் பற்றியது. இந்திய மேலாதிக்கவாதிகளின் நலன் பற்றியது” என்பது உண்மையே.

Comments are closed.