இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம்: குமார் ரூபசிங்ஹ

எந்தப் போருக்கும்  ஆரம்பம்பனிலை இடைனிலை இறுதினிலை என்றிருப்பது போல் இலங்கையின் இனப் போராட்டம் தனது இறுதினிலையை  அடைந்த்துள்ளது என கலாநிதி குமார் ரூபசிங்ஹ  அரவரது நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
பல சர்வதேச நாடுகளின் பிரச்சனைகளிற்கு தீர்வுகண்ட அனுபவம் மிக்க திரு.ரூபசிங்ஹ, அண்மைக்காலத்தில்  16 வேறுபட்ட போர்சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், 8 வேறுபட்ட சிக்கல்களிற்கு பேச்சுவார்ததை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இலங்கையில்நடைபெற்றுக் கொண்டிருப்பது போன்ற யுததங்கள் சிலவே மிஞ்சியிருப்பதாகவும் அது தனது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.