இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அறிகுறிகள் : சந்திரிக்கா

chandrikaநாட்டில் இராணுவ ஆட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் காணப்படுகிறது. நாட்டில் இன்று வீதிகளை நிர்மாணிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனது வீட்டுக்கு முன்னால் இருக்கும் கால்வாய்களை சுத்தம் செய்வதும் இராணுவத்தினரே. நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் இவர்கள் தும்பு தடியை தூக்கி வீசி விட்டு, துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வீடுகளுக்குள் சென்று பாரிய அழிவை ஏற்படுத்தி விடுவார்களே என்ற பெரும் பயம் எனக்கு இருக்கிறது
என முன்னை நாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ மயமாக்கப்படுவது குறித்து சந்திரிக்கா கூறவிளைவது உண்மையே. சர்வாதிகாரி ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதற்கும் இனப்படுகொலையை நடத்துவதற்கும் சந்திரிக்கா விதைத்தவையே இன்று கொடூரமாக கிளைவிரித்து வளர்ந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

எமது வீடுகளில் நடப்பவற்றை கண்காணிக்கின்றனர். தொலைபேசிகளை இடைமறித்து கேட்கின்றனர். ஈமெயில்களை பார்க்கின்றனர். எனது ஈமெயிலை இரத்துச் செய்கின்றனர்.
யார் வந்து செல்கின்றனர் என்பதை கண்காணிக்க பெரிய ஹொட்டல்களில் அரச புலனாய்வு பிரிவினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

எனது வீட்டுக்கு நண்பர் ஒருவர் வந்து சென்றால், மறுநாள் புலனாய்வு பிரிவினர் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். இது குறித்து பாலசூரிய பொலிஸ் மா அதிபராக இருக்கும் போது கடிதம் எழுதினேன்.
நான் மாத்திரமல்ல, ஆட்சியில் இருப்பவர்களுடன் இணங்காதவர்கள் அனைவரும் இந்த நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர். இன்று காணக் கூடிய இந்த அனைத்து செயற்பாடுகளும் இராணுவ ஆட்சியின் அடையாளங்கள் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

2 thoughts on “இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அறிகுறிகள் : சந்திரிக்கா”

  1. இராணுவ அடக்குமுறை குறித்து எவர் பேசலாமென்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
    ஆட்சி அதிகாரம் இவர் கையில் இருந்தபோது என்ன செய்தார்?.

  2. லூசுத்தனமா பேசுறதே இந்த அம்மாவோட பொளப்பா போயிரிச்சி.

Comments are closed.