இலங்கையில் இந்திய கடற்படை

இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த 140 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக இலங்கை அறிவித்த நிலையில் தற்போது இந்தியக் கடற்படை இலங்கை சென்றுள்ளது.

இந்தக் குழுவில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 140 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஐஎன்எஸ் ஷர்துல், ஐஎன்எஸ் கிருஷ்ணா ஆகிய இந்திய கடற்படைப் போர்க் கப்பல்கள் மற்றும் வருணா என்கிற கடலோரக் காவல் படை கப்பல் மூலம் இவர்கள் கொச்சியிலிருந்து சென்றுள்ளனர். இந்த மூன்று கப்பல்களும் கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 10ம் தேதி வரை இந்த பயிற்சி நீடிக்குமாம்.