இலங்கையின் போர்க்குற்றங்கள் அமரிக்காவில் பேசப்படும்?

wargrதமிழீழ விடுதலைப் புலிகளக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பான அறிக்கையொன்று அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்படவுள்ளதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் ரொட் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைமை குறித்து ஏற்கனவே அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றை முன்வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக, சர்வதேச விவகாரச் செயலாளரும், ராஜாங்கச் செயலாளரும் இலங்கைத் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னர், ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயங்கள் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

3 thoughts on “இலங்கையின் போர்க்குற்றங்கள் அமரிக்காவில் பேசப்படும்?”

  1. வன்னி முகாமில் வாடும் மக்களீன் துயர் துடைக்க வழி செய்யுங்கள் போர்க் குற்றம் பற்றீ பிறகு பார்க்கலாம்

  2. yoga france,வன்னி முகாம்களில் வாடும் மக்களுக்கு உதவ ஆயிரக்கணக்கான அமைப்புக்கள் தயாராக உள்ளன. அவற்றை எல்லாம் திட்டமிட்டுத் தடுப்பது இலங்கை அரசுதான். இந்தக் காட்டுமிராண்டி அரசிற்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே உதவி செய்ய விடுவார்கள். அதற்கு அவர்களின் போர்க்குற்றம் பற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்கள் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தும் காட்டுமிராண்டித் தமிழர்களை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் முகாம்களில் உள்ள மக்களை விடுதலை செய்ய முதல் படி.

  3. திரு.கண்ணன் அவர்களே உங்கள் கருத்து உண்மை தான் ஆனால் முகாமில் அடைபட்டிருப்போர் வெளீயே வந்தால் தான் சாட்சியங்கள் வலுவாக இருக்கும் என்பது எனது வாதம நன்றீ

Comments are closed.