இலங்கையின் பங்கு சந்தை அதிகரிப்பு: சமாதான நம்பிக்கை

இலங்கையின் பங்கு சந்தை வீதம் 0.79 ஆல் அதிகரித்துள்ளதாகவும் யுத்தநிலையிலிருந்து சமாதானம் ஏற்படும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரூட்டர் செய்தி தெரிவிக்கின்றது.
சீ.எஸ்.ஈ சுட்டி 19.55 இலிருந்து 2,479.53 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய உயர்மட்டக் குழுவின் திடீர் விஜயத்திற்குப் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் அரச நிகழ்ச்சிநிரலின் உச்ச பகுதியாக அமைந்த்துள்ளது என நம்புவதாக முதலீட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக ரூட்டர் மேலும் தெரிவிக்கிறது.