இலங்கையின் தொழிற்சங்கவாதி பாலா தம்பு காலமானார்

bala_thampoeஇலங்கையில் இடதுசாரிகளின் மக்கள் போராட்டங்களுக்கும் தொழிலாளர் எழுச்சிக்கும் நீண்ட வரலாறுண்டு. சண்முகதாசன் தலைமையிலான மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியே முதல் முதலாக ஆயுதம் தாங்கிய மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிற்று. அவ்வேளையில் இனவாதத்தை முன்வைத்து வாக்குப் பொறுக்கிய தமிழரசுக் கட்சி ஆயுத எழுச்சியை அடக்குமாறு பேரினவாத அரசைக் கோரியது. இதன் மறுபக்கத்தில் பாலா தம்பு ரொஸ்கியவாதியாகத் திகழ்ந்தார். லங்கா சமசமாஜக் கட்சியில் மாணவனாக இணைந்த பாலா தம்பு, பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச சேவைத் துறையினரின் வேலை நிறுத்ததின் போது வேலைக்குச் செல்லாதவர்கள் பதவியிழப்பார்கள் என அரசு அறிவித்தது. அவ்வேளையில் வேலையை இழந்த பாலா தம்பு இலங்கையின் முக்கிய தொழிற்சங்களில் ஒன்றான சி,எம்யூ இன் தலைவரானார்.

1963 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அவசரகாலச் சட்டத்திற்கும் மதிப்பளிக்காமல் இலங்கை முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்ததிற்கு பாலா தம்பு தலைமை தாங்கினார்.

லங்கா சமசமாஜக் கட்சி 1964 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் இணைந்த போது அதனை எதிர்த்துக் கட்சியிலிருந்து வெளியேறினார்.

வாழ்நாள் முழுவதும் தொழிற்சங்கத்திற்காகவும் போராட்டங்களுக்காகவும் அர்ப்பணித்த பாலா தம்பு 01.09.2014 அன்று தனது 92 வது வயதில் காலமானார்.

8 thoughts on “இலங்கையின் தொழிற்சங்கவாதி பாலா தம்பு காலமானார்”

  1. He was addressing a trade union meeting at CEYNOR, Karainagar and he kept mentioning burning buses and other violence methods as means of gaining worker rights. Mind you at that time the workers there were well paid compared to the rest in the peninsula. I wasn’t impressed with his vitriol.

  2. another thing that surprised me was that he addressed the workers in English. I cannot remember any non-Tamil speaking attendee there. He was a Jaffna Tamil wasn’t he, born in Jaffna and later educated at Royal College ? That looked very fake to me.

 1. எழுபதுகளில் கிழக்கு மாகாணத்தில் கேட்பாரற்றுக் கிடந்த காணியில் நிலமில்லாத மக்களைக் கொண்டு போய் துப்பரவாக்கி நெற்பயிர் செய்வித்தார். அறுவடைக்குச் சற்று முன்னதாக பேரினவாதப் பேய்கள் அங்கிருந்து எல்லோரையும் விரட்டிவிட்டு சிங்களவர்களைக் குடியேற்றியது. தொழிற்துறை வழக்குகளில் இவரும் தோழர் சண்ணும் தொழிலாளர்களுக்காக தோன்றி வாதாடும் போது தமிழரசுவாதிகள் முதலாளிகளுக்காக வாதாடுவாரக்ள்

  1. Can you please elaborate in which part of the East did this happen. Can you also tell which Tamil Arasu attorneys appeared for which Mudalalis while Bala papered for the workers?

 2. இஅவர் அபபடி சொல்லிகொள்ளும் ஒன்றும் பண்னவில்லை, எல்லாம் சும்மா வாய் சவடால் தான், கொழும்பில் உள்ள தனியார்நிருவனங்களுக்கு எதிராக இவர் என்ன போராட்டம் செய்தார்

  1. பால தம்பு என்றில்லை இடது சாரி தலைவர்கள் என்றாலே வாய் சவடால் பேர்வழிகள்தான்..

 3. ##. லங்கா சமசமாஜக் கட்சியில் மாணவனாக இணைந்த பாலா தம்பு, பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.##

  இந்த காடுரையில் பாலா தம்பு இடது சாரி ஆய்த போராட்டத்துக்கு தலமை தாங்கியவராகவும் ( ?? ) தமிழரசுக்கட்சியின் அரசியலுக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியடைந்தார்கள் என்பதுபோலவும் கூறப்பட்டுள்ளது.
  மொத்தத்தில் இடது சாரி தலைவர்கள் குறிப்பாக லங்கா சமசமாஜக்கட்சி தலைவர்கள் இனவாதத்திற்கு உட்படாத தலைவர்கள் என்பது போலவும் ஒவரா பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது .

  டட்லி அரசுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவு கொடுத்தபோது ” டட்லி வயிற்றில் மசாலா வடை என இனவாதம் கக்கிய லங்கா சம சமாஜ கட்சியில் பால தம்பு போன்ற எப்படி குப்பை கொட்டி கொண்டிருந்தார் என்பதை கட்டுரையாளர்தான் விளக்க வேண்டும் ?

Comments are closed.