இலங்கையின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

24.09.2008.

இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

BBC.

One thought on “இலங்கையின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.”

  1. பிரச்சாரம் மட்டுமல்ல பால் ஊட்டும் தாய்க்கு கிடைக்கும் கவனிப்பு ,ஆறுதல், குடும்ப உறுப்பினர்களின் பரிவு என சொல்லிக் கொண்டே போகலாம்.

Comments are closed.