இலங்கையின் என்னதான் நடக்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி.

நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் இந்த விவகாரம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.லிங்கம்பேசினார். அவர், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட அகதிகளை சொந்த இடங்களுக்கு மீண்டும் அனுப்பி வருவதாக இலங்கை தெரிவித்துவந்த போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.இன்னும் அவர்கள் முகாம்களை விட்டு சொந்த இடங்களுக்கு குடியேற வழி செய்யவில்லை. அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கை தொடங்க போதிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு கொடுக்கவில்லை.முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் நிவாரண உதவிக்காகவும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவி செலவிடப்படாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. இந்த நிதியை இலங்கை அரசு வேறு நோக்கங்களுக்கு திருப்பி விடுகிறதா என்பது பற்றி தெரிவிக்கவேண்டும்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை முடித்துக்கொண்ட இலங்கை, இன்னும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தீர்வு காணாமல் காலம் தாழ்த்திவருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தியா அனுப்பிய நிவாரண உதவிகள் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. எனவே உண்மையில் என்ன நடக்கிறது.இலங்கையில் வாழும் தமிழர்கள் என்னென்ன பிரச்சனைகளுடன் காலம் தள்ளுகின்றனர் என்பதை அறிந்துகொள்ள அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்பி அறியவேண்டும். இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்த நிலைக்குழு உறுப்பினர்களாகவோ அல்லது மக்களவைத் தலைவரால் நியமிக்கப்படுபவர்களாகவோ இருக்கலாம்’’ என்று பேசினார்.