இலங்கைப் பொருளாதாரம் : சரிவை நோக்கி..

home_pic_2இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தவணை மற்றும் வட்டி என்பன அரசாங்க வருமானத்தைவிட அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் மொத்த தேசிய வருமானமான 878,225 மில்லியன் ரூபாவாகும். இதில் வருடத்திற்கான வட்டியாக 250,438 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன், கடன் தவணையாக 475,000 கோடி மில்லியன் செலுத்தப்பட வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் செலுத்த வேண்டிய தவணை மற்றும் வட்டி என்பன 725,438 மில்லியன் ரூபாவாகும்.
எனினும், மத்திய வங்கியின் அறிக்கையின்படி அரசாங்கத்தின் உத்தேச வருமானமானது 200,000 மில்லியனாக குறைவடைந்துள்ளது. இதனடிப்படையில், அரசாங்கத்தின் மொத்த தேசிய வருமானமானது 378,225 ரூபாவாகக் குறைவடையும் என மதிக்கப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.