இலங்கைத் தேர்தல் – silent protest : டி.அருள் எழிலன்.

தற்காலத்தில் தமிழர்கள் தங்களுடைய தலைமையாக பேரம் பேசும் சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நமது நண்பர்கள் சிலர் கூறியிருந்தார்கள்.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் தொடர்பாக சரத்பொன்சேகாவுடன் பேசிய பேரத்திற்கான? சம்மட்டியடியை சிங்கள மக்களும், டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்தன், இன்னமுள்ள புலம் பெயர் தன்னார்வக்குழுக்கள் ராஜாபட்சேவுடன் தமிழர்கள் தொடர்பாக பேசிய பேரத்திற்கான சம்மட்டியடியை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் இப்போது தேர்தல் மூலம் வழங்கியிருக்கிறார்கள். தமிழர்களுக்கு பேரம் பேசும் என்ற ஒரு வரியே கிடையாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது சிங்கள பேரினவாதம்.

நடந்து முடிந்துள்ள இலங்கையின் ஆறாவது அதிபர் தேர்தல் முடிவுகள் குரித்து பலவாரான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதை சிலர் நேர்மையான தேர்தல் இல்லை எனவும் ராஜபட்சே குடும்பத்தினர் ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையரை நிர்பந்தித்து வெளியிட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தீவு முழுக்க வாழும் வடக்கு தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லீம் மக்கள், ம்லையகத் தமிழர்கள் என சிறுபான்மை இனத்தின் இம்மூன்று சமூகங்களிடமும் ஒரு விதமான அச்ச உணர்வு படர்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. ஆனால் இலங்கை வாக்காளர்கள் இன ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள் என்று சொல்பவர்களை சிறந்த நகைச்சுவையாளர்கள் என்று வேண்டுமென்றால் சொல்லலாம் இன ரீதியாக பிளவு பட்ட ஒரு சமூகம் இப்படியான ஒரு வெளிப்பாட்டை கொண்டிப்பதன் நியாத்தை இவர்கள் அங்கீகரித்தத் தவறுகிறார்கள். நீண்ட கால இலங்கையின் இன முரண்களை மறைத்து முப்பதாண்டுகால புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வைத்தே இனமுரணிற்கான தீர்ப்பெழுதிய இவர்கள் இப்போது புலிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், சிறுபான்மை மக்களினங்கள் அரசியல் ரீதியாக ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதை கண் கொண்டு காணத் தவறுகிறார்கள்.

இலங்கை இரண்டு தேசிய இனங்கள் வாழும் முரண்பட்ட ,  பிளவுண்ட ஒரு தீவு இத்தீவில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழும் சாத்தியப்படுகள் முழுக்க அறுந்து விட்டதாக நான் தொடர்ந்து எழுதிய போது அதை இனவாதம் என்றவர்கள். தமிழ் ம்ககளின் பிரச்சனைகளை புலிகளின் போராட்டத்தோடு சேர்த்து மணல் மூடிப் புதைக்க முயர்ச்சித்தனர். இப்போது தெற்கு வடக்காக நாடு பிள்வு பட்டிருப்பது தெரியவருகிறது. இப்போது இரு சமூகங்களுமே இன ரீதியாக தங்களின் விருப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

தமிழ் ம்ககளின் இத்தேர்தல் விருப்புகளை நான் இன ரீதியான வெளிப்பாடாக நான் காணவில்லை. பெரும்பான்மை வாதமும் பேரினவாதத் தீயும் சிங்கள மக்களையே பற்றிப் படர்ந்திருக்கிறது. அவர்கள் கடந்த எட்டு மாதங்களாக வெற்றிக் களிப்பில் மிதந்தார்கள். இப்போது மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். தமிழ் மக்களோ தோற்றுப் போனதான உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தோற்றுப் போனது அவர்களின் அரசியல் உரிமைகள் மட்டுமல்ல குடிமைச் சமூகங்களின் வாழ்வுக்கு அடிப்படையான சிவில் உரிகளையும் இழந்திருக்கிறார்கள். முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எவராவது இல்லங்களுக்கு திரும்பினார்களா என்றால் இல்லை அவர்கள் இன்னும் வனாந்தரங்களில் கூடாரம் அமைத்து நாடோடிக் கூட்டங்களைப் போல வாழ்கிறார்கள். சிங்களர்க்ளுக்கு இணையான அல்லது சிங்களர்களை விட நீண்ட கால வரலாறு கொண்டதுமான பழங்குடி சமூகமான தமிழ் மக்கள் இன்று அவர்களின் பாரம்பரீய நிலங்களை இழந்து நிற்கிறார்கள்.
வீட்டிற்கு ஒருவரை இழந்திருப்பது , கணவனை இழந்த கைம்பெண்கள், ஊனமுற்றோர். மனச்சிதைவு அடைந்தோர் என இதுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மன நிலை. இதே காலக்கட்டத்தில் வீட்டிற்கு ஒருவரை போரில் இழந்து அன்றாடம் தன் பிள்ளையின் உடல் இராணுவ டிரக் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்படுமோ என்கிற அச்சம் சிங்களர்களிடம். இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அதுவே பெரும்பான்மை வாதமாக மாற்றப்பட்டது அந்த பெரும்பான்மை வாதத்தை குறிவைத்தே ராஜபட்சே அதிபர் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தேர்தலை அறிவித்தார். ஒரு சிறுபான்மை இனச் சமூகத்தை வதைப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் தந்திரத்தை மகிந்த கையாண்டார். உலகெங்கிலும் தற்காலிக வெற்றியை ஈட்டுவரும் பெரும்பான்மைவாதமும் இதற்கு துணை நின்றது.

மிகவும் கவனமாக சிறுபான்மை மக்கள், அரசியல் கைதிகள், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட ம்க்கள் என்று எந்த விதத்திலும் சிங்கள மக்களின் மனங்களில் தோன்றியுள்ள உற்சாகத்தை குலைக்கும் விதமான எந்த நடவடிக்கையிலும் ராஜபட்சே ஈடுபடவில்லை. அவர் நினைத்த மாதிரியான பலனும் அவருக்குக் கிடைத்தது. பெரும்பாலான சிங்கள மக்கள் ராஜபட்சேவுக்கு வாக்களித்திருக்கும் அதே வேளையில் தமிழ் மக்கள் ராஜபட்சேவுக்கு எதிராக சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

 ஆனால் சரத்பொன்சேகாவோ போரின் வெற்றியில் ராஜபட்சேவை விட நேரடியாக களத்தில் நின்ற இராணுவத்தின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய தனக்கே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பினார். ஏனைய எதிர்கட்சிகளுக்கோ வெற்றியின் பயனை ராஜபட்சே குடும்பம் மட்டுமே அனுபவிக்கிறதே என்கிற வருத்தமும் அதிகார வெறியுமே அவர்களை சரத்பொன்சேகாவை பொதுவேட்பாளராக ஏற்றுக் கொள்ள வைத்தது.

 தமிழ் மக்களுக்கோ இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமில்லை கோவணமே இல்லாத நாட்டில் தேசியக் கொடி கிடைத்தால் ஒரு மனிதன் என்ன செய்வானோ அந்த நிலையில்தான் இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளனர். சிங்கள மக்களிடம் இயல்பான உணர்வாக கட்டி எழுப்பபட்டிருக்கும் தேசிய வெறி ஒரு பக்கம். துண்டாடப்பட்டு வாழ்விழ்ந்து நிற்கும் தமிழ் மக்களின் கையாலாகத்தனம் இன்னொரு பக்கம் என தமிழ் மக்களின் ஆற்றாமைகளை அறுவடை செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணையோடு களமிரங்கி மக்களின் இயல்பான உணர்வை இத்தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் அறுவடை செய்திருக்கிறார். அவர் எப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேரம் பேசினாரோ அப்போதே சிங்கள மக்களிடம் அவர் தோற்றுப் போனார். தவிறவும் எதிர்கட்சிகளின் அணியில் நின்ற ஜே.வி.பி, சரத்பொன்சேகா, ரணில், சந்திரிகா என இவர்கள் அனைவருமே நேற்றுவரை இனவாதம் பேசியவர்கள்தான்.

 ஈழ மக்களின் படுகொலையை ஆதரித்து நின்ற ஜே.வி.பி கிளிநொச்சி வீழ்ச்சியை ஒட்டி இனிப்புக் கொடுத்து அதை கொண்டாடியதோடு ” தமிழ் மக்களுக்கு இனி அரசியல் தீர்வு அவசியம் இல்லை ” என்று வெளிப்படையாகவே அறிவித்தது. இப்படியான பழைய பாசிஸ்டுகளோடுதான் தமிழ் தேசியக் கூட்டணி பேரம் பேசியது.

ஆனால் தமிழ் மக்களோ மிகவும் தெளிவாக நாங்கள் பிளவுபட்டிருக்கிறோம் நீங்கள் பெரும்பான்மையானவர்கள் என்றால் நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் இறையாண்மை கொண்ட சிறுபான்மை ம்ககள் என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இதைத்தான் வக்காளர்கள் இன ரீதியாக பிளவுண்டிப்பதாக இலங்கை முஸ்லீம் காங்கிரசும் இன்னும் சிலக் கட்சிகளும் அடையாளம் கண்டு சொல்கின்றன. என்னைப் பொறுத்தவரை இத்தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை வெறிக்கு எதிரான சிறுபான்மை மக்களின் அமைதியான எதிப்பு ‘’silent protest” ஆமாம் பேச முடியாத நிலையில் மௌனிகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

என்னைக் கேட்டால் தமிழ் மக்கள் பேரினவாதிகளுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு இதுதான். வக்காளர்கள் இன ரீதியாக பிளவுண்டிருப்பதை அரிய பல கண்டுபிடிப்புகள் மூலம் பதறிப் போய் நிறுவ முயலும் இவர்கள் சிறுபான்மை மக்களினங்கள் மீது ஏவப்பட்ட இனவெறி போக்கை கடந்த காலங்களின் கண்டுணர்ந்தார்களா? என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தப் பிளவு அவசியமானது. அதே சமயம் சிறுபான்மை முஸ்லீம்கள், மலையக மக்கள், தமிழ் மக்கள் இணைந்து செயல்பட்டு தங்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நீண்ட கால எதிர்ப்பியக்கங்களை கட்டு எழுப்புவதற்கான சாத்தியங்களையும் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கினறன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் புலிகளுக்குப் பிறகு தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்ளவதற்கான வாய்ப்பு ஒன்று கூட்டமைப்புக்கு உருவாகியுள்ளது.
 ஆனால் பேரம் பேசும் நலன் என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சிங்களர்களிடம் அடகு வைத்தால் இப்போது சிங்களர்கள் சரத் பொன்சேகாவிற்கு என்ன விதமான பதிலைக் கொடுத்திருக்கிறார்களோ அதே விதமான பதிலை நாளை தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள்.மக்களுக்கு அடிப்படைத் தேவை என்று அவர்கள் முன் எழுந்து நிற்கிற சிவில் உரிமைகள் சரி செய்யப்படும் அதே வேளையில் தீவின் அரசியல் முரணிற்கான தீர்வுகள் களையப்பட வேண்டும்.

கூட்டமைப்போ இன்னமும் இந்தியாவிடமும், எதிர்தரப்பிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. வன்னி மக்களின் நிலங்கள் பறிபோவதையோ, இன்னும் அதிகமான சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட இறுப்பதையோ கூட்டமைப்பால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதும் தெரியவில்லை. பேரம் பேசி எதையும் வாங்கலாம் என்ற நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இருக்கலாம்.

ஆனால் பேரம் பேசி தமிழ் மக்களுக்கு எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையில் பேரினவாதிகள் இல்லை. ஒரு வேளை தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏதேனும் சலுகை காட்டினார்கள் என்றால் சிங்கள மக்களுக்கு பேரினவாதிகள் ஏற்றிய போதை தெளிய வாய்ப்பிருக்கிறது. அதுவே ராஜபட்சேவுக்கு எதிர் அலையாக உருவாகும். இதைச் சரியாக புரிந்து கொண்ட ராஜபட்சே ‘’பிரபாகரனின் பெற்றோரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ள மாட்டேன் ” என்று சிங்களர்களை குஷிப்படுத்தினார். அந்த உற்சாகமூட்டலுக்கு சிங்கள மக்கள் வழங்கியுள்ள பரிசுதான் இது.

அய்யா இலங்கை பிளவுண்டிருக்கிறது. ஆமாம் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டதற்காக பெருமைப்பட்ட பின்னரும் இலங்கை இரண்டு தேசிய இனங்களால் பிளவுண்டிருக்கிறது.ஒன்று ஒடுக்கும் தேசிய இனம். இன்னொன்று ஒடுக்கப்படும் தேசிய இனம். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்ப்பியங்களை வலுப்படுத்துவதற்கான காலமாக இது உருவாக வேண்டும் என்பதே என் ஆசை.அதை இந்தியா நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்வோம். இலங்கைக்குள் ஒன்றை ஒன்று துறுத்திக் கொண்டிருப்பது இரண்டு பன்மைத் தன்மை கொண்ட தேசிய இனங்கள். இதைப் புரிந்து கொள்வது நல்லது.

20 thoughts on “இலங்கைத் தேர்தல் – silent protest : டி.அருள் எழிலன்.”

 1. கூட்டமைப்பின் சரத் ஆதரவு முடிவு வெறும் மூவரால் எடுக்கப்பட்டு,ஏனையோரிடம் திணிக்கப்பட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது.எது எப்படியோ,தேர்தல்(ஜனாதிபதி)முடிந்து விட்டது!மகிந்தர் வென்றதாக?அறிவிக்கப்பட்டிருக்கிறது!அடுத்து,பாராளுமன்றம் அதே சூட்டில்,கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்நடத்தப்படுமென்று சில அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி வழங்கிய மகிந்தரும் புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னரே,அதாவது,புதிதாகத் தெரிவு செய்யப்படும் தமிழர் தரப்பு பிரதினிதிகளுடன் இனப் பிரச்சினை?குறித்த தீர்வு குறித்து பேசப்படுமென்று சொல்லியிருக்கிறார்!இதிலும் ஒரு மர்மம் தொக்கி நிற்பதுதெரிகிறது!அதாவது,த.தே.கூ வோ,முஸ்லிம் காங்கிரசினரோ,இ.தொ.கா வோ,வேறும் மகிந்தரை எதிர்த்த எவருமே பாராளுமன்றுக்கு தேர்வு செய்யப்படும் சாத்தியமே இல்லை!அடாவடித் தனம் தலைவிரித்தாடப் போகிறது!ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற என்ன,என்ன முயற்சிகள் கையாளப்பட்டனவோ,அத்தனையும் கைக் கொள்ளப்படும்!புதியதாக ஒரு தேர்தல்கள் ஆணயாளர் தெர்வு செய்யப்படுவார்!ஒரு வேளை அவரும் ராஜபக்ஷே குடும்ப உறுப்பினராகவுமிருக்கலாம்!ஆனாலொன்று,அவலைநினைத்து உரலை இடித்த கதையாக பெரும்பான்மையின மக்களின் கதையும் மாறலாம்!!னிலவுக்கு ஒளித்து பரதேசம் போக முடியுமா என்ன?

 2. லண்டனிலிருந்து சிலர் போய் மகிந்தவுக்கு இரகசியமாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் வேலை செய்வதாகச் சொல்கிறது லண்டன் பல்லி ஒன்று………….

 3. பனையால் விழுந்தவனை மாடேறீ மிதித்த கதையாய் வாழ்க்கையில்நம்பிக்கை இழந்தவனுக்குநம்பிக்கை கொடுக்காது எல்லாம் முடிந்தது எழும்ப மாட்டாய் என்றூ தன்னம்பிக்கையை பறீக்கின்ற முயற்சியில் இறங்காது,எழுந்து நடக்க வைக்கும்நம்பிக்கைகள் தரப்பட வேண்டும்.இருட்டை அகற்றூம் விதமாய் விளக்குகள் ஏற்றப்பட வேண்டும்.இயற்கை மனிதனுக்கு வாழ்க் கற்றூக் கொடுக்கிறது தைரியத்தை போதிக்கிறது..ஒவ்வொரு தடையும் வாய்ப்ப்க்களே தமிழன் வாழ்வான்.தமிழ் வாழும்.

 4. முன்னர் புலியை எதிர்த்தோரில் பெரும்பாலோனோர் இன்று மகிந்த சிந்தனையை பரப்புகின்றார்கள். மகிந்தவின் வெற்றியை இவ் வார இறுதி இரவு விருந்துகள் பல.

 5. The author is right in his conclusion that the elections have confirmed the existence in the island of two distinct Nations with diametrically opposed viewpoints. The diametrically opposed views are due to the oppressor Nation poissoned with the idea of the oppressed Nation. The author is wrong in basing the conclusion on the ethnic divide in the support to Sarath and Mahinda. These are the misled people with those misled by the Sampanthan gang supporting Sarath and those misled by the paramilitaries supporting Mahinda. But fortunately the total of the misled (i.e. those who voted) are less than those who did not vote or boycotted or who felt that no solution is possible to their problems by the votes. This is the sound basis for the author’s conclusion and shows that the majority of the Tamil speaking Nation (including all three ethnic groups in the Nation) is not believing that any justice is possible by voting. The average turnout for the election was 74.5% and all districts in Eelam polled below the average and all districts in Sinhalam polled above the average. This is what should be celebrated and not the variation of voting for the two Devils. What the Sampanthan gang and the paramilitaries do before the parliamentary elections is still not clear but if a group committed to just and equitable Eelam with no tailing with any of the Sinhala communal parties, the Tamil people are sure to rally but they need to realistically explain their activities and be prepared to resist the oppressor in any form imposed by the oppressor.. Otherwise it will be lopse talk and no action.

 6. “President Mahinda Rajapaksa’s victory is the result of the near-total support of the Sinhalese. He is yet to earn the trust of the Tamils. There is no gainsaying that the LTTE, a terrorist organisation, needed to be defeated but it is also true that the tendency of the Sinhalese majority has been to deny the Tamils their due. The President should hasten the promised political solution. India, too, should take interest in the affairs of the island nation in the larger interest of democracy.” – N.R. Sathyamurty, a reader of “The Hindu”.

  1. Dear Alex
   I am not sure if it is the same Sathyamurthy who writes a column in the Sri Lankan Daily Mirror. The one who writes to the DM is a mellow voice of the Indian establishment.
   The point is that the government went far beyond defeating the LTTE. Nne of the chauvinist governments have shown any interest in solving the problem. But Tamil narrow nationalism has much to answer for in the alienation of the Tamils from ordinary Sinhalese. Rajapakse will do nothing and India knows it and, despite all their wishes, commentators know it.
   Sinhala chauvinism has reached the village in the past few years, thanks to the brutal attacks on Sinhala civilians besides the systematic campaign by the likes of the JVP.
   There is no easy way out.
   The country is in deep crisis. It cannot even be imagined now that the salvation of the Tamils can be separated from that of the rest of the country from the impending oppressive neo-fascist rule. The picture would have been no different had the General won.

 7. புலிகளை அழிக்கிறோம், புலியின் தலைமையை அழிக்கிறோம் என்று புலித்தலமையுடன் சேர்த்து அப்பாவி தமிழ் மக்களையும் அழித்த சிங்களவரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் தலைமையில் நடக்கும் கைதுகள், இடமாற்றங்கள் நாட்டின் எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்பட்டுத்தப் போகிறது……இது எதிர்பார்த்தா?…… சரத் தோற்றாலும் அவரின் எஜமனாருக்கு கொண்ட்டாட்டமே!

  மேலும் கடைசியாக கிடைத்த செய்தியின்படி,
  Twelve top Sri Lanka army officers including three Major Generals have been asked to retire from the service with immediate effect over a ‘political conspiracy’ while in the service, a highly placed military official said yesterday.

  These officers have been asked to retire as their service is no longer required to the Army,” the military official told the Daily Mirror on the condition of anonymity.

  He also said that among these officers, there were two Brigadiers and Colonels, Lt. Colonels and Captains.

  “The Army Headquarters had already informed these officers about this action,” the official added. He said these officers were close to former Army Commander General Sarath Fonseka.

  He further said that necessary legal action would be taken against these officers for the charges against them under the normal law of the country.

  The latest development comes just hours after a series of transfers of the army’s top most officers. The Criminal Investigations Department (CID) has already commenced inquiries into the alleged ‘political conspiracy’ that was supposed to have taken place during the last week’s Presidential polls.

  Last Friday the CID arrested Brigadier Duminda Keppetiwalana, a serving officer who is the Commandant of the Army Training School in Ampara.

  He held the position of Military Assistant when Gen. Fonseka was Commander of the Army. Accordingly, more than 20 other retired officers and soldiers are now in custody and more are due to be arrested. Another official source said that a large number of senior and junior officers, who have been transferred to the office of the Chief of Defence Staff are to face inquiries in connection with the alleged ‘political conspiracy’.

  Source:m Daily Mirror

 8. புலிகளும் இல்லாத நிலையில், இரு ஜனாதிபதி தேர்தல்களிலும் சிங்கள பெருன்பான்மை வாக்குகளுடன் ஆட்சியமைத்த அரசிலிருந்து கிடைக்கும் புதுத் தகவல்கள்.

  Personality cult:

  “The government television and radio is carrying on a heavy personality cult around President Mahinda Rajapakse. Songs are sung constantly portraying him as the greatest son of the soil living in present times and comparing him to the heroes of the Sinhalese in the past. One song calling for a victory for him is sung with dancers and folk music constantly over the television. Many voice cuts from various persons are also produced constantly portraying him as the savior of the nation. In all this the opposition is portrayed as those who are treacherous to the nation.”

  Twelve top brass army officers asked to retire:

  “The Daily Mirror reported today that 12 top brass army officers have been asked to retire with immediate effect allegedly over a ‘political conspiracy’. These include three Major Generals. The Daily Mirror quoting a high placed military official who said, “These officers have been asked to retire as their services are no longer required to the army.” According to this report this group also includes two Brigadiers and Colonels, Lieutenant Colonels and Captains. The report states that these officers were close to the former army commander, Sarath Fonseka. The Criminal Investigation Department, the CID has commenced inquiries into an alleged political conspiracy that is supposed to have taken place during last week’s presidential election. As stated above, the retired army general, Sarath Fonseka, has categorically denied any such conspiracy and has stated that this was an attempt to create persecution against him and others for their participation in opposing the government in the elections.

  There are reports of large numbers of officers in the army being called to head quarters and told to go home as their services are not required. Under the Army Act, an officer cannot be sent home like that without a summary trial or court martial. This is seen as an attempt to eliminate those who have been loyal to the former commander of the army and to build direct loyalties to the Secretary of Defense Gotabaya Rajapakse, who is virtually running the military. The politicization of the armed forces on the basis of direct political loyalties would create in the armed forces the similar problems of inefficiency and corruption, as in other public services.”

  For more in full:
  http://www.ahrchk.net/statements/mainfile.php/2009statements/2394/

  And for related news:

  “It is now up to the re-elected President Rajapakse, during his second term, to address the serious challenges facing the country. How Lankan society will respond to the president – and the office of the executive presidency itself, including the inherent centralisation of power – is what will play out in the next few years. Guarding against abuse of democratic institutions and ensuring rule of law will neccessarily have to be the first step. Yet time and again, Lankan society has shown its potential for democratic mobilisation, and the people’s ability to challenge regimes – even when the leaders in power thought they were at their strongest.”
  http://www.himalmag.com/The-new-Rajapaksean-regime_nw4186.html

 9. it could happend to anyone .criminal like anybody else they arent special kind.there for mahinda need to arrest them.what wrong alex.arent you gone mad ?

 10. செய்தி:
  “வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 19பேர் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடத்திற்கான மாணவர்கள் கற்கை நெறிக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை கல்லூரி மூடப்படும் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 1990ம் ஆண்டு இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது வருடாந்த 200 மாணவர்கள் கற்கைநெறிக்கு இணைந்து கொள்ளப்பட்டார்கள் கடந்த ஆண்டு 9மாத காலம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் கல்லூரியின் தங்கியிருந்தனர் இதனால் கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட பல சேதமடைந்திருந்தது. இடம்பெயர்ந்தவர்கள் வெளியேறிய பின்னர் கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்ய சுமார் 50மில்லியன் ரூபாய் தேவைப்படும் என கல்லூரி நிர்வாகம் மதிப்பீடு செய்திருந்தது. திருத்த வேலைகள் மேற்கொள்ளாமல் புதிய மாணவர்களை கற்கைநெறிக்கு சேர்த்து கொள்ளமுடியாதுள்ளதாக நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள நிலையில் உடனடியாக வேலைகள் மேற்கொள்ள நிதி பற்றாக்குறைவு உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டுக்கு கற்கை நெறிகளுக்கு மாணவர்களை சேர்ந்து கொள்ளும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியினை மூடிவிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.”

  அன்று, “எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுமிடத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு சிறந்தவொரு அரசியல் தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்இ புலிகளின் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை அரசு ஆரம்பித்து செயற்படுத்தி வரும் இவ்வேளையில் இவற்றைக் குழப்பி எமது சமூகத்திற்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாகவுள்ளோம். ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகள் தமக்குள் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளையும் கருத்துக்களையும் கொண்டவை என்பது வெளிப்படையானது. இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் பாராளுமன்றம் எப்போதும் குழப்பகரமானதாகவே இருக்கும். தனக்கென ஒரு பலத்தை பாராளுமன்றத்தில் கொண்டிராத வரை சரத் பொன்சேகாவினால் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது. மகிந்த ராஜபக்ஸவினது அரசாங்கத்திலும் இனவா தகொள்கையுடையவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் மகிந்தவிடமுள்ளது. இவற்றை கருத்திலெடுத்தே நாம் வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்றோம். இவ்வாறு நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.” இது திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நேர்மையும், அழகான சொற்பிரயோகமும்.

  முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், அமரர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு தனது அஞ்சலியை செலுத்திய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மனித நேயம் என்பது, எழுத்திலும் பேச்சிலும் இல்லை; நடைமுறையில் இருக்கிறது.
  இவ் மனித நேயம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என அவர் சார்ந்த மக்களும் விரும்புகிறார்கள்.

  இன்று, “மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.”

  “எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்”

  “இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும்”

  “இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.”
  திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நம்பிக்கை வீண் போகாது, போகக்கூடாது என்று நாமும் நம்புகிறோமா இல்லையோ பொறுத்திதிருந்து பார்ப்போம்.

  “மேலும், திருமலை மாவட்டம் மூதூர், கிண்ணியா பிரதேச கடற்பகுதியில் இரவில் மீன்பிடிக்கச் செல்வதற்கு கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (31.01.2010) தொடக்கம் மீண்டும் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனால் பிரதேச வாசிகளது ஜீவனோபாயம் பாதிக்கப்படக்கூடிய நிலமை தோன்றியுள்ளது. இலங்கையின் 6வது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இம்மாதம் ஆரம்பத்திலிருந்து (05.01.2010) இப்பகுதியில் இருந்தும் எவ்வேளையிலும் கடலுக்கு மீன்படிக்கச் செல்வதற்கு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியுடன் இணைந்து கிழக்குமாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான விஜயவிக்கரம தெரிவித்திருந்தார்.

  இதற்கிடையில், இந்த செய்தியின் அர்த்தம் என்ன? வாசகர்கள் அல்லது ஜனாதிபதியின் கொள்கைகளை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களுக்குத் தெளிவு படுத்துங்கள்,

  “இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் இந்நிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13வது அரசியலமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ்தரப்பு கோருகிறது இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.”

  ஓர் செய்தியில், “வவுனியாவில் தங்கியிருந்து தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை தொடர்பு கொண்டு தேர்தல் முடிவுகள் பற்றிய நிலைவரங்களைக் கேட்டபோது, மகிந்த ராஜபக்ச அவர்கள் 50ற்கும் மேற்பட்ட விகித வாக்குகளைப் பெற்று இம்முறை தேர்தலில் வெற்றியீட்டுவாரென்று கூறமுடியுமென்று தெரிவித்துள்ளார்.”
  “வன்னி மாவட்டத்தின் கணிசமானளவு மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருப்பதையும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்”

  அத்துடன் அதே செய்தியில், “ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் இத்தருணத்தில் இலங்கையில் இயங்கும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. லங்காஈநியூஸ், இன்போ லங்கா உள்ளிட்ட சில இணையத்தளங்கள் இணைய வழங்குநர்களால் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மக்களின் கருத்தறியும் சுதந்திரத்தை இந்த நடவடிக்கை பெரிதும் பாதிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  இதற்கிடையில், மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை தோன்றியுள்ளது. மன்னார் நகரப் பகுதியில் உள்ள பல இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டு சோதனை கெடுபிடிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

  ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல விதமான கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாபெரும் வெற்றியீட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கட்கு தமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளும் நிலையிலும் தமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் நிலையிலும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியினை மூடிவிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையிலும், இவ் மன்னர் பிரதேசவாசிகளின் துயர் துடைக்கவும் உதவி செய்வாரா?

  மேலும், தற்போது ஜனாதிபதி தேர்தலின் பின் திருமலை மாவட்டம் மூதூர், கிண்ணியா பிரதேச கடற்பகுதியில் இரவில் மீன்பிடிக்கச் செல்வதற்கு கடற்படையினர் அனுமதி வழங்க மறுத்துள்ள வேளையில், இப் பிரதேச வாசிகளது ஜீவனோபாயம் பாதிக்கப்படக்கூடிய நிலமை தோன்றியுள்ள நிலையிலும் இவர்கள் கடலுக்கு மீன்படிக்கச் செல்வதற்கு வேண்டிய உதவிகளையும் சம்பந்த்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்திக் கொடுப்பாரா?

  இதனிடையில் தற்போது கிடைத்த செய்தியின் படி, மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இரவு நேர மீன் பிடிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் மறுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் முன் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளில் இரவு நேர மீன் பிடிப்புக்கான அனுமதியினை கடற்படையினர் வழங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கடற்றொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையுமே கடலில் தொழில் செய்ய முடியும் எனவும் இவ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  அத்துடன் ‘பாஸ்’ நடைமுறையும் அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் தாமதத்தின் மத்தியிலே தற்போது தொழிலுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் இவ் மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர்.

  அத்துடன் யாழில், தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வடக்கில் குறைவான வாக்குகள் கிடைக்கப் பெற்றதாகவும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ் ஊடகங்கள் பிரதேசமக்களை பிழையான வழியில் இட்டுச் சென்றுள்ளதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் வெற்றியீட்டுவார் என சில ஊடகங்கள் அறுதியிட்டுக் கூறினதாகவும் மேலும், வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழும் தங்களது உறவினர்களின் நிதியுதவியைப் பெற்று வாழ்கின்ற நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான சில இராணுவ அதிகாரிகளே குடாநாட்டில் குண்டுகள் வெடிக்கக்காரணமென்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தல்களில் தமது வாக்குப்பலத்தை பரீட்சிக்க இத்தேர்தலை பயன்படுத்திக் கொண்டனர் என்றும் சமூக சேவைகள் அம்மைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்கள்.

  பின், ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப் பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகப் போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும், எனினும் ஜனாதிபதி இதுதொடர்பில் எவ்வித பதில்களையும் இதுவரை வழங்கவில்லை என்றும், இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள ஒரு அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஹர்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தளங்கள் மூடப்பட்டிருந்ததுடன் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளனவென்றும், எனினும் இதனை தடுத்து மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக அமைச்சர் தேவானந்தா நகரின் வியாபார நிலையங்களுக்கு சென்று வியாபாரதளங்களை திறக்கக் கோரி வந்ததாகவும், பின் மக்களின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தும் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றும் தமது இராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்து வாயஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

  ஆனால் அதே ந

  ரத்தில், அம்மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பிரசாரத்தில் சரத் பொன்சேக்காவை விமர்சிப்பதை தவிர்த்திருந்தார் என்பதுடன் அவரது வெளிநாட்டு பிரமுகர்கள் கூட சரத்தை விமர்சிக்க தயங்கினர் …காரணம் ஒரு வேளை சரத் வந்தால் இணக்க அரசியல் செய்வோம் என்ற எண்ணமோ தெரியவில்லை. அத்துடன் அவரின் கூட்டணி கட்சி சார்பாக ஒரு மந்தமான பிரசாரமே யாழ்ப்பாணத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

  தற்போது, எதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி கட்சி வீணைசின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், . யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தனது கட்சி மக்களின் செல்வாக்கை இழந்துள்ளதை காண்பிப்பதாக அமைந்துள்ள போதிலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதனை முறியடிக்கும் விதத்தில் அமையும் என்றும், யாழ்மாநகர சபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பிஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு திட்டமிட்டவாறு மாநகரசபையின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்ற முடியாமல் போனதனையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்ற பஷில் ராஜபக்ஷ அம்மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பலவியூகங்களை வகுத்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

  அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும், தலைவரும், மாண்புமிகு கவுரவ சமூகசேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், ஈ.பி.டி.பி தலைவர் என்ற ரீதியிலேயே யாழ்ப்பாண மக்கள் தம்மை அறிந்து வைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளர். ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதனால் தமது வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியமிருப்பதாக குறிப்பிட்ட அவர் எவ்வாறெனினும், ஐக்கிய மக்க

  1. “A new leadership has to evolve . Hopefully let that happen first.” And we Tamil criticize the Leader or the Leadership and at the end of the day he or the leadership get destroyed. Then we search for another Leader or Leadership and it goes on and on. What a wonderful world!

 11. Dear Alex
  Our commentators now come out with utterances like “As for Tamil leadership the reality is that there is none. The current crop ranging from the EPDP to TNA are all discredited lame ducks. A new leadership has to evolve . Hopefully let that happen first.”
  It took a massive boycott for some of our commentators to even notice it, despite the Jaffna MC fiasco.
  I remember far fetched explanations from our wise commentators for the 20% polling there.
  But no one saw it while busy speculating about the potential winner and how Tamils would or should vote.

 12. அரசு ஆணைக்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும், உறுப்பினர்களையும் சேர்த்து 20,000 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும் கொன்றோளிப்பதர்க்கு அனுசரையாலனாகவும், நிறைவேற்று பொறுப்பாளனாகவும் இருந்த சரத் பொன்சேகரா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது சினமன் லேக்சைட் ஹோட்டலில் இருத்த போது , தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னால் தலைவர் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது கடசி நேரத்தில் எப்படி மரண பயத்திலும் தன் மனைவி, பிள்ளைகளை யோசித்து இதயம் வெடிக்க துன்பப்பட்டாரோ, தன் முன்னால் எஜமானர்களால் தானும் அதே நிலையில் இருந்தாரா?

  At that time , Prabhakaran must have also been in mortal fear for his life and safety. He was not alone. He was with his parents , wife and his children . Though his parents were dispatched earlier to the custody of the Army , his family stayed with him. He ought to have entertained monumental fear in regard to their safety. Many believed that he would commit suicide. But , he succeeded in fleeing to the Nandikadal lagoon.

  Nevertheless , he could not save his life there. No sooner his body was discovered than the then Army commander Gen. Sarath Fonseka , announced proudly and loudly to the country and the world via the media of the great news.

  It would be something very strange if General Fonseka had not experienced chilling fear and anxiety for his life while he was at the Cinnamon Lakeside Hotel which same experience Prabhakaran faced during the final moments of his life. The General too was with his wife and children . He must have been more frightened about the lives and safety of his family than about his own.

  Prabhakaran got down his family who were abroad to Wanni during the ceasefire period. The General got down his family who were abroad to SL to face the Presidential election as a Presidential candidate.

  After the death of Prabhakaran in Nandikadal lagoon, when the whole country was eating kiribath , the General ate kiribath out of both hands of his wife. At that point of time , his place was second to none by any means among the National Heroes described in the Sri Lankan’s chronicle of historical stories ( the Mahavamsa ).

  But , when he learnt that the very Army which he led to trap Prabhakaran laid siege to the Cinnamon Lakeside Hotel where he was staying , it is inconceivable what memories and thoughts flitted through his mind . At that moment , the whole of Sri Lanka had organized kiribath ceremonies to celebrate the victory stemming from the defeat of the General.

  மேலும் தொடர்ந்து வாசிப்பதற்கு:
  http://transcurrents.com/tc/2010/02/waterside_traps_for_prabha_and.html

  இது சகல மானிடர்களுக்கும், அமைப்புகளுக்கும பொருந்தும், அது கிழக்கின் விடிவேள்ளியாகட்டும், வடக்கின் வீனையாகட்டும், கனடாவின் தீயாகட்டும், இந்தியாவின் பச்சையாகட்டும்………

 13. உண்மைதான் மரணம் வருகிறது என்றால் ஜானமும் வருகிறது.வாழ்வதற்கான ஆசையும் பெருகுகிறது.அந்தக் கடைசிநிமிடம்களீல் வாழ்வதற்கான வாய்ப்பை இராணூவம் வழங்கி பெளத்த தர்மத்தை பேணீ இருந்தால் தொடர்ந்தும் யுத்தம் என்ற சிந்தனை மரைந்திருக்கும்.இலங்கை புதிய திசைநோக்கிப் பயணீத்திருக்கும் ஆனால் பழிக்குப் பழி என்றநோக்கிலேயேநின்றதால் யுத்தம் வருமோ என்ற பயமே தொடர்கிறது.

 14. Incommunicado ‘Rehabilitation’ Raises Fears of Torture and Enforced Disappearances – HRW

  The Sri Lankan government should end its indefinite arbitrary detention of more than 11,000 people held in so-called rehabilitation centers and release those not being prosecuted, Human Rights Watch said in a report released today.

  The 30-page report, “Legal Limbo: The Uncertain Fate of Detained LTTE Suspects in Sri Lanka,” is based on interviews with the detainees’ relatives, humanitarian workers, and human rights advocates, among others. The Sri Lankan government has routinely violated the fundamental rights of the detainees, Human Rights Watch found. The government contends that the 11,000 detainees are former fighters or supporters of the defeated Liberation Tigers of Tamil Eelam (LTTE).

  “The government has been keeping 11,000 people in a legal limbo for months,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “It’s time to identify who presents a genuine security threat and to release the rest.”

  Click here for read the press release:
  http://www.hrw.org/en/news/2010/01/29/sri-lanka-end-indefinite-detention-tamil-tiger-suspects

  Click here for the HRW 30 page report “Legal Limbo”:
  http://www.hrw.org/en/reports/2010/02/02/legal-limbo

  August 27, 2008 report of State Responsibility for “Disappearances” and Abductions in Sri Lanka: http://www.hrw.org/en/reports/2008/08/27/recurring-nightmare

 15. தலைவர்ள் என்றால் விமர்சிக்கத்தான் படுவார்கள்.அண்மையில் இங்கிலாந்தின் பந்து விலையாட்டு அணீயின் தலைவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கை கோளாறூ காரணமாய் அணீயில் விலையாடுவதே சந்தேகமாக உள்ளது.ஆக விமர்சிப்பது தவறூ இல்லை.ஆனால் விமர்சிப்பதை ஏற்றூக் கொள்ளூம் தலமைதான் வேண்டும்.இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரு பிலேயர் ஈராக் போர் சம்பந்தமாய் அண்மையில் விசாரிக்கப் பட்டதை அறீவீர்கள்.ஆகவே தலமை என்பது முன்மாதிரியாக இருக்க வேண்டும்.விமர்சனத்திற்கு அப்பாற் பட்டதல்ல தலமை.

 16. தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது
  வாரவெளியீடு

  அமெரிக்காவில் வெளிவரும் வோல் ஸ்றீட் ஜேர்னலில் தெரிவிப்பு

  தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவ தில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது “ராஜபக்ஷவிற்கு இது மிகப் பெரிய சவால்” என வருணிக்கப்பட்டது. மே 2009இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ஷ அந்தச் சவாலில் வெற்றி பெற்றார். இப்போது போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து ஸ்ரீலங்காவை எப்படியான ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

  கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புலிகளைப் போரில் வென்ற முன்னாள் இராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.

  கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்கு ளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது. முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இதுதானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்ஷவை தள்ளியது.

  இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான். பயணிப்பார் என்பதையே அறி குறிகள் காட்டுவதாக உள்ளன.

  கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்ட மைப்புகளை மீண்டும் புனரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.

  அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக் கொண்டுள்ளார். இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.

  அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது.

  இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.

  பலதரப்பட்ட முறைகளை அமுல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும். ராஜபக்ஷவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு இலங்கைக்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது.

  பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.

  தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப் பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழிவகுக்கும். – வீரகேசரி

Comments are closed.