இலங்கைத் தேர்தல் விவகாரம் : சரத் பொன்சேகாவின் ராஜினாமா

sarath  கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சரத் பொன்சேகா இராஜிநாமா கடிதத்தை வழங்கினால் அதற்கான மறுமொழியை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடும்போது பேசுகையில், தனது உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக, தமது சீருடையை அகற்றிக்கொள்வதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்தி:

இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி,  மகிந்த ராஜபக்ஷ  சரத் பொன்சேகாவின்  ராஜினாமாவை  ஏற்றுக் கொள்வதில்  தடை இல்லை  என  ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

One thought on “இலங்கைத் தேர்தல் விவகாரம் : சரத் பொன்சேகாவின் ராஜினாமா”

  1. சரத் பொன்செகாவும் ரஜபக்ஷெயும் நாடகம் நடததுகிறார்கள் பொலிருக்கிறது. எஇப்படியொ இலைங்கையில் செவல் சன்டை ஆரம்பமகிவிட்டது. வெடிக்கை தான்பார்க்கப் போகிறொம். செம ஜாலிதான். வள்ர்த்த கடா மார்பில் பாயப்போகிரது.

Comments are closed.