இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் : புதிய திசைகளின் கலந்துரையாடல் நிகழ்வு

புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் நான்காவது பகுதி நாளை வெள்ளி (19.10.2010)  10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் திரு.காதர் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த ஆய்வும், எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த மதிப்பீடும், ஆய்வும் இடம்பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

 குரல்வெப் (kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம்.