இலங்கைத் தூதரகம் முன்னால் திமுக காமெடிப் போராட்டம்.

நாகை மீனவர் கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் கருணாநிதி இந்நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான திமுகவினர் மீனவர் அணித் தலைவர் பெர்னார்ட் தலைமையில் இலங்கைத் தூதரகம் முன்னால் வந்து “தாழாது தாழாது தமிழினம் தாழ்த்தாது தாழ்த்தாது” என்று கோஷமிட்டபடி கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த கோஷத்திற்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எதுவுமே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க போராட்டம் முடிந்தது என்று கலைந்து சென்றார்கள் திமுக நிர்வாகிகள்.