இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள்- நடிகர் சத்யராஜ்.

இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காகச் செல்வது தொடர்பாக நடிகர் சங்கம் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சதயராஜ் இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். இன்று ஆயிரம் விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், ஆயிரம் விளக்கு படத்தில் நடித்துள்ள கதாநாயகி சானா கான், இந்திக்கு போய்விடுவார். இப்போது தமிழில் நடித்த நடிகைகள் எல்லாம் இந்திக்கு போகிறார்கள். நீங்கள் இந்திக்கு போங்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் போங்கள். ஆனால் இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள். இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று சொல்கிறார்கள். இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம். இப்போது எந்த நடிகையும் போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அமிதாப் பச்சனை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, அவர் இலங்கை பயணத்தை ரத்து செய்தார். அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

8 thoughts on “இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள்- நடிகர் சத்யராஜ்.”

 1. JetLite, Air India Express, Jet Airways, Indian Airlines, Kingfisher Airlines, Sri Lankan Airlines
  All these airlines have daily flights between Chennai to Colombo.

  Not only from Chennai, flights from Mumbai, Bangalore, Thiruchirapalli & Thiruvananthapuram how flights daily? How many passengers?

  இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று சொல்கிறார்கள், உண்மைதான்.
  இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம் என்று தாங்கள் சொல்வதும் வாஸ்தவம்தான்.
  இப்போது எந்த நடிகையும் போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறீர்கள், அப்படிஎன்றால் நடிகைகளை தவிர மற்றவர்கள் செல்லலாமோ?
  அமிதாப்பச்சனை தாங்கள் மட்டுமல்ல அன்றுதொட்டு எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால் அமிதாப்பச்சனின் பால்ய நண்பர் இராஜீவ் காந்தியை கொன்றவர்கள் யாரென்று தெரியுமோ?

  தினசரி கொழும்பிற்கும் இந்தியாவின் நகரங்களிர்க்குமிடையில் எத்தனை பயணிகள் விமானங்கள் பறக்கின்றன தெரியுமா? இதில் எதனை பேர் அங்கும் இங்கும் பறக்கிறார்கள் என்று தெரியுமா?
  இந்தியாவின் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு எதனை சரக்கு கப்பல்கள் பொதிகள் ஏற்றி இறக்குகின்றன தெரியுமா?
  இலங்கையில் கூடுதலாக ஓடும் வாகனங்கள், இந்திய தயாரிப்பு வாகனங்கள் என்று தெரியுமா?
  ஒன்றும் வேண்டாம் சத்யராஜ் சார், நடிகைகள் நடித்த சினிமாப்படங்களை ஏன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள்?

  தாங்கள் சொல்வது புலம்பெயர் புலிப் பினாமி வியாபாரிகள் இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவிட்டு, சிலோன் விளைமீன், வன்னி கைக்குத்தரிசி, பூநகிரி மொட்டைக்கறுப்பன் அரிசி என்று சொல்வது மட்டுமல்லாமல், அவர்கள் தான் சிங்களப் பத்திரிகைகள், சிங்கள சிடிக்கள் விற்பது மட்டுமல்லாமல் இலங்கை உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து விற்பது போலுள்ளது.

  இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது என்று கோரிக்கை வைக்கும் தாங்கள் ஒன்று செய்யுங்கள். இலங்கைக்கு செல்லும் விமானங்களின் முன் சென்று மறியல் போராட்டம் நடத்துங்கள், சத்தியாக்கிரகம் இருங்கள், இன்னும் மலிந்த உண்ணாவிரதம் இருங்கள்.

  அதுமட்டுமல்ல துறைமுகங்களில் சென்று இலங்கைக்கு செல்லும் கப்பல்களில் பொருட்களை ஏற்ற விடாமல் தடுங்கள்.

  தாங்கள் நன்றாகப் பேசுவீர்கள் என்று தெரியும், நல்ல குரல் வளமும்… தங்களின் இந்தப் பேச்சுக்கு “நடிகர் சங்கம் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் ரொம்ப கரகோஷம் தந்து வரவேற்றிருப்பார்களே?

  யோசிக்காதீர்கள், “இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது” என்று வீரமாக “தம்பி” “அண்ணல்” பிரபாகரன் வாலுகள் போக்கிரிகள் பாணியில் பேசிய தங்களிற்கு விரைவில் “இலங்கை அரசை எதிர்த்து மேடையில் முழங்கியதற்காக ‘நடிகர் சங்க வீரன்’ என்ற பட்டம் என்று பட்டம் தருவார்கள்.

  மறந்துவிட்டேன் சத்யராஜ் சார், இந்த குதிரையுடன் சேர்த்து கழுதையும் ஏற்றுவதை கொஞ்சம் கவனியுங்கள்.

  ஏதோ இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒரு பகுதியினர் வாழ்கிறார்கள்!

 2. JetLite, Air India Express, Jet Airways, Indian Airlines, Kingfisher Airlines, Sri Lankan Airlines
  All these airlines have daily flights between Chennai to Colombo.

  Not only from Chennai, flights from Mumbai, Bangalore, Thiruchirapalli & Thiruvananthapuram how many flights daily? How many passengers?

  இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று சொல்கிறார்கள், உண்மைதான்.
  இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம் என்று தாங்கள் சொல்வதும் வாஸ்தவம்தான்.
  இப்போது எந்த நடிகையும் போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறீர்கள், அப்படிஎன்றால் நடிகைகளை தவிர மற்றவர்கள் செல்லலாமோ?
  அமிதாப்பச்சனை தாங்கள் மட்டுமல்ல அன்றுதொட்டு எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால் அமிதாப்பச்சனின் பால்ய நண்பர் இராஜீவ் காந்தியை கொன்றவர்கள் யாரென்று தெரியுமோ?

  தினசரி கொழும்பிற்கும் இந்தியாவின் நகரங்களிர்க்குமிடையில் எத்தனை பயணிகள் விமானங்கள் பறக்கின்றன தெரியுமா? இதில் எதனை பேர் அங்கும் இங்கும் பறக்கிறார்கள் என்று தெரியுமா?
  இந்தியாவின் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு எதனை சரக்கு கப்பல்கள் பொதிகள் ஏற்றி இறக்குகின்றன தெரியுமா?
  இலங்கையில் கூடுதலாக ஓடும் வாகனங்கள், இந்திய தயாரிப்பு வாகனங்கள் என்று தெரியுமா?
  ஒன்றும் வேண்டாம் சத்யராஜ் சார், நடிகைகள் நடித்த சினிமாப்படங்களை ஏன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள்?

  தாங்கள் சொல்வது புலம்பெயர் புலிப் பினாமி வியாபாரிகள் இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவிட்டு, சிலோன் விளைமீன், வன்னி கைக்குத்தரிசி, பூநகிரி மொட்டைக்கறுப்பன் அரிசி என்று சொல்வது மட்டுமல்லாமல், அவர்கள் தான் சிங்களப் பத்திரிகைகள், சிங்கள சிடிக்கள் விற்பது மட்டுமல்லாமல் இலங்கை உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து விற்பது போலுள்ளது.

  இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது என்று கோரிக்கை வைக்கும் தாங்கள் ஒன்று செய்யுங்கள். இலங்கைக்கு செல்லும் விமானங்களின் முன் சென்று மறியல் போராட்டம் நடத்துங்கள், சத்தியாக்கிரகம் இருங்கள், இன்னும் மலிந்த உண்ணாவிரதம் இருங்கள்.

  அதுமட்டுமல்ல துறைமுகங்களில் சென்று இலங்கைக்கு செல்லும் கப்பல்களில் பொருட்களை ஏற்ற விடாமல் தடுங்கள்.

  தாங்கள் நன்றாகப் பேசுவீர்கள் என்று தெரியும், நல்ல குரல் வளமும்… தங்களின் இந்தப் பேச்சுக்கு “நடிகர் சங்கம் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் ரொம்ப கரகோஷம் தந்து வரவேற்றிருப்பார்களே?

  யோசிக்காதீர்கள், “இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது” என்று வீரமாக “தம்பி” “அண்ணல்” பிரபாகரன் வாலுகள் போக்கிரிகள் பாணியில் பேசிய தங்களிற்கு விரைவில் “இலங்கை அரசை எதிர்த்து மேடையில் முழங்கியதற்காக ‘நடிகர் சங்க வீரன்’ என்ற பட்டம் என்று பட்டம் தருவார்கள்.

  மறந்துவிட்டேன் சத்யராஜ் சார், இந்த குதிரையுடன் சேர்த்து கழுதையும் ஏற்றுவதை கொஞ்சம் கவனியுங்கள்.

  ஏதோ இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒரு பகுதியினர் வாழ்கிறார்கள்!

  1. சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.ஊருக்கு உபதேசம் உனக்கு அல்லடி பழமொழியாக இவரது அலமபலை தாங்க முடியவில்லை.இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் இருந்து தெருவோர திண்ண வரை இந்தியாவுக்கெ சொந்தமாக இருக்கும்போது நடிகையை போகாதே என நாடகமாடுவது இவர்கள ந்டிகர்களாக்குகிறது.திரையில நடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் மேடை ஏறீனால் நடிக்கிறார்கள். என்ன கொடுமை அய்யா இது.

 3. airlanka என்ற சிங்கள நிறுவனத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்வதையும் மானமுள்ள தமிழர்கள் உணர வேண்டும்.ஒரு போட்டோ வைத்திருந்தாலும் அது அவர்களுக்கு செய்யும் விளம்பரம் என்று உணர வேண்டும்.

 4. //இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம்// நல்ல கொள்கை !. கஷ்டப்படும் பொது கை கொடுக்காதீர்கள் . சுகமா இருக்கும் பொது புடுங்க வாங்கோ. பணத்தை சொன்னேன். கூத்தாடி லாபம் தான் கணக்கு பார்ப்பான்.

  1. ஊர்மிளா பிரபா!
   தங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. விடுதலைப் புலி பிளாட் அமைப்பின் செயலதிபராக இருந்த முகுந்தனின் காதலியின் பெயரும் ஊர்மிளா, விடுதலைப் புலி பிரபாகரனினால் (பிரபா) நஞ்சு வைத்து கொல்லப்பட்டதாகவும் என்று சொல்லப்படும் உர்மிளாவும் அதே ஊர்மிளா. தாங்கள் இருவரும் சம்பந்தப்பட்ட பெயரை வைத்துள்ளீர்கள்.

   சரி, விடயத்திற்கு வருவோமுங்க. //இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம்// இது என்ன ஸ்டாடேமென்ட் என்று உங்கட்கு புரியலையா?

   இப்போ இவங்க அங்கு சென்றா இவங்க நிகழ்சிகளை பணம் கொடுத்து பாக்கிற நிலைமையிலா ஈழத்து அகதிங்க கூடாரத்தில இருக்காங்க? அவங்க அகதி கூடாரங்களை விட்டு வெளியே வந்து தங்கள் நிலங்களில் குடியேறி விவசாயம் செய்து பணம் சம்பாதித்த பின்பு இந்த நடிகர்கள் போனாங்கன்னா இவங்க நிகழ்சிகளுக்கு கூட்டம் அலை மோதும். அதோட இப்ப போனாங்கன்னா மலையாளத்துப் பெண் குட்டி அசின் தொடும்கல் போல இவங்களும் தங்க பணத்தை செலவழிச்சு ஈழத்து பாதிக்கப்பட்ட அகதிகட்கு உதவியல்லவா செய்ய வேண்டும்?

   இந்த நடிகர்களின் சிகரத்தின் சமீபத்திய படம் ‘பெண் சிங்கம்’ பார்த்தீர்களா?
   படம் முடியும் மட்டும் பெண் சிங்கம் யார் என்று கண்டுபிடிக்க மாட்டீங்க.
   செம்மொல்லி மாநாடு நடத்தினவரு கதை வசனம் எழுதியிருக்கிறாரு ‘வைரம் பாஞ்ச… என்று ஏதொ.
   இந்த வயதில இவருக்கு இந்த விரசம். அதோட பாருங்க, அதில வரும் நடிகைக்கும் (கதா நாயகியான இளம் பெண்) போலிஸ் பாத்திரத்திற்கும் ஓர் தொடர்பும் இல்லேங்க, ஏன் அப் பாத்திரத்திற்கு ஒத்து வராத அந்த இளம் பெண்ணை அப்படி போட்டன்கண்ணும், ஏன் அப்படி ஓர் ‘பெண் சிங்கம்’ என்றொரு பட்டம் கொடுத்தாங்கன்னும் இரட்டை விரல் புகழ், ஜானகி அம்மையார் வழி கன்னடத்து ஜெயலலிதா அம்மையாரின் பாணியில் தான் ஆராய வேண்டும்.

   இந்த நடிகர் சத்யராஜ் போன்றவங்க சென்னையில இருந்து கொண்டு அறிக்கை விடுறவங்க. ஈழத்துக்கு போக வேண்டாம். இங்கு திருச்சி விமான நிலையத்திற்கு போகும் வழியில் கொட்டப்பட்டு ஈழத் தமிழ் அகதி முகாம் இருக்கிறது, மனம் உள்ளவங்க இவங்கட்கு உதவி செய்யலாமே?
   ஏன் இவங்க கல்லணையில சூட்டின்க் எடுக்க விமானத்தில வந்து இறங்கி அந்த வழியால போகும் போது பார்கிறதில்லையா?
   எங்க பக்கத்து கரூர்ல ஈழத்து அகதிங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. இவங்க சென்னைக்கு பக்கத்தில தானேங்க புழல் அகதி முகாம் இருக்குங்க.
   எல்லாம் மனம் உண்டா இடம் உண்டுங்க.

   1. உறையூர்காரரே!
    எல்லாம் பிறப்பில்… வளர்ப்பில் வர வேண்டும்.

    Asin Mary Tottumkal :

    தமிழீழ விடுதலைப் புலிகளின் முந்நாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த திகதியை ஒத்த 1985 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் திகதி கேரள மாநிலம், கொச்சினில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த அசின் தொடும்கல் (மலையாளத்தில்: അസിന്‍ തോട്ടുങ്കല്‍), ஒரு இந்திய திரைப்பட நடிகை என்பது உண்மைதான்.

    ஆனால் தொடுபுழாவைச் சேர்ந்தவரான இவரது தந்தை ஜோசப் தொடும்கல் பல வர்த்தகங்களை நிர்வகித்து வந்தார், ஒரு புகழ்பெற்ற தொழிலதிபராக கருதப்பட்டு வந்தார்.

    தனது வர்த்தகங்களை நிர்வகிப்பதை நிறுத்தி விட்டு தனது மகளின் நடிப்பு வாழ்க்கையை நிர்வகிக்க அவர் முடிவு செய்தார். தவிர அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அவரது தந்தை உடன் செல்கிறார். பலரின் உயிரை காற்றும் வைத்தியரான அசினின் தாயார் செலின் தொடும்கல், தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சினில் இருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினாலும், தனது அறுவைச் சிகிச்சை தொழிலை தொடர்கிறார்.

    தனது பெயரின் அர்த்தம் “தூய்மையானது களங்கமில்லாதது” என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து ‘அ’ (A)சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு “இல்லாதது” என்று அர்த்தம் என்றும், சின் (sin) என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் அவர் கூறுகிறார். அதாவது அவரின் பெயரின் அர்த்தம் ‘பாவமில்லாதது’ (means “pure and without blemish”)

    இப்படிப்பட்ட அசின் (பாவமில்லாதது) இலங்கை சென்ற இடத்தில் அங்கிருக்கும் மக்களின் நிலையை கண்டு தன்னாலான உதவிகள் செய்வதில் என்ன தப்பு?

    ஓர் தொழிலதிபர்-வைத்திய பெற்றோருக்கு பிறந்து சுயநலமில்லாத தெரேசா அம்மையாரில் பற்றுக் கொண்ட ஓர் தன் தாய் மொழி மலையாளம் தவிர்ந்த தமிழ், பிரஞ்சு, ஆங்கில மொழிகளில் வாசிக்க, எழுத, பேச பாண்டித்தியம் பெற்றவர் ஈழத்தமிழருடன் அளவளாவி உதவிகள் செய்வதில் என்ன தப்பு. இதை இலங்கை அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கினால் அது அவர் தப்பல்ல. தமிழ் நாட்டு நடிகர் சங்கத்தினர் தாம் விரும்பினால் எத்தனையோ வழிகளில் உதவிகள் செய்யலாம்.

    PARENTS:
    * Father: Joseph Thottumkal (Businessman of software, export of furniture, antiques and former CBI)
    * Mother: Dr. Seline Thottumkal (Doctor practice in Surgeon in Kerala Govt hospital- Ernakulam)

    எல்லாம் பிறப்பில்… வளர்ப்பில் வர வேண்டும். எமது வாழ்கையென்னும் பயணத்திலேயே எத்தனையோ ஓநாய்களை சந்திக்கிறோம்.

    உரையூர்க்காரர் சொல்வது போல எல்லாவற்றிகும் மனம் வேண்டும்!

 5. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார் என்று பாடி, கட்சியைப் பிரித்து, ஆட்சியைப்
  பிடித்து ஆண்டு விட்டு எம்.ஜி.ஆர் மறைந்து விட்டார். இப்பொ கட்சியின் அதிகாரமோ
  ஜெயலலிதாவின் கைகளில் ஏழைகள் ஏழைகள் தான்.

  சினிமாக்காரன் பேச்சு மேடையால் இற்ங்கியவுடனே போய்விடும். துஇரை

Comments are closed.