இலங்கைக்கு செல்ல வீசா அனுமதி இல்லை : பீரிஸ்

இந்திய சீன அரசுகளின் அரசியல் நகர்வுக்க்குள் இயங்கும் இலங்கை அரச பயங்கரவாதம் மேற்கிற்கு எதிராக வெளிப்படையாகப் பேசும் நிலை உருவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக அன்னியத் தலையீடும் ஜீ.எஸ்.பி சலுகையும் தேவையற்றது என மகிந்த தெரிவித்த மறுநாளே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு செல்ல வீசா அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் மர்சுகி தருஸ்மன், தென்னாபிரிக்காவின் யேஸ்மின் சூகா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீபன் ரட்ணர் ஆகியோருக்கு இலங்கை வீசா அனுதியை வழங்காது. அவர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

2 thoughts on “இலங்கைக்கு செல்ல வீசா அனுமதி இல்லை : பீரிஸ்”

 1. மேற்குலகுக்கு எதில் விட்டுக்கொடுப்பது எதில் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் கவனமாகவே உள்ளது. மேடைப் பேச்சுக்களையும் திரைக்குப் பின்நடப்பவற்றையும் ஒப்பிட்டால் நாம் வியப்படைவோம்.
  இலங்கையைப் பொருளாதார முறையில் கைவிட மேற்குலகு ஆயத்தமாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எச்.பி.+ விடயத்தில் இப்போது விட்டுக் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.
  பிற மிரட்டல்களும் இலங்கையை மேற்கின் உலகமயமக்கல் திட்டதுக்கு ஏற்ப ஒழுகச்செய்யும் நோக்குடையனவே ஒழிய வேறல்ல.
  “மனித உரிமை” என்பது தமக்கு அடங்காத முரட்டுக் காளைகள் மீது பாவிப்பதற்கான ஒரு சவுக்கு மட்டுமே.

  இலங்கையில் இந்தியப் பொருளாதார ஆதிக்கமே மிக வலியதும் வலுத்துக் கொண்டு போவதுமாகும். அது மேற்கிற்கு முற்றாக உடன்பாடற்றதல்ல.
  எனினும் அரசியற் செல்வாக்குக்காக இந்தியாவுடனான போட்டி அமைதிப் பேச்சு தொடங்கிய காலம் தொட்டே இருந்து வந்தது. அது ஜனாதிபதி தேர்தல் வரை வெளிப்படையாகவே தெரிந்தது.

  எனவே மேலோட்டமாகச் செய்திகளை நோக்கி இக் காய் நகர்த்தல்களை விளங்கிக்கொள்ள இயலாது.

  1. ya that’s true. We should try to understand the isuues wholistically by continuous follow -up.

Comments are closed.