இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் டாலர்கள் கடன் அங்கீகரிப்பு!

 

இலங்கைக்கு உலக கடன் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கும் மற்றும் போருக்குப் பின்னரான மீள்கட்டுமான செலவுகளுக்கும் உதவுவதற்காக அந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் டாலர்கள் கடனை அங்கீகரித்துள்ளது.

முதல் தவணையாக 320 மில்லியன் டாலர்களை இலங்கை உடனடியாகப் பெற முடியும் என்றும், அடுத்த கட்ட கொடுப்பனவுகள், ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளை தோற்கடித்த அரசாங்கப் படைகளின் அண்மைய தாக்குதல்களின் போது எழுந்துள்ள மனிதாபிமான அதிருப்திகளை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் இந்த முடிவை ஆதரிக்க பிரிட்டனும், அமெரிக்காவும் மறுத்து விட்டன.