இரு நாட்டுத் தமிழர்களையும் கொல்லவே இலங்கைக்கு இந்தியா நிதி உதவி அளிக்கிறது- தா.பாண்டியன் குற்றச்சாட்டு.

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெடுமாறனைச் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடையேப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,’’ தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழர்களுக்காகக் கூட பேச முடியாத நிலை நிலவுகிறது. சிஙகள் அரசுக்கு எதிராகப் பேசினால் கூட கைது செய்கிறார் கருணாநிதி. தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க செல்பவர்களை கைது செய்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து இலங்கை துணை தூதர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வைகோவை கைது செய்துள்ளனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு பணம் மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் யாரையும் காப்பாற்றும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசின் அத்தனை அங்கங்களும் ராஜபக்சேவுக்குத்தான் சேவை செய்வார்கள் என்று தா.பாண்டியன் கூறினார்.