இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்

nivysrஇராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கை வாடிக்கையாகிவிட்டதை கண்டித்து சமீபத்தில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உட்பட 5 மாவட்ட மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் முடிவில் சமாதானமடைந்த மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்ல துவங்கினர். 262 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

ஆனால், அவர்கள் மீண்டும் கடலுக்கு சென்ற முதல் நாளே இலங்கை கடற்படையினர் திடீரென்று அவர்களை தாக்கினர். அவர்களது படகுகளை சேதப்படுத்தினர். வலைகளை கிழித்தெறிந்தனர்.

இதில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட மூடிவு செய்துள்ளனர்.

One thought on “இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்”

  1. இது ஒன்டும் புதுசில்ல.தல தபால் அனுப்பும்.உடன் எல்லாம் சரியாகி விடும்

Comments are closed.