இராணுவப் புலனாய்வுத்துறையினரின் பாலியல் வல்லுறவு : நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த பெண்ணின் வாக்குமூலம்

கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், கடந்த மாதம் 31ஆம் திகதி பெண் குழந்தையொன்றினை யாழப்பாணப் போதானா வைத்தியசாலையில் பெற்றெடுத்த நிலையில், அக்குழந்தையை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்பவதாக யாழ்ப்பாண நீதிவான நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அப்பெண் திருமணமாகாத நிலையில் இக்குழந்தையைப் பெற்றெடுத்திருந்தார்.

அக் கடிதம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட போது, தான் யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து அருணாசலம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது, அங்கிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தன்னை உடலுறவு கொள்ள வருமாறு அழைத்ததாகவும் தன்னுடைய குடும்பத்தை அழித்து விடுவேன் என்று பயமுறுத்தியதால் தான் சம்மதிக்க வேண்டியேற்பட்டது எனவும் அதனால் இப்பெண் குழந்தை கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்க விரும்புவதாக அப்பெண் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்கள் மத்தியிலான சமூகக் கட்டுப்பாடுகளுள் புதைந்து போயிருக்கும் நூற்றுக்கணக்கான இவ்வாறான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் வெளிவராமலிருக்கின்றன என்பது வெளிப்படை.

இவ்வாறான சாட்சிகளின் உயிரிற்கு உத்தரவாதமில்லாத ஆபத்தான நிலையிலேயே காணப்படுகின்றனர்.