இராணுவத்துள் உள்முரண்பாடு : பிரச்சாரநிகழ்வு ஒத்திவைப்பு

மோதல்களின் போது இராணுவத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு மற்றும் புதுமத்தாளன் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிகளை ஜெனரல் சரத் பொன்சேக்காவினால் இன்று (04) திறந்து வைக்கப்படவிருந்தன.

அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புச் செயலரின் உத்தரவின் பேரில் அந்த வைபவங்கள் மறுதிகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேக்கா இன்று (04) வடபகுதிக்கு விஜயம் செய்யவிருந்ததுடன் இந்த தூபிகளை திறந்து வைக்கவிருந்தார்.

சரத்  பொன்சேகா கோதாபாய ராஜபக்ஷ  ஆகியோரிடையேயான முரண்பாடு  காரணமாகவே இது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் அறிய வருகிறது.