இராணுவத்தின் ஏராளமான அதிகாரிகள் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானிப்பு?

sarat10விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வழிநடத்திய சரத் பொன்சேக்கா யுத்த வெற்றியின் பின்னர் புறந்தள்ளப்பட்டதன் காரணமாகவும், அரசாங்கம் இராணுவ அதிகாரிகளை வழி நடத்திய விதம் குறித்தும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ஏராளமான அதிகாரிகள் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த வெற்றியின் பின்னர் சரத் பொன்சேக்காவை அரசாங்கம் நடத்திய விதம் குறித்தும் குறித்த அதிகாரிகள் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்துள்ள இராணுவ அதிகாரிகள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்நின்று செயற்படுத்தியவர்கள் எனக் கூறப்படுகிறது.