இரண்டு இனக்கொலையாளிகளின் சந்திப்பு

peres_rajapaksa‘மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மூன்று தசாப்தகால சிவில் யுத்ததின் பின்னர் மகிந்த ராஜபக்ச அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் வெற்றிகண்டுள்ளார்’ என்று இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரைஸ் தெரிவித்துள்ளார். ஜெருசலம் நரகரில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ செயலகத்தில் இரண்டு நாட்டின் ஜனாதிபதிகளும் சந்தித்துக்கொண்ட போது பெரேஸ் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்க அரசின் மத்தியகிழக்குச் செல்லப்பிள்ளையான இஸ்ரேல் மகிந்த ராஜபசவை வாழ்த்தும் அதே வேளை அமெரிக்கா இலங்கையில் போர்க்குற்றம் குறித்து ஆய்வுகளை நடத்திவருகிறது.

தவிர, மகிந்த ராஜபக்ச இஸ்ரேலிய பெரு வியாபாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்காத நாடுகள் அந்த நாடுகளின் வர்த்தக மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது கலந்துகொண்டன. இஸ்ரேல் அந்த நாடுகளில் பிரதானமானது. மகிந்த இஸ்ரேலில் சந்தித்த வியாபாரிகளில் பெரும்பாலானவர்கள் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டவர்களே.

பாலஸ்தீனிய மக்களை அமரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளின் ஆதரவோடு இனப்படுகொலை

Victor Ostrovsky
Victor Ostrovsky

செய்துவரும் இஸ்ரேலிய அரசு இனப்ப்படுகொலைக்கு ஆதரவானது. சிமோன் பெரேஸ் வெளிநாட்டமைச்சராகத் துருக்கிக்குச் சென்ற வேளையில் ஆர்மேனியர்கள் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று கூறியிருந்தார். இன்று ராஜபக்சவின் தமிழ்ப்பேசும் மக்களை இனப்ப்படுலொலை செய்துவரும் ராஜபக்ச ‘சாதனை’ புரிந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் இலங்கை அரச இராணுவத்திற்கும் புலிகளில் சிலருக்கும் இராணுவத்திற்கும் ஒரே தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கியதை விக்டர் ஒட்ரோஸ்க்வி என்ற மொசாட் உளவாளி தெரிவித்திருந்தார். மோசாட்டிலிருந்து வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்த இவர்By Way of Deceptionஎன்ற நூலை எழுதியிருந்தார். உலகத்தில் பல நாடுகளையும் போராட்டங்களையும் மொசாட் அமைப்பு எவ்வாறு சீர்குலைத்தது என்று எழுதிய ஒஸ்ரோவ்ஸ்கி இலங்கை பற்றிய குறிப்பில் இத் தகவலை வெளியிட்டுருந்தார்.