இரட்டைத் தேசியம் : லெனின் மதிவானம்

இன்றைய சூழலில் இலங்கையின் அரசியல் மார்க்கத்தை வரையறுத்துக் கொள்வதற்காக இரட்டைத் தேசியம் குறித்த தெளிவு அவசியமானதாகும். அரசியல் தேசியம், தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உடையன என வலியுறுத்தும். அவ்வாறு தேசிய இனங்கள் பிரிந்து செல்வதை அங்கீகரித்திருப்பனும் குறிப்பட்ட தேசிய இனம் பிரிவினை கொள்ளாமல் சுயாட்சி அமைப்பில் தனக்கான அரசியல் சுதந்திரத்துடன் திகழ முடியும். அத்தகைய சுயாட்சி உரிமையையோ, பிரிந்து செல்வதையோ ஏற்றுக் கொள்ளாத நிலையில் கலாசார தேசியம் பற்றிப் பேசினர். ஒரு தேசிய இனத்துக்கு ஒரே கலாசாரம் கிடையாது. சுரண்டுகிறவர்களதும் சுரண்டப்படுகிறவர்களதும் என இரட்டைக் கலாசாரம் இருக்கும் என லெனின் சொன்னார். இந்தியச் சூழலில் கலாசாரத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் இரட்டைத் தேசியம் இருந்தது. என்பதுதான் பிரச்சனை.( இரவீந்திரன் ந. (2003) இந்துத்துவம் இந்துசமயம் சமூக மாற்றங்கள்இ சவுத் விஷன்இ சென்னை. ப. 285.)

இந்திய சமூகவமைப்பில் சாதி என்பது முக்கிய கூறாக காணப்பட்டமையினால் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதன் தாக்கத்தை காணக்கூடியதாக இருந்தது. காங்கிரஸ் இயக்கம் அன்று ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை கொண்டிருந்த அதேசமயம்இ பிராமணியர் சார்ந்ததாகவும் சில சமயங்களில் தமிழகத்தில் பிராமணர்- வெள்ளாளர் சார்ந்த கூட்டாகவும் அமைந்திருந்தது. இது குறித்து ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானது ;

இந்தியாவிலுள்ள இடதுசாரி இயக்கதால் வழிநடத்தப்படும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பலவீனங்களிலொன்று,  ஏகாதிபத்தியத்துடன் உள்ளார்ந்த முரண்பாட்டைக் கொண்டுள்ள அனைத்து மக்களையும் அடையாளம் கண்டு அவர்களை இந்த இயக்கத்திற்குள் கொண்டு வரவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அவர்கள் உள்ளத்தில் ஊட்டவும் அதற்கு இயலாமற் போனதேயாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பின் முன்னணியில் இருக்கக்கூடிய பெருமளவிலான மக்கள் அதிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவே இந்த இயக்கத்திற்கு அளவு வகையிலும் பண்புவகையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு விலக்கிவைக்கப் பட்டவர்களில் குறிப்படத்தக்க பகுதியினர் தலித்துகளாவர். இவர்கள் இந்திய நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தைந்து விழுக்காட்டினர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவையாக உலகெங்கும் கருதப்படும் வர்க்கங்களான விவசாயிகளிலும் தொழிலாளர்களிலும் தனிச்சிறப்பான பகுதியாக இருப்பவர்கள். தலித்துகள்தான் இந்தியாவின் அடிப்படைப் பாட்டளிவர்க்கமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, பிற மக்களிடமும் கூட பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு காணப்படுவதில்லை. இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பலவீனம் காரணமா அல்லது இது அந்தப் பலகீனத்தின் விளைவா என்பது ஆராயப்பட வேண்டும். ஆனந்த் (டெல்டும்ப்டே இ தமிழில் எஸ்.வி ராஜதுரைஇ(2006)இ ஏகாதிபத்திய எதிர்ப்பும்இ சாதி ஒழிப்பும்இ புத்தா வெளியீட்டகம் கோயபுத்தூர். ப .03.)

இரத்தினச் சுருக்கமான இக்கூற்று சற்று நீண்டிருந்தாலும் தேசியவாத விடுதலை இயக்கப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்தது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தது என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில்இ பிராமண எதிர்ப்பை கொண்டிருந்த ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் மற்றும் தமிழகத்தில் அயோத்திதாசர் முதலானோர் ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் கூட்டுசேர்ந்து ஒத்துழைப்பதன் மூலமாக தமது மக்களுக்கான சலுகைகளைப் பெற முடியும் என நம்பி அப்படியே செயற்பட்டனர். (அவ்வப்போது ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிர்ப்பந்தம் இருந்த போதிலும், அவர்கள் தலித் மக்களது விடுதலைக்கு காத்திரமான எந்த பங்களிப்பையும் நல்கவில்லை என அம்பேத்கர் குறிப்பிடத்தவறவில்லை). இந்த போக்கு இன்று சாதியை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவோர்களுக்கும் குறுகிய நோக்கத்தில் அதனை பாவிப்பவர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் கலாநிதி ந. இரவீந்திரனின் பின்வரும் கூற்று முக்கியமானதாகும் :
எல்லாப் பழியும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தலைமேல், எனப் பொய்யான கோசங்களை முன்வைத்து தலித் மக்களை அவர்களுக்கான வரலாற்றுக் கடமையைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கையேந்தும்படி செய்யும் எத்தர்கள் துரத்தப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பான்மையினர் தலித்கள் என்பதோடு வரலாற்றுக் காரணியாலும் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தலித் மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர் தலைமை சக்திகளா யுள்ளனர். அவ்வாறான தமது தலைமைப் பாத்திரம் தலித் மக்களால் உணரப்படும் வகையிலான சரியான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டு, அதனடிப் படையில் பரந்துபட்ட வெகுஜனங்களை அணிதிரட்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் .

யாவரும் கேளிர் ஆகும்படி இரத்த உறவு இனக்குழு வரையறை தகர்க்கப்பட ஏற்றதாக அந்த வேலைத்திட்டம் அமையவேண்டும். ஒன்று கலக்கத் தடையான இந்தச் சாதிய உணர்வு கடக்கப்படவில்லை யெனில் இரட்டைத் தேசியப் பிரச்சனை மட்டுமல்ல அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட முடியாதனவாகும். மக்கள் விடுதலை எட்டாத் தொலைவுக்குரியதாகும். (இரவீந்திரன்.ந. இந்துத்துவம்இ இந்துசமயம், சமூகமாற்றங்கள்இ பக் .168.)
இடதுசாரி இயக்கத்தின் சகலவிதமான பின்னடைவுகளுக்கும் தோல்விகளுக்கும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தான் காரணமென்பது சுத்த அபத்தமாகும். உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பாண்மையினர் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அதன் யதார்த்த சூழலைக் கவனத்திலெடுத்து நீண்ட கால குறுகிய கால தந்திரோபாய திட்டங்களின் அடிப்படையில் வெகுசனங்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுத் திருப்பாகளாயின் அது வெற்றி பெற்றிருக்கும்.

அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோற்றம் பெற்ற இயக்கங்களின் தலைவர்கள் தமது சுயநலத்திற்காக இவ்வியக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டதுடன்இ இவர்கள் எதிரிகளிடம்இ ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை விலை பேசி விற்றனர். இவ்வியக்கங்கள் குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்படைந்த போதினும் மாற்று அரசியலோ இ இயக்கங்களோ இன்றி அவர்கள் மீண்டும் மீண்டும் அவ்வியக்கங்களில் சரணடைகின்றனர். இடதுசாரி இயக்கங்கள் ஆங்காங்கே விட்ட தவறுகளையும் சாதிய ஒடுக்கு முறையின் கொடூரங்களையும் தூக்கிப் பிடித்துஇ ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் முதலானோரின் பெயர்களையும் உச்சரித்து கூப்பாடு எழுப்புகின்ற போது இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னணியில் ஒரு நலனை பிறிதொரு நலனில் துõக்கி வீசும் வர்க்க நலன் மறைந்திருப்பதை அவதானிக்கலாம்.

இந்திய வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுடைய சமூகவமைப்பு (மாற்று வடிவம்) சாதி என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும். தலித்தியம் எனும் அடையாள அரசியலானது மேல் சாதியினரை தமது வர்க்க எதிரியாக நோக்குகின்ற தன்மையிலேயே வளர்த்தெடுக்கப் படுகின்றது.

சமூகமாற்றச் செயற்பாட்டாளர்கள் இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இங்கு ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டமும் இதன் முக்கிய அங்கமாக திகழக்கூடிய சாதி எதிர்ப்பு போராட்டமும் இங்கு பிளவுபட்ட தேசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த முரண்பாட்டை பாரதி முறையாக இனங்கண்டமையினாலேயே தன் காலகட்டத்து உயிர்நாடிகளை புரிந்து கொண்ட சமூக செயற்பாட்டாளராக அவரால் மிளிர முடிந்தது.

இலங்கையை பொறுத்தமட்டில் அறுபதுகளில் இடதுசாரிகள் சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் கவன மடுத்தளவிற்கு எழுபதுகளில் முனைப்புற்ற இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் உடனடிக் காலப் பொருத்தத்துடன் கவனமெடுக்க தவறிவிட்டனர். இந்த முரண்பாட்டை சரியாக கையாளத் தவறியதன் விளைவாக தமிழ் தேசியவாத போராட்டமானது முற்று முழுதாக இனவாதத்தினுள் மூழ்கி செல்வதாக அமைந்தது. மறுபுறத்தில்இ இடதுசாரிகள் இது தொடர்பிலான கவன மெடுத்திருப்பின் தமிழ் தேசியவாதப் போராட்ட அழிவின் ஒரு பகுதியை தடுத்திருக்க முடியும் என்பதை இன்று நேர்மைமிக்க இடதுசாரிகள் சுயவிமர்சனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பிழையானதோர் அரசியல் பின்னணியில்இ தமிழ் குறுந்தேசியவாதிகள் கையேற்றதனால் அது ஒரு இனவாத யுத்தமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது முழுமக்களின் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டமாக அமையவில்லை.

இந்நாட்டில் வாழுகின்ற சிங்களஇமுஸ்லிம் மக்களை புறக்கணித்ததுடன் அவர்களை எதிரியாக கருதியது இப்போராட்டத்தின் பிறிதொரு பலவீனமாகும். அதன் உச்ச வளர்ச்சியே தமிழ் ஜனநாயக சக்திகளையும்இ கம்யூனிஸ்டுக்களையும் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ் குறுந் தேசியவாத போராளிகள் வளர்ந்திருந்தார்கள்.

தமிழ் தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளிலிருந்தும் ஆக ஒட்டு மொத்தமாக மக்களிடமிருந்தும் பிரிந்த போராட்டமாக தமிழ்த் தேசியவாத போராட்டம் அமைந்திருந்ததுடன்இ இறுதியில் படுதோல்வியும் அடைந்தது. இப்போராட்டத்தை இப்போக்கில் வளர்த்தெடுத்த அமெரிக்க அரசியல் தமிழ் மக்களின் வாழ்க்கையை நடுத்தெருவிற்கே கொண்டு வந்தது.

இன்று தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டே வரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து பேரம் பேசுகின்ற அரசியல் நடவடிக்கைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதை கடந்த கால அரசியல் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டியுள்ளன. இது பேரம் பேசும் அரசியலுக்கு கிடைத்த தோல்வியாகும்.

இலங்கையில் இடதுசாரிகள் சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் காட்டிய தீவிரத்தை தமிழ் இனவிடுதலைப் போராட்டத்தில் காட்டியிருப்பின் ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்கலாம். இலங்கையில் இரட்டைத் தேசியத்தில் ஒன்றிலே மாத்திரம் கம்யூனிஸ்ட்டுகள் கவனம் செலுத்திய போதிலும் இன ஒடுக்குமறை தீவிரமான சந்தர்ப்பத்தில் தமது தவறைத் திருத்திக் கொண்டு அதற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

இன்று சாதி மறைந்துவிட்டது எனவும்இ அதனை முறியடித்தவர்கள் தமிழ் இன விடுதலைப் போராளிகள் எனவும் மிக அண்மைக்காலம் வரை கருத்துக் கூறப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். ஒரு அன்பர் குறிப்பட்டது போல சாதி என்பது துப்பாக்கியின் நிழலில் மறைந்து கிடக்கின்றதே தவிர மரித்துவிடவில்லை.

அவ்வகையில் இன்னும் சாதியத்தின் கொடூரம் பல வழிகளில் வெளிப்பட்டு நிற்கின்றது. இன்று இனவாதம் பல வழிகளில் திரை மறைவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு சாதியத் தகர்வின் அவசியத்தை உணரமறுக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடு இரட்டைத் தேசியப் பிளவில் ஒன்றில் காலூன்றி நின்று மற்றதை எதிர்ப்பதாகவே இன்னமும் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. எனவே இங்கு இரட்டைதேசியம் என்ற யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு நமது சமூகமாற்றப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்போராட்டமானது வர்க்க முரண்பாடுகள்இ இன முரண்பாடுகள், சாதி முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள்இ மத முரண்பாடுகள் ஆகியவற்றையும் கவனத்திலெடுத்தே முன்னெடுக்கப்படல் வேண்டும்.

27 thoughts on “இரட்டைத் தேசியம் : லெனின் மதிவானம்”

 1. மிகச் சரியான கருத்தும் விமர்சமும். லெனின் தேசிய இனங்கள் தொடர்பான கருத்துக்களைக் கூறிய சமூகப் புறநிலை என்பது வேறு இன்றைய யதார்த்தம் வேறு. இன்று தேசிய முதலாளிகள் என்ற வர்க்கக் கூறு இலங்கை போன்ற நாடுகளில் இல்லை. ஆக தேசிய உணர்வு என்பது மத்திய தரவர்க்கத்தின் ஊசலாடும் உணர்வாகவே அமைகிறத்து. அதற்கான உறுதியான சந்தைப் பொருளாதார அடித்தளம் கூட இல்லை. ஆக இந்த மேற்கூற்றுச் சிந்தனையின் புதிய பரிமாணம் குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 2. “இலங்கையை பொறுத்தமட்டில் அறுபதுகளில் இடதுசாரிகள் சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் கவன மடுத்தளவிற்கு எழுபதுகளில் முனைப்புற்ற இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் உடனடிக் காலப் பொருத்தத்துடன் கவனமெடுக்க தவறிவிட்டனர். இந்த முரண்பாட்டை சரியாக கையாளத் தவறியதன் விளைவாக தமிழ் தேசியவாத போராட்டமானது முற்று முழுதாக இனவாதத்தினுள் மூழ்கி செல்வதாக அமைந்தது. மறுபுறத்தில்இ இடதுசாரிகள் இது தொடர்பிலான கவன மெடுத்திருப்பின் தமிழ் தேசியவாதப் போராட்ட அழிவின் ஒரு பகுதியை தடுத்திருக்க முடியும் என்பதை இன்று நேர்மைமிக்க இடதுசாரிகள் சுயவிமர்சனம் செய்து வருகின்றனர்.”

  ஆகா அருமையான கருத்து. துரதிஷ்ட வசமாக இன்று இலங்கையில் இயங்கி வரும் “முக்கிய” இடதுசாரிகள் இன்னமும் இதனைச் செய்யவில்லை

 3. முதலில் இலங்கையில் நடந்தது.. ‘தேசிய விடுதலைப் போராட்டமா? என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள்!

  ”இரட்டைச் தேசியம்” என்ற ஒன்று கிடையாது!! (மாக்சிச தத்துவத்தின் படி..)

  உழைக்கும் மக்களின் தேசிய(சர்வதே) கடைமைகள் (வர்கப் புரட்சின் நிமிர்த்ம்) அந்நாடுகளின் பிரத்தியேகத் தன்மைகள் – உழைக்கும் மக்களை- தேசிய கடமையில் ஈடுபடுத்துகிறது.. இது வர்கப்புரட்சியின் முன் நிபந்தனையே அன்றி, ‘தேசியத்துக்கான தொழுதல் அல்ல! ‘

  ‘வர்க உணர்வு’ காலனித்துவத்தில் இதற்கு எதிரானதும் அல்ல!

  ‘புரட்சி’ என்பதும் ஒரு கலை!!

  இது ஒரு சமூகமாற்றத்துக்கான விஞ்ஞானம்!!!

  உழைக்கும் தேசியத்தை மறுப்பவர்களுக்கே (உழைக்கும் மக்களின் தேசிய கடமை) இரட்டைத் தேசியம் ஒன்று இருப்பதாக விண்ணுக்கும் மண்ணுக்கும் எகுறிக்குதிக்கிறார்கள்!!

  ”தேசியம்” என்பது முதலாளித்துவத்தின விளைபொருளே!
  இதற்கு சமூகவிஞ்ஞானம் நடைமுறை ரீதியான விளக்கத்தை வரலாறு பூராகவும் அளித்துள்ளது. இது புரட்சியின் நிபந்தனையன்றி பூசிப்பல்ல! புரட்சி என்பது இதைக்கடந்த சமூகமாற்றமே!!!

  ரூபன்

  03 07 10

 4. திரும்ப திரும்ப அதே தவறு .பாரதியை சும்மா தூக்கி பிடிப்பது.பாரதி அப்படி என்னதான் செய்து கிழித்தான்.?
  ஆங்கில ஆட்சியாளருக்கு “சிறை தண்டனை என்பது தனது சாதியான ,பிராமணருக்கு கொடுமையானது என்றும ,ஆங்கில ஆட்சியாளுக்கு எதிராக் செயல் பட மாட்டேன் என்று “புரட்சி கடிதம் “எழுதிய புரட்சி கவி.அவன் வாழ்ந்த காலத்தில்தான் வ.உ.சிதம்பரம் செக்கிளுத்தான்.ஏன் வ.உ.சி க்கு பாரதி போல கடிதம் எழுதி கொடுத்து விட தெரியாதா.?
  முதலில் காலச்சார தளத்தில் மக்களை பார்ப்பநீயதிட்குள் மழுங்கடிக்கின்ற பாரதி போன்றவர்களின் மீதான உண்மைகள் வெளிக்கொண்டு வர வேண்டும் .கைலாசபதி தொடக்கி வைத்த இந்த வியாதி நிறுத்த பட வேண்டும்.பாரதி வெளிப்படையாகவே லெனினை தாக்கி எழுதியிருக்கின்றான்.இவை ஏன் இந்த ஆய்வாளர்களுக்கும் ,கலாநிதிகளுக்கும் புரியவில்லையோ தெரியாது.இதெல்லாம் ஏன் செய்வது என்றால் தங்களின் “அறிவு திறமையை “மற்றவர்களுக்கு காட்ட.!!!( சாய் ! என்னமாதிரி இலக்கியத்திலும்,மார்க்க்சியத்திலும் வின்னனாய் இருக்கிறார் பாருங்கள்!!! )
  இதற்கு செலவிடும் நேரத்தை புரட்சிக்கு எனென்ன தடை இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்யலாம்.
  பிரிட்டிஷ் உருளை கிழங்கு,பிரிட்டிஷ் கரட்,இங்கிலீஷ் ச்ற்றவ்பேரி , இங்கிலீஷ் ஜாம் ,என் நண்பன் ஒருவன் சொன்னான் டென்மார்க் நாட்டில் டேனிஷ் தண்ணீர்,டேனிஷ் உருளை கிழங்கு,டேனிஷ் ச்ற்றாவ்பெர்ரி, டேனிஷ் மீன் என்றெல்லாம் இருக்கிறதாம்.
  பொருட்களை விற்க தான் இந்த தேசியம் பயன் படுகிறது அல்லவா?
  இதிலிருந்து நாம் “தேசியம் எனது கற்பிதம் .” என்ற முடிவுக்கு தான் வர முடியும் .இடதுசாரிகளின் பார்வை சரியானது தான் . இலங்கையில் குறுந்தேசியவாதம் அவர்களின் அவதியாலும் , அவசரத்தாலுமே இன்றைய இந்த இழிவு நிலைக்கு கொண்டு வந்து விட்டது. கம்ம்யுனிச இயக்கத்தில் ( இந்திய,இலங்கை ) இருந்த தலைவர்கள் பற்றிய பார்வைகளும் மறு பரிசீலனைக்கு உடபடுத்த வேண்டும்.அவர்களில் கணிசமானவர்கள் இயக்கத்தை நாச மாகியிருக்கிரார்கள்.

 5. இரட்டை தேசியம் என்ற தலைப்பே மதிவானனதும் அவர் வக்காலத்து வாங்குகின’ற இராவிந்திரனுடைய இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக காட்டுகின்றது. வர்க்க போராட்டத்தை வழுப்படுத்தவே லெனின் தேசிய இன விடுதலையின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். ஆனால் இரட்டை தேசியம் என்பது உலக பாட்டாளிகளின் ஐக்கியத்திற்கு எதிரான கருத்து.

  ” “எல்லாப் பழியும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தலைமேல்இ எனப் பொய்யான கோசங்களை முன்வைத்து தலித் மக்களை அவர்களுக்கான வரலாற்றுக் கடமையைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கையேந்தும்படி செய்யும் எத்தர்கள் துரத்தப்பட வேண்டும்” என்ற இரவிந்திரனின் கருத்துப்படி பிராமணர்களோ அல்லது உயர் சாதியினர் அல்ல இங்கு முக்’கியம் பார்பனியமும் உயர் சாதி ஆதிக்கமுமே சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தடையாக இருக்கும் காரணி என்பதை புரிந்துக் கொண்டால் சாதிக்கும் வர்க்கத்துக்குமான உறவு புரியுமென எண்ணுகின்றோம்.

  அம்பேத்காரை விமர்சிப்பதினால் அவர் தலித் மக்கள் உரிமைகளுக்காக முன்னெடுத்த வெகுஜன போராட்டங்களை மறைக்க முயலாதீர்கள். பாரதியுடன் ஒப்பிடுகையில் இந்திய தேசிய விடுதலைக்கும்>
  வர்க்க போராட்டத்தை முன்னகர்த்துவதற்கும் அம்பேத்காரின் பங்கு அதிகமானது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். வரட்டு விவாதங்களை முன்வைப்பதால் மாக்சியவாதியாகிவிட முடியாது. அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள் களத்தில் செயற்பட வாருங்கள். .

  1. பாரதியுடன் ஒப்பிடுகையில் இந்திய தேசிய விடுதலைக்கும், வர்க்க போராட்டத்தை முன்னகர்த்துவதற்கும் அம்பேத்காரின் பங்கு அதிகமானது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். என்ற மலயைகனின் கூற்று தொடர்பாக சில கருத்துக்களைக் கூற வேண்டியுள்ளது.

   இந்தியா முழுமையும் தேசமாக ஒன்றுத்திரட்ட முனைந்த பிராமணர்கள் (காங்கிரஸ்) தலித் மக்களின் தலித் மக்களின் விடுதலை சார்ந்தும் தீண்டாமைக்கு எதிராகவும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். இவ்வாறான சூழலில் தான் அம்பேத்கர் போன்றோர் காங்கிரஸிற்கு எதிராக ஆங்கிலயருடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலை உருவானது. அது தலித் தேசியமாக இருந்தது. 1940களில் காந்தி “வெள்ளையனே வெளியேறு” என்ற தராளவாத அரைப் பிராமணிய தேசியத்தை இயக்க செயற்பாடாக முன்னேடுத்த போது இவ்வியக்கத்தில் அம்பேத்கரையும் கடந்து மக்கள் காந்தியின் வெள்ளையனே வெளியேறு இணைந்தனர். 1942களில் மந்திரிசபை உறுப்பினராக இருந்த அம்பேத்கர் 1945 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைகின்றார். ஆங்கிலேயருடன் இணைந்து தலித் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட அம்பேத்கர் ஆங்கிலேயர் குறித்த விமர்சனங்களையும் முன் வைக்கத் தவறவில்லை. மறுப்புறத்தில் காங்கிரஸ் மீதான அதிக வெறுப்புக் கொண்டிருந்தமையும் நியாயப்ப+ர்வமானது. இந்த முரண்பாட்டை மலையகன் காணத்தவறுகின்றார். வர்க்கங்களாக பிளவுப்பட்ட ஐரோப்பிய முறையில் சிந்திப்பதால் ஏற்பட்ட கோளாறாகும்.

   மேலும் தளத்தில் இயங்குவதற்கு; ந. இரவீந்திரனையும லெனின் மதிவானத்தையும் களத்தில் செயற்படுவதற்கு அழைக்கின்றார் மலையகன். இவர் என் மார்க்சியத்தை குத்தகைக்கு எடுத்து விட்டாரா ? இத்தகைய சித்தாந்த குழறுப்படிகளுடன் உள்ள இத்தகையர்களுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது.அவர்கள் மிக நாகரிகமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். (அலுவலகத்தில் இருந்துக் கொண்டு பத்திரிக்கை அறிக்கை விட வில்லை என்ற கோபமா என்ன ?) அவர் கூறுவது போல தத்துவார்த்த தளத்தில் நின்று விவாதிப்பதால் மட்டும் ஒருவர் மார்க்சிய வாதியாகிவிட முடியாதது போல ஒருவர் முடி சீவாமல் தாடி வளப்பதால் மட்டும் மார்க்சிவாதியாகிவிட முடியாது என்பதை மலையகன் அறியாவிட்டாலும மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

 6. “ஒரு தேசிய இனத்துக்கு ஒரே கலாசாரம் கிடையாது. சுரண்டுகிறவர்களதும் சுரண்டப்படுகிறவர்களதும் என இரட்டைக் கலாசாரம் இருக்கும் என லெனின் சொன்னார்.” என்ற மேற்கோளின் அடிப்படையில் அமைந்த இக் கட்டுரையில் இரட்டைத் தேசியம் பற்றிப் பேசப் பட்டுள்ளது.
  அந்த இரண்டு தேசியங்களும் ஒரு தொகுதியின் இணைகளா அல்லது ஒன்றில் ஒன்று உள்ளடங்காதா என்று எனக்குத் தெளிவாக இல்லை. இதைத் தத்துவ மட்டத்தில் விளக்கும் தேவை உண்டு. அதை ஆசிரியர்ரால் மட்டுமே இங்கு சரிவரச் செய்ய முடியும். அதை அவர் செய்வாரென நம்புகிறேன்.

  அதினும் முக்கியமாக, இன்றைய சூழலில் இரட்டைத் தேசியம் என்பது எதைக் குறிக்கிறது என விளங்கிக் கொள்ள இயலாதுள்ளவர்கள் என் போற் பலரிருப்பர்.
  அவர்களின் நலனுக்காகத், தேசிய இனப் பிரச்சனையில் மேற்கூறிய இரட்டைத் தேசியக் கோரட்பாடு எவ்வாறு செயற்படுகிறது எனவும் எவ்வாறு உண்மையான மக்கள் விடுதலைக்கு இட்டுச் செல்லுமாறு இரட்டைத் தேசியம் வழிநடத்தப்பட முடியும் என்றும், இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை அல்லது நாம் அறிந்த இன்னொரு நாட்டின் தேசிய இனப் பிரச்சனையை முன்வைத்துச் சுருக்கமாகவேனும் தெளிவுபடுத்தின் பேருதவியாக இருக்கும்.

 7. Yogan writes
  1)ஆங்கில ஆட்சியாளுக்கு எதிராக் செயல் பட மாட்டேன் என்று “புரட்சி கடிதம் “எழுதிய புரட்சி கவி

  May be bharathi was a early communist? because
  During the quit india movement in 1942 communist party of India supported British imperialist
  ( I googled)

  2) பாரதி வெளிப்படையாகவே லெனினை தாக்கி எழுதியிருக்கின்றான்.
  Is it bad? Isn’t வெளிப்படைyaka critizicing a good thing?
  Who let Lenin outside the critique?

  We have to deconstruct bharathi and Lenin too….

  3)இதற்கு செலவிடும் நேரத்தை புரட்சிக்கு எனென்ன தடை இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்யலாம்.
  Please do it..

  4)கம்ம்யுனிச இயக்கத்தில் ( இந்திய,இலங்கை ) இருந்த தலைவர்கள் பற்றிய பார்வைகளும் மறு பரிசீலனைக்கு உடபடுத்த வேண்டும்.அவர்களில் கணிசமானவர்கள் இயக்கத்தை நாச மாகியிருக்கிரார்கள்.
  If it is true, the communist Parties in these countries were unable to jugde even thei party then How can they do that with the society…

 8. பயனற்ற இவ் விவாதத்தை மேலும் தொடர எனக்கு ஆர்வமில்லை.

  வாழ்த்துக்கள்.

 9. Suganthy says “During the quit india movement in 1942 communist party of India supported British imperialist
  ( I googled)” i re-googled it another web says that during the same period comunist party used to be the primelinary force against the imperialist. look, marxism is an analytical method before anything else.

  1. so your web says the TRUTH.. this is the problem what you people have……
   you say.i re-googled it another web ,
   but I googled not one web but many, in order to be bit near to the truth, It seems to me YOU HAVE THE TRUTH. Your writing is nothing other than .the phraseology- mongering
   I think there is no point furthering this discussion…

  2. Suren
   I think that the confusion is because the Communist Party did not want any part in the war as long as it was an imperialist war. It decided to support the war effort against Nazi Germany when the Soviet Union was attacked. At the time the US and Britain realised that an alliance with the Soviet Union was necessary for their own survival.
   That is the context in which the CP’s position is now interpreted by some as supporting the British.
   One has to go by the statements issued by the Communist Party at the time rather than depend on websites with their own agendae. The CP was unwavering in its anti-colonial stand — but there was a problem in the Congress. (one manifestation of it was that Subash Chandra Bose was effectively forced out of the Congress by Gandhian manipulation).
   While the involvement of Soviet Union changed the global picture and therefore the position vis-a-vis the war, there was no question of the Communist Party of India siding with imperialism.
   (A slightly more complex situation developed in Sri Lanka when the Trotskyites in the Samasamaja Party decided not to support the Soviet Union in its war against Germany. Those who supported the Soviet Union were expelled and they ended up as the Communist Party of Ceylon.)

 10. 1918 டிசம்பர் 10 தேதி கடலூர்

  “மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொடுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளைத் துறந்துவிட்டேன். நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.”

  ….பாரதி .

  thanks to V.Mathimaran

  1. யோகன், பாரதி வழிபாட்டாளர்கட்கும் பாரதி நிந்தனையாளர்கட்குமிடையே எங்கோ (அல்லது முற்றிலும் வெளியிலே) தான் உண்மை கிடக்கிறது.
   பாரதி சிறையிலேயே கிடந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா?
   இல்லை என்றே நினைக்கிறேன் — நாம் ஒன்றும் புறநானூற்று வீரம் பற்றிப் பேசவில்லையே.
   விடுதலைக்குப் பின் பாரதி எங்கு சென்று என்ன செய்தார் என்பது தான் முக்கியமானது.
   பாரதியைப் பற்றி வினோதமான கற்பனாவாதப் படிமங்களைக் கட்டியெழுப்ப முயல்வோர் பாரதி நிந்தனையாளர்களை விடப் பாரதிக்குக் கேடு செய்கிறார்கள்.

   சென்ற நூற்றாண்டின் முற்கூற்றில் ஒரு பார்ப்பனக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒருவர் என்பதை வைத்துப் பார்க்கும் போது, தனது சமூகத்தை விட மட்டுமன்றிச் சூழ இருந்த்த சமூகத்தையும் விட முற்போக்கானவராகவே அவரைக் காண முடிகிறது. அவரது முற்போக்குப் பார்வை போதுமானதா என்பதும் தவிர்க்க முடியாமலே அதில் அக் காலச் சூழலுக்கும் அவரது தனிப்பட்ட பின்புலத்துக்கும் உரிய குறைபாடுகள் எவ்வளவில் இருந்தன என்பதும் கவனமாக நோக்க வேன்டியவை.
   கவிதைகளை மட்டும் வைத்துப் பார்க்காமல் உரைந்டையையும் ஒப்பிடுவது நல்லது.

  2. THIS ARTICLE IS NOT ABOUT BHARATHI
   but for your information
   Bharathiyar was in Pondichery in exile, he entered British India near Cuddalore in November 1918 and was promptly arrested. He was imprisoned in the Central prison in Cuddalore in custody for three weeks from 20 November to 14 December. What would have we done in such a situation?

   bharathis statement does not make his poems uninteresting and he was a pioneer in introducing a new style of Tamil poetry.His poetry expressed a progressive, reformist ideal
   he was against the cast system and women oppression in Hindu society

 11. இக் கட்டுரை முக்கியமான ஒரு கருத்தை முன்வைக்கிறது.
  அது மேலும் தெளிவுபடுத்தப் பட்டு விரிவாக விவாதிக்கப் பட வேண்டும்.
  மாட்டை விட்டுக் கயிற்றைப் பிடிக்கிற விதமாகவே சில பின்னூட்டங்கள் போகின்றன.

  கட்டுரையின் அடிப்படைக் கருத்தைப் பற்றிய ஆசிரியரது விளக்கம் ஒன்று இவ் வேளை மிக உதவும்.
  அதை வேறொரு கட்டுரையாகத் தந்தாலும் நல்லது.

  1. உங்களது கருத்துக்களை அவ்வப்போது வாசித்து வருகின்றேன். மிகவும் நிதானித்து அதே சமயம் நாகரிக தளத்தில் நின்று விமர்சனங்களை முன்வைக்கின்ற உங்கள் எழுத்துக்களை நான் மதிக்கின்றவன் என்றவகையிலும் மக்களை நேசிக்கின்றவன் என்றவகையிலும் இதுக் குறித்து கூடிய விரைவில் விரிவாக எழுதுகின்றேன்.

 12. Yes Mr Shiva you are write.. the above article is
  not about பாரதி
  not about கைலாசபதி
  not about லெனிn
  notabout அறிவு திறமை
  not about பிரிட்டிஷ் உருளை கிழங்கு
  Some one is trying to divert the attention………….In my opinion the article is very critical about leftist and dalits leaders roles during the anti imperialist struggle…Please correct me if i am wrong

 13. நான் கூற வருவது என்னெவென்றால் நமது சமூகத்தை வளர விடாமல் செய்தததில் இந்து மதத்தின் /பார்பனீயத்தின் பங்கு கணிசமானது.இதை முறியடிப்பது புரட்சியின் ஒரு பகுதி தான் .சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்றார் அம்பேத்கார் .பாரதி ஒரு மாந்த பற்றுள்ள கவிஞன் /பார்பான் என்பதில் சந்கேகமில்லை.அவன் சொன்ன கருத்துக்களை விட பல முற்போக்கான கருத்துக்களை சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

  பாரதியை விட பல் முற்போக்கான விடயங்களை பேசிய பெரியார் .அம்பேத்கர் போன்றோரை பற்றி / மேற்கோள் காட்ட தயங்குகிறார்கள்.அது தான் பார்பனீயம் .(சாதி பார்ப்பது .கோவில் கட்டுவது,தேர் இழுப்பது.)

  தோழர்கள் மருதையன்,வே.மதிமாறன் பாரதி அனுதாபிகளை நோக்கி எழுதிய விமர்சனகளுக்கு “கள்ள மௌனத்தையே ” பதிலாக தந்திருக்கிறார்கள்.

  “நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.” இந்த “நாகரீகமான” வாக்கு மூலத்தையும் ,இந்த நாகரீகம் தெரியாதவர்கள் அந்த மான் தீவில் செல்லுலர் சிறையில் உக்கி மடிந்ததை எண்ணி பாருங்கள்.இந்த “நாகரீகம்” தெரியாதவன் தான் பகத் சிங்.
  இந்த “நாகரீகம்” தெரிந்தவன் தான் காந்தி.

  1. இந்த நாகரீகம் தெரியாதவர்கள் அந்த மான் தீவில் செல்லுலர் சிறையில் உக்கி மடிந்ததை எண்ணி பாருங்கள்
   I think you are the only one who think he must have died in andaman island..
   What a நாகரீகம் and what a humanism.. I am very moved

  2. உங்களுடைய விவாதம் கட்டுரையின் மையக்கருத்தை திசைதிருப்புவதாக அமைந்துள்ளது. ஆகவே இவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதுகின்றேன். ( யோகன் சுகந்தி ஆகியோருக்கான பதில்) ஏனையோர் ( குறிப்பாக சிவா) எழுப்பியுள்ள கேள்விகளுக்கான பதிலை வாசகர்களின் சலன் கருதி தனி கட்டுரையாக எழுதுகின்றேன்.

 14. ´what lenin mathivanan says
  ´´´´´´எல்லாப் பழியும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தலைமேல், எனப் பொய்யான கோசங்களை முன்வைத்து தலித் மக்களை அவர்களுக்கான வரலாற்றுக் கடமையைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கையேந்தும்படி செய்யும் எத்தர்கள் துரத்தப்பட வேண்டும்.´´´´

  ´´´´இடதுசாரி இயக்கத்தின் சகலவிதமான பின்னடைவுகளுக்கும் தோல்விகளுக்கும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தான் காரணமென்பது சுத்த அபத்தமாகும்.´´´´´´

  ´´´´´´யாவரும் கேளிர் ஆகும்படி இரத்த உறவு இனக்குழு வரையறை தகர்க்கப்பட ஏற்றதாக அந்த வேலைத்திட்டம் அமையவேண்டும்´´
  the article states that we must destroy all the internal differences within our self to build a effective force to fight the external enemy……Should we name these differences as iraddai nationalism`? i am not sure…I am sorry to say this article is not well structured, but it says something

 15. hello Inioru-friends

  I enjoyed very much being with inioru , I think it is very informative website.but i have to leave you for some times.. i have my final examinations i am so sorry if i have hurt any of you through my writings..I beg you to pardon me. It was nice being with you
  I will be back after my exams are over (It is a warning)
  good bye

 16. எனது நோக்கம் கட்டுரையை திசை திருப்புவதல்ல.
  “……உயிர்நாடிகளை புரிந்து கொண்ட சமூக செயற்பாட்டாளராக அவரால் மிளிர முடிந்தது.”என கட்டுரையில் எழுத படுட்டுள்ள பாரதி பற்றிய மாயைகளை உடைத்து எரிய வேண்டும் என்கிறேன்.பாடசாலை புத்தகங்களில் பாரதி, காந்தி போன்றோர் பற்றி சொல்லபடுகின்ற பொய்களை தங்களை ஆய்வாளர்கள் என்று சொல்பவர்களும் சொல்லகூடாது என்கிறேன்.

  ´´´´´எல்லாப் பழியும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தலைமேல், எனப் பொய்யான கோசங்களை முன்வைத்து தலித் மக்களை அவர்களுக்கான வரலாற்றுக் கடமையைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கையேந்தும்படி செய்யும் எத்தர்கள் துரத்தப்பட வேண்டும்.´..
  சரி தான் .ஆனால் பிராமண ,உயர் சாதி தலைவர்கள் எப்படி எல்லாம் ப்ராமணித்திர்த்கு துணை போனார்கள் என்பதையும் கொஞ்சம் அறிய முனையுங்கள்.

  டாங்கே ,ராமமூர்த்தி ,நம்பூத்ரி பாடு போன்ற தலைவர்களின் வரலாறையும் .அவர்களை துரோகங்களையும் படியுங்கள்.இன்னும் பாராளுமன்றத்தில் தொங்கி நிற்கும் அவர்களது போலி கம்யுனிஷ சிஷ்யர்களையும் ,அவர்களது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரையும் பற்றி அறியுங்கள்.

  suagathy !
  இவை பற்றி இனிமேலாவது படிக்க கொஞ்சம் முயற்சி எடுங்கள்.சொற்களை பிடித்து வைத்து கொண்டு அதன் தொடர்புகள் தெரியாமல் விவாதம் புரிய வேண்டாம்.இப்படியான வாதம் சபைக்கு உதவாது.

 17. எனது நோக்கம் கட்டுரையை திசை திருப்புவதல்ல.
  “……உயிர்நாடிகளை புரிந்து கொண்ட சமூக செயற்பாட்டாளராக அவரால் மிளிர முடிந்தது.”என கட்டுரையில் எழுத படுட்டுள்ள பாரதி பற்றிய மாயைகளை உடைத்து எரிய வேண்டும் என்கிறேன்.பாடசாலை புத்தகங்களில் பாரதி, காந்தி போன்றோர் பற்றி சொல்லபடுகின்ற பொய்களை தங்களை ஆய்வாளர்கள் என்று சொல்பவர்களும் சொல்லகூடாது என்கிறேன்.

  ´´´´´எல்லாப் பழியும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தலைமேல், எனப் பொய்யான கோசங்களை முன்வைத்து தலித் மக்களை அவர்களுக்கான வரலாற்றுக் கடமையைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கையேந்தும்படி செய்யும் எத்தர்கள் துரத்தப்பட வேண்டும்.´..
  சரி தான் .ஆனால் பிராமண ,உயர் சாதி தலைவர்கள் எப்படி எல்லாம் ப்ராமணித்திர்த்கு துணை போனார்கள் என்பதையும் கொஞ்சம் அறிய முனையுங்கள்.

  டாங்கே ,ராமமூர்த்தி ,நம்பூத்ரி பாடு போன்ற தலைவர்களின் வரலாறையும் .அவர்களை துரோகங்களையும் படியுங்கள்.இன்னும் பாராளுமன்றத்தில் தொங்கி நிற்கும் அவர்களது போலி கம்யுனிஷ சிஷ்யர்களையும் ,அவர்களது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரையும் பற்றி அறியுங்கள்.

  suagathy !
  இவை பற்றி இனிமேலாவது படிக்க கொஞ்சம் முயற்சி எடுங்கள்.சொற்களை பிடித்து வைத்து கொண்டு அதன் தொடர்புகள் தெரியாமல் விவாதம் புரிய வேண்டாம்.இப்படியான வாதம் சபைக்கு உதவாது.

 18. Caste is not a nation or nationality. Therefore this so called rettaithesiam is a rubbish cook of Dr.Ravindran and his blind follower Lenin Mathivanan. Thesiam is for a thesiainnam not for a sathi. Sathiam can be abolished by establishing equality but thesia murannpadu can be solved only by means   of right to self determination which was correctly put forward by comrade Lenin and Stalin and developed by Mao. In western countries such as Switzerland, Belgium also to some extent taken measures to minimize national contradiction. Therefore start Learning from Lenin to Sandinista of Nicaragua. Then the confusion of rettaithesiam will not arise. Dont waste time in equalising sathi with thesiainnam. 

  1. Lenin Mathivaanam has offered to clarify what he means by ‘irattaith thesiyam’ and how it manifests itself in relevant contexts.
   Debates will make more sense if based on the more detailed article promised by Lenin Mathivaanam.

Comments are closed.