இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன்

சஞ்ஜயன்
சஞ்ஜயன்

நேற்று இங்கிலாந்துத் தமிழர்களின் தயாரிப்பான ”யாவும் வசப்படும்” என்னும் முழு நீ(ல)ளத் திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது.

அண்மையில் NorTamil.no என்னும் இணையத்தளத்தில் ஈழத்து திரைப்படத்துறையின் இயக்குனர்களில் ஒருவரும், பெரும் அனுபவசாலியும், நோர்வேயில் வாழ்பவுருமான சிவபாலன் காசிநாதர் அவர்கள் ”ஈழத்தமிழரும் சினிமாவும் – ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள்” என்னும் கட்டுரையில் சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், என பலதையும் வகைப்படுத்தி, அவை உங்களுக்கு பலதையும் கற்றுத்தரும் என்று மறைமுகமாக சில கருத்துக்ளை தற்போதைய திரைப்படக்கலைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அவரின் கருத்து மிகவும் கச்சிதமாக ”யாவும் வசப்படும்” குழுவினருக்கும் பொருந்துகிறது. ஈழத்தவருக்கான சினிமாவை நாம் தேடும் காலம் இது. ஆனால் இப்படியான சினிமாக்கள் தென்னிந்திய சினிமாவின் குப்பைகளை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. இவ்வளவு பணத்தையும், ஆர்வத்தையும், நேரத்தையும், கலைஞர்களையும் வீணடித்திருக்கிறார்களே, சற்றாவது தரத்தைப் பற்றி அவர்கள் ஏன் சிந்திக்கவில்லை என்று யோசித்துப்பார்க்கிறேன். இதற்கான பதில், திரைப்படக்குழுவின் முக்கிய நபர்களின் கற்பனை மற்றும் கலையுணர்வின் வறுமையில் ஆரம்பிக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. கற்பனைவளம் என்பது கலைகளின் இதயத்துடிப்பு என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.

yavumvasappadum_blue_movie
யாவும் வசப்படும்  விளம்பரம்

எமது மொழியை பேசாத எம்மவர்களின் சினிமா, நாடகத்தன்மையான அபத்தமான நடிப்பு, கற்பனைத்திறனே இல்லாத வக்கிரமான கமரா கோணங்கள், தொய்வான திரைக்கதை, நாடக பாணியிலான வசனங்கள். இவற்றுடன் பல காட்சிகளில் வரும் இசையை எங்கேயோ கேட்டிருக்கிறேன். நோர்வேயின் பீத்தோவன் என்னும் Edvard Grigஇன் இசையா என்ற சந்தேகமிருக்கிறது, காட்சிகளுக்கு பொருத்தமில்லாத இசை, இயக்குனருக்கு எதைக் கூறுவது என்று பலமாய் யோசிக்கவேண்டியிருக்கிறது. அவர் இப்படத்தை படமாக்கிய பின் பல தடவைகள் பார்த்திருப்பார். அப்படி இருந்தும் ஏன் அவரால் இவ்வளவு அபத்தமான, காட்சிகளை, கமரா கோணங்களை, வசனங்களை, இசையை சற்றாவது திருத்தியமைக்கமுடியவில்லை? நாடகத்தன்மையான செயற்கைத்தன நடிப்பைக்கூடவா அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவர் திருத்த முயற்சிக்கவில்லை? அல்லது இதுதானா அவர் விரும்பும் திரைப்படம்?

இவ் வருடம் பிரான்ஸ் குறும்பட விழா ஒன்றிற்கு நடுவராக அழைத்திருந்தார்கள். பிரபல தென்னிந்த திரைப்பட இயக்குனர் சசி நடுவர்களுக்கு தலைமைவகித்தாா். அங்கு சொக்கன் விஜிதரனின் 30 நிமிட படம் ஒன்றினை பார்க்கக் கிடைத்தது. அதன் தொழில்நுட்ப நேர்த்தி அத்தனை அற்புதம். இத்தனைக்கும் அவர்கள் மிகவும் சாதாரண கமராக்களையே பாவிக்கிறார்கள். இயக்குனர் சசி ஆச்சர்யப்பட்டு பாராட்டுமளவிற்கு அத்தனை தரம்மிக்கதாக இருந்தது அந்தப்படம். அந்தப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய குறும்படங்களின் தரத்துடன் நாம் இந்தப் திரைப்படத்தை ஒப்பிடவே முடியாது. மலைக்கும் மடுவுக்குமான தூரம் அது.

சொக்கன் விஜிதரன், லெனின், சதாபிரணவன் போன்ற கலைஞர்களிடம் கற்பனைத்திறணையும், கலையுணர்வையும் ஒன்றுசேரக் காணமுடிகிறது. அதனால்தான் அவர்களின் தயாரிப்புக்கள் பெரிதாய் மிளிர்கின்றன. ஒரு கைத்தொலைபேசியில் எடுத்த God is dead என்ற திரைப்படம் பாரீஸ், கொரிய நாடுகளில் முதற்பரிசை வென்றிருக்கிறது என்பதானது ஒரு முக்கிய செய்தியை எமக்கு எடுத்துக்கிறது. தொழில் நுட்பத்தையும், கருவிகளையும் யாரும் பணத்திற்கு வாங்கிக்கொள்ளலாம். ஆனால் கற்பனைத்திறணையும், கலையுணர்வையும் பணத்தினால் வாங்கமுடியாது என்பதே அது. அவையே கலைஞர்களை உருவாக்குகிறது.

mainactorகதாநாயகி ஆரம்பித்தில் இருந்து இறுதிவரையில் கட்டிலி்ல் கட்டப்பட்டு படுத்திருக்கிறாள். எனவே அது சம்பந்தமான காட்சிகள் படத்தில் அதிகம். கதாநாயகியின் சற்றே குட்டையான உடையும், தொடைகளை நோக்கி நேர்கோணத்தில் வைக்கப்பட்டிருந்த கமராவும் அத்தனை வக்கிரமானது. அந்தப் பெண்ணிற்கு ஒரு காற்சட்டையை அணிவித்திருந்தாலும் ஓரளவு மன்னித்திருக்கலாம். ஆனால் குட்டைப் பாவாடைபோன்ற உடையும், தொடைகளை நோக்கிய கமராவும் அக்காட்சிகளின் நோக்கத்தை தெளிவாகவே புரியவைக்கின்றன. பெண்களின் உடலை காட்சிப்பொருளாக்கி எடுக்கப்படும் மோசமான தென்னிந்திய படங்களின் பாதையில் நாமும் பயணிக்க வேண்டுமா என்ன? ஏன் அந்த கமராவை bird view இல் அல்லது வேறு கோணங்களில் வைத்திருக்கலாமே? படம் முழுவதுமே கமரா அதே கோணத்திலேயே இருக்கவேண்டுமா? ரசனை வேறு, வக்கிரம் வேறு.

இப்படியான காட்சிகள், கமரா கலைஞர்களின் கற்பனை வறுமையும், கலையுணர்வுப் பற்றாக்குறையையும் மிகத் தெளிவாகவே பார்வையாளர்களுக்கு அறியத்தருகின்றன. இயக்குனர்களும் இவற்றை அனுமதிப்பது அவர்களும் இப்படியான காட்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

படத்தில் தேவா என்னும் பாத்திரத்தில் நடித்தவர் சிறப்பான இயக்குனரிடம் சிக்கினால் அவரது திறமை மிளிரும். பாத்திரங்களை உணர்ந்து, புரிந்து அதற்கேற்ப நடிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமையை வெளிக்கொணர்வது இயக்குனரின் திறமை. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனமும், இயக்குனரின் தோல்வியும் இவையே. அண்மையில் நோர்வேயில் வெளிவந்த 9c Oslo என்னும் எம்மவரின் திரைப்படத்தின் படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர்களை அடையாளம் கண்டதும் அவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்ததுமே ஆகும்.

இன்று மதியம் தென்னிந்தியாவில் பிரபல இயக்குனர் ஒருவரிடம் நடித்துவிட்டு நோர்வே திரும்பியிருக்கும் நண்பர் ஒருவருடன் உரையாடக்கிடைத்தது. நடிப்பது என்பது ஒரு யாகம். அதனை தியானம்போல் உணர்ந்து, விரும்பி, உள்வாங்கி பிரக்ஞையுடன் செய்பாவிடின் உங்களின் நடிப்பு மிளிராது என்றார் அவர். இன்றைய படம் காங்ஸ்டர் படம். ஆனால் காங்ஸ்டர்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் உண்டு. உதாரணமாக அவர்களின் நடை, உடை, பாவனை, மொழி, வாகனங்கள், குரூரம் என்பற்றைக் கூறலாம். இப்படியான ஒரு படத்தை எடுப்பவர்கள் அவற்றை மிக நுட்பமாக அவதானித்து உள்வாங்கி அவற்றை காட்சிகளில், வசனங்களில், நடிப்பில் காட்டாவிடில் காங்ஸ்டரின் நம்பகத்தன்மை இழக்கப்பட்டுவிடும். படத்தின் மிகப்பெரிய பலவீனங்களில் இதுவுமொன்று.

இதுவா எங்கள் சினிமா? தயவுசெய்து இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம்.

மனதிற்பட்டதை அப்படியே எழுதியிருக்கிறேன். மனங்களை நோகப்பண்ணுவது நோக்கமல்ல. எமக்கான சினிமா குண்டுச் சட்டியில் குதிரையோட்டுவதைக் கடந்து தனித்துவமான பாணியில் வளரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

18 thoughts on “இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன்”

 1. இயக்குனனரும் என்னத்தைசெய்ய மண் படம் எடுத்தார் மண்ணாப்போச்சு. பட விளம்பரத்தில பெண்ணின் முன்னழகையும் காட்டி யாவும் வசப்படும் என்று படத்தின்ரை பெயரும் வைத்து லண்டனில் பட்த்தையும் எடுத்தால் இந்தியாவிலும் ஒடும் வெளினாடுகளிலும் வசூலாகும் என்றுநினத்தார் அவரின் ஆசையிலை மண்ணை அள்ளிக்கொட்டலாமா?சமூகநலன் கருதித்தான் இந்த படம் எடுத்ததாக பேட்டி வேறை கொடுத்திருக்கின்றார். அப்படிப்பட்டவ்ர்களை இப்படி திட்டலாமா/

 2. ஒன்டுமே செய்யாம சும்மா எழுதியே காலத்தை ஓட்டிடுங்க……………………….

 3. புலத்திலிருந்து   வரும்  திரைபடங்கள்  எல்லாம்  இப்படித்தான்  இருக்கிறது.  பல  வருடங்கள்  முன்  இங்லாந்திலிருந்து  ராபேட்  என்று  ஒருவர்  அங்கிருந்த  வழக்குரைஞர்  ஒருவருடன்  வந்து  படம் எடுக்க  கதை  சொன்னார்.  எல்லா  டைரக்டரும்  அதை   விரும்ப வில்லை  அவர்கள்  சொன்ன  கதை  நீலக்கதை  போல தான்  இருந்தது. இந்த  படம்  நான்  பார்க்கவில்லை, ஆனால்  புலத்தின்  துயரங்களை  மக்களுக்குச் சொன்னாலே அது  நூறு  நாள்  ஓடும்.

 4. இந்தப் படத்தைப் பார்த்த பெண் ஒருவர் , இந்தப் படத்தை தடை செய்யவேண்டு மென்றார். எப்படித்தான் அந்த நடிகை இப்படியான காட்சிகளுக்குச் சம்மதித்த்ரோ ? நேரம் எவ்வளவு பொன்னானது ..அதை இப்படி மண்ணாக்கலாமா ?

 5. நல்லதொரு கட்டுரை. இவர்களின் கற்பனை வறட்சியால் சமூகத்துக்கு படைப்பு என்ற பெயரில் குப்பை ஒன்று வந்து விழுந்திருக்கிறது. அதோடு மிகப்பெரியதொரு முதலீடு வீணடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு கிடைத்த முதலீடு லெனின் அண்ணாவுக்கோ, சதாபிரணவன் அண்ணாவுக்கோ கிடைத்திருந்தால் எமது திரைத்துறைக்கு பலமானதொரு படைப்பு கிடைத்திருக்கும். தவிர, இதுபோன்ற பெண்கள் பற்றிய வக்கிரமான  கருத்துக்களை வெளிப்படுத்தும் சினிமாக்களை சமூகத்தில் அண்டவிடக்கூடாது. 

 6. அண்ணை சஞ்சீவன் ஒரு விசியம். இந்தப்படம் உங்களுக்கு அதாவது ஈழத் தமிழருக்கு கலை வழர்க்க எடுத்ததாய் எங்காவது புதியவன் சொன்னவரே? அவர் படம் எடுத்தது தென்னிந்தியா சினிமா சந்தையை நோக்கி என்பதை படத்தின் டப்பிங்கிலேயே தெரநிதிருக்கவேண்டும். படம் தொடங்கினவுடனையே இது புரிந்நதிருக்கவேண்டும். அதுக்கு பிறகு பாத்தது உங்கடை பிழை. நடித்த பெண்ணே இது பற்றி குறையொண்டும்’ சொல்லேுலல்லை. கமரா அங்கை எடுக்குது என்டால் பாக்கிற உங்களுக்கு என்ன மதி? பெண்ணின் முகத்தை மட்டும் நீங்கள் பாத்திருக்கலாம் தானே!  வக்கிரம் எடுத்தவனிட்ம் மட்டுமில்லை பாத்தவனிடமும் இருக்கு. அதையும் புரிந்து கொள்ளுங்கள். 

  புதியவன் ஒரு திரைப்படத்தை எடுத்து தென்னிந்தியாவல் கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ஓடியதே ஒரு சாதனை. ஒரு இலங்கை தமிழன் இதை சாதிக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. கோடம்பாக்க அரசியல் தெரிந்தால் இதைப்பற்றி கதைக்க மாட்டீங்கள். கத்திக்கு இப்ப நடக்கும் அரசியல் ராஜபக்ச அரசில் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தென்னிந்திய திரைப்பட முதலைகளின் அரசியல்! நம்ம ஏரியா உள்ளை வராதே அரசியல். நான் புதியவனுக்கு வக்காலத்து வாங்க வில்லை. ஆனால் புதியவன் இந்த திரைப்படத்தை தென்னிந்தியாவல் சந்தை படுத்த எடுத்துள்ளார்.  அதில் வெற்றியும் பெற்றுள்ளாரர். முடிந்தால் புதியவன் ஈழத்தமிழரை நோக்கி அவர்கள் மொழியிலே எடுத்த மாற்று படத்தையும் கனவுகள் நிஜமானால் படத்தையும் பாரக்கவும். மலையக தமிர்களின்  அவலங்களின் மண்ணையும் பார்க்கவும். 

  1. அடப்பாவமே இப்படியும் ஒரு விளக்கமா? கே.பி ஈழத் தமிழராக இருந்து இலங்கை அரசில் முக்கியத்தர் ஆகி சாதனை படைத்தார் என்று இனி சொன்னாலும் சொல்வார்கள் போல. சரி விடுங்கள். கத்தி இந்தியாவில் எதிர்க்கப்படவில்லை. சில ஆளில்லா மாணவர் அமைப்புக்கள் கத்தி ஓய்ந்தன. அவ்வளவே, இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர சங்கம் சரத்குமார், சத்தியராஜ் கமல், சீமான் உப்ட எல்லோரும் கத்திக்கு ஆதரவே. அது சரி கத்தி, யாவும்வ்சப்படும் போன்ற படங்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன. நீலப் படத்தை எடுத்து  30 தியட்டர்களில் ஓடி சாதனை படைத்த ஈழத் தமிழன் அடுத்ததாக இன்னொரு நீலப்படத்தை எடுத்து இந்தியா முழுவதும் ஓட்டி ஓட்டிச் சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

 7. வணக்கம் sivan!

  இப்படி மொட்டையாக பேசாமல், நான் கூறியவற்றில் எது பிழை எது சரி எனறு உரையாற்றுவதே சமூகத்துக்கு பிரயோசனமாக இருக்கும்.

  உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

 8. சஞ்சையானந்தா நீ இனிப் படம் பார்க்கும் போது கழுத்தை உயர்த்தி, கடை கண்ணால் மட்டுமே பார். இப்படிப் பார்த்தல் நீ எப்பேர்ப்பட்ட பலான படங்களையும் சாமிப் படம்போல பார்த்து முடிக்கலாம், தப்பித் தவறி கீழே பார்த்து மானத்தை வாங்கி விடாதே! 

 9. வெளினாடுகளில் ஏதோ குறூப் சண்டித்தனங்கள் இருந்தது உண்மைதான்.இப்போதுமுன்னரைப்போலமோசமா இல்லை. ஆனால் புதியவன் இந்த பிற்ஸ் மீற்ற்ங் யூ ரியூப்பில் சொன்னது போல பெண்கடத்தல் இடம் பெற்றதாக கேள்விப்படவில்லை. இந்த பட விமர்சனம் தூங்கியிருந்த புலியை தட்டி எழுப்புவதாகவே உள்ளது .அதாவது மேலும் ஐடியாக்களை புலம் பெயர்ந்த ரவுடிகளுக்கு கொடுத்து ஊக்கிவிப்பதாகவே இருக்கின்றது.. இந்த இணப்பை பாருங்கள் http://www.youtube.com/watch?annotation_id=annotation_2398537481&feature=iv&src_vid=REHxnUuJb6U&v=zaD7OANFcqg

 10. Hi Mr.sanjayan

  I understand three things about you. 
  1, you have no knowledge about cinema because your comments are not correct.  
  2, you have no intention to promote the Tamil artist and their hard work.
  3, Until today our cinema is 30 years behind and the reason why we could not stand on cinema filed because of people like you giving completely wrong information without a good knowledge in cinema. 

  First learn what is cinema and how to comments and what is wrong with the film.what a director try tell in the story. then write comments .All our Tamil directors and film artist are doing good .

  First of all you should learn to  give respect to all ourTamil film artist . Well wisher of Tamil cinema . K.Navaratnam

  1. நவா அண்ணா முதல்லை தமிழிலை உங்க கருத்தை பதியுஙகள் காரணம் கூறவேண்டாம். கடின உளைப்பு எதற்க்கு?சுயனலத்திற்க்கா அல்லது சமூகநல்த்த்ற்க்கா? முப்பது வருடம் பின்தங்கியுள்ளது .இலஙகையில் தமிழர் பகுதியில் மட்டுமே.புலம் பெயர்ந்து மேலைநாடுகளில் வாழுபவர்கள் அல்ல.அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மேலைநாடுகளில் சட்டம் ஒழுங்கு இந்தியா,இலங்கையைவிடவும் நன்றாகவே உள்ளது.மேலைநாட்டிலுள்ளவர் பிரச்சனைய இந்தியா,இலஙகையில் திரையிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

   1. மேலைநாட்டு பிரச்சனைகளை வைத்து எடுத்த ஆங்கிலப்படங்கள் பல இலங்கையிலும் இந்தியாவிலும் சக்கை போடு போட்டனவே ? எப்படி ?

    1. மேலைநாட்டுப் பிரச்சனை என்று நான் குறிப்பிட்டது இலங்கைத் தமிழர்களை .நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதனால் சில வேளைகளில் புலம் பெயர்ந்து மேலைநாடுகளில் வசிக்கும் தமிழ்ர்களை பற்றி ஆங்கிலத்தில் எடுத்த ஏதாவது படம் இலஙைகையிலும்,இந்தியாவிலும் சக்கை போட்டிருந்தால் எனக்கு தெரிய வாய்ப்பில்லைத்தான்.

     1. உலக மயமாக்கலின் பின்னர் மேலைநாடுகளில் உள்ள கலை கலாசாரங்கள் மட்டுமல்ல   , பிர்ச்சனைகளும் கீழைநாடுகளுக்கு குறிப்பாக இலங்கை , இந்தியா போன்றநாடுகளுக்கும் பரவி விட்டன . அதுவும் பத்து லடசத்திற்கு மேற்பட்ட சனத்தொகையினர் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையில் அதுவும் தமிழ் தமிழ் சமூகத்தில் இதன் தக்கம் இன்னமும் அதிகம் என்பதை கணக்கில் எடுக்காமல் கருத்து சொல்லப்பட்டுள்ளது.

 11. வணக்கம் யூட்!

  நீங்கள் சொல்வதுபோன்று இது ஈழத்தவர்களுக்கான திரைப்படம் என்று கருதாமல் தென்னிந்தியர்களுக்கான ஒருதிரைப்படம் என்னும் ரீதில் இப்படத்தை நோக்கினாலும் எனது கருத்துக்களில் மாற்றமில்லை.

  நடிகை அக்காட்சிகளைப் பற்றி விசனம் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். அது பற்றியும் நான் பேசவில்லை. பார்வையாளர்களுக்கு அக்காட்சிகள் மிகவும் அசௌகரீயமான, அந்தரமான இருந்தன. இப் படத்தை பார்த்தபின் நான் உரையாடிய பலரும் இதையே கூறினார்கள். என் கண்ணில் பிழை, என்னில் வக்கிரம் உண்டு என்று உண்மையை திசைதிருப்பாதீர்கள்.

  திரைப்படத்தில் உள்ள நடிப்பைப் பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே?

  தமிழ்நாட்டில் 30 தியட்டர்களில் படம் ஓடுவது பெருமை அல்ல. தரமானதொரு திரைப்படத்தைஉருவாக்குவதே பெருமை.

 12. பானையில் இருப்பதுதான் அகப்பையில் வருமாம்.

 13. இந்த இணையத்தில் வந்த “அப்பாவிகளை கொடுமைப்படுத்தி கொலைகள் செய்யும் சிறப்பு முகாம்” என்ற செய்தியைப்படியுஙகள் சமூநலன் இருந்தால் அத்துடன் “தில்” லுமிருந்தால் தமிழ்னாட்டில் இலங்கை அகதிகள் படும் இன்னல்களை படமாக்கி தென்னிந்தியாவில் திரையிடுஙகள் . சிலநேரங்களில் ஏதாவது திருப்பங்கள் ஏற்படும்.

Comments are closed.